மகாவம்சம்

இலங்கையின் பழமையான தொகுப்பு நூல்0

மகாவம்சம்

   

முற்கால வரலாறு

  தாதகாதா பயணம்
மகாசம்மத்தா இனம்
முதலாம் ஒன்றுகூடல்
இரண்டாம் ஒன்றுகூடல்
மூன்றாம் ஒன்றுகூடல்
 

விஜயன்

  விஜயனின் வருகை
ஆரியர் | சிங்களவர்
விஜயனின் ஆட்சி
பண்டுவாசுதேவன்
அபயன்
பண்டுகாபயன்
 

பௌத்தம் அறிமுகம்

  தேவநம்பியதீசன்
மதமாற்றம்
மகிந்த தேராவின் வருகை
தலைநகர் நுழைவு
மகாவிகாரை ஏற்பு
செட்டியபப்பத்தா விகாரை ஏற்பு
தாதுசின்னம் வருகை
வெள்ளரசு மரம்
தேரர் கல்லறை
ஐந்து அரசர்கள்
துட்டகாமினி பிறப்பு
போர் வீரர்கள்
சகோதர்களிடையேப் போர்
துட்டகாமினியின் வெற்றி
மாரிக்காவட்டி விகாரை
 

தொடர்புடையவை

  பழங்குடி மக்கள்
வேடர்கள்
தொல்பொருள் சான்றுகள்
கல்வெட்டுக்கள்
இலங்கை தமிழர் வரலாறு
 

மகாவம்சம் (Mahawamsa அல்லது Mahawansa) (பாளி மொழி: மஹாவம்ச அல்லது மஹாவங்ச) சுருக்கமாக. Mhv.[1] அல்லது Mhvs.[2] என்பது இலங்கை வரலாற்று தகவல்களை உள்ளடக்கி, அதேவேளை பௌத்த மதத்தை முதன்மைப் படுத்தி பௌத்த பிக்குகளினால் பாளி மொழியில் ஏட்டுச்சுவடிகளில் செய்யுள் வடிவில் காலவரிசையாக குறித்து வைப்பட்டவற்றை மூலமாகக்கொண்டு, தொகுக்கப்பட்ட இலங்கையின் பழமையான தொகுப்பு நூலாகும். இது இதற்கு முந்திய தொகுப்பு நூலான தீபவம்சம் எனும் நூலை தழுவி தொகுக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த நூல் பொ.ஊ. 6ம் நூற்றாண்டளவில், பாளி மொழியில், மகாநாம தேரர் எனும் பௌத்த பிக்குவினால் தொகுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதனடிப்படையில் மகாவம்சம் நூலின் உரிமையாளர் மகாநாம தேரர் ஆகும். இதனை இலங்கையின் வரலாற்று ஆவணமாக சிங்கள பௌத்த பெரும்பாண்மை மக்கள் கூறிவந்தாலும், முழுமையான ஒரு வரலாற்று ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனும் கருத்து வரலாற்றாசிரியர்களிடையே உள்ளன. அதேவேளை இலங்கையில் வரலாற்று குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றிருப்பதனால், மகாவம்சம் நூலைத் தவிர்த்துவிட்டு இலங்கையில் வரலாற்றை ஆய்வுசெய்ய முடியாது எனும் கருத்தும் வரலாற்றாசிரியர்களிடையே உள்ளன.

இந்த நூல் மகத நாட்டில் உருவெல எனும் இடத்தில் அரச மரத்தடியில் கௌதம புத்தர் அமர்ந்திருந்த வேலை; "பௌத்தம் வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை என்றும், இலங்கையின் பூர்வக் குடிமக்களான இயக்கர்களை அங்கிருந்து அகற்றி, இலங்கையில் பௌத்த மதத்தை தோற்றுவித்து புனிதப்படுத்த வேண்டும் என்றும் எண்ணம் புத்தருக்கு புலனாகுகிறது" எனும் பௌத்த கற்பனைக் கருத்துருவாக்கத்தில் இருந்து தொடங்குகிறது. இப்படியான கற்பனை கருத்துருவாக்கங்கள் மகாவம்சத்தில் நிறையவே உள்ளன. இவ்வாறான கருத்துருவாக்கங்களே இலங்கை தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனும் எண்ணக்கரு சிங்கள மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து போயுள்ளமைக்கான காரணமாகவும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான ஆணிவேராகவும் பார்க்கப்படுகின்றது. அத்துடன் பொ.ஊ.மு. 543ம் ஆண்டு இந்தியாவில் இருந்து விஜயன் எனும் ஒரு இளவரசன் வந்தான் என்பது முதல், பொ.ஊ. 361ம் ஆண்டு மகாசேனனின் என்பவன் ஆட்சி செய்தான் என்பது வரை இலங்கையின் வரலாற்று குறிப்புகளையும் காலவரிசையாக மகாவம்சம் விவரிக்கின்றது.

மகாநாம தேரரால் பாளி மொழியில் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலினை மூலமாகக் கொண்டு, ஆங்கில மொழியில் 1837ம் ஆண்டு முதல் அச்சுப் பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த அச்சுப்பதிப்பு இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தகாலத்தில் இருந்த, சிலோன் சமூக பணியகம் எனும் பணியகத்தில் பணிப்புரிந்த பணியாளரும் வரலாற்றாசிரியரும் ஆன ஜோர்ஜ் டேனர் என்பவர் வெளியிடப்பட்டார். அதன்பின்னர் 1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் என்பவர், மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்ப்பு ஒன்றை செய்தார்.[3] அதேவேளை வில்ஹெய்ம் கெய்கர் அதற்கு முன்னதாகவே பாளி மூலத்தில் இருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிப்பெயர்ப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு

தொகு

பொ.ஊ.மு. 247–207 வரை இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்தான். அவனது ஆட்சி காலத்திலேயே பௌத்தம் இலங்கையில் அறிமுகமானது. அவனால் பௌத்த பிக்குகளுக்காக ஒரு மகாவிகாரை நிறுவப்பட்டது. அந்த மகாவிகாரையில் இருந்த பௌத்த பிக்குகளும் ஏனைய விகாரைகளில் இருந்த பிக்குகளும்; பௌத்தத்தின் தோற்றம், இலங்கையில் பௌத்தத்தின் வளர்ச்சி, பௌத்ததிற்கு ஆதரவளித்த அரசர்கள், மற்றும் அவர்கள் பௌத்த மதத்திற்கு ஆற்றிய பணிகள் போன்ற தகவல்களை காலவரிசையாக செய்யுள் வடிவில் ஏட்டுச்சுவடிகளில் குறித்தும், அவற்றை வாய்மொழியாக பேணியும் வந்துள்ளனர். அவற்றையே அட்டகத்தா என்றழைக்கப்பட்டது. பின்னர் இவ்வாறு பல்வேறு விகாரைகளில் இருந்த ஏட்டுச்சுவடிகளை (அட்டகத்தாக்களை) மகாவிகாரையில் இருந்த பௌத்தப்பிக்குகள் ஒருங்கிணைத்து அதனை அட்டகத்தா மகாவம்சம் என அழைக்கலாயினர். இந்த அட்டகத்தா மகாவம்சத்தை மூலமாகக் கொண்டே பொ.ஊ. 4ம் நூற்றாண்டளவில் தீபவம்சமும், பொ.ஊ. 6ம் நூற்றாண்டளவில் மகாவம்சமும் தொகுக்கப்பட்டுள்ளன.

தீபவம்சம்

தொகு

மகாவம்சம் அட்டகத்தாக்களை மூலமாகக்கொண்டு ஒருங்கிணைத்தே தீபவம்சம் 4ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டுள்ளது என்றாலும், அதன் காலம் குறித்து அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் தீபவம்சம், அது 4ம் நூற்றாண்டளவில் முற்றுப்பெற்றிருக்க வேண்டும் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த தீபவம்சம் யாரால் தொகுக்கப்பட்டது எனும் தகவல்கள் இல்லை. அதனால் அதன் ஆசிரியர் யார் என்றும் கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் இந்த தீபவம்சத்தை மூலமாகக் கொண்டே மகாவம்சம் உருவாகியுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். தீபவம்சத்தில் 37 பகுதிகள் இருப்பது போன்றே, மகாவம்சமும் 37 பகுதிகளைக் கொண்டுள்ளன. அதேவேளை மகாவம்சத்தில் காணப்படும் "விஜயனின் வருகையுடன் தொடர்புடைய குவேனி பாத்திரம்" தீபவம்சத்தில் இல்லை என்பதை கலாநிதி க. குணராசா தனது மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மகாநாம தேரரின் மகாவம்சம்

தொகு

இந்த தீபவம்சத்தை தழுவியே மகாநாம தேரர் எனும் பௌத்த பிக்குவினால் மகாவம்சம் தொகுக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். அதேவேளை மகாவம்சம் நூல் தீபவம்சம் நூலையும் விட எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் காலவரிசைப்படி செய்யுள்களாக தொகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மகாவம்சம் 6ம் நூற்றாண்டளவில் தொகுக்கப்பட்டதாக கருதப்படுகின்றது.

ஆங்கில மொழிப்பெயர்ப்பு

தொகு

இதனையே வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிப்பெயக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டதாகும்.

பௌத்தம் போற்றல்

தொகு

மகாவம்சம் நூலை வரலாற்று நூலாக ஏற்க முடியாமைக்கான காரணங்களை பல மேற்கத்தைய, சிங்கள, தமிழ் வரலாற்றாசிரியர்கள் முன்வைத்துள்ளனர். அத்துடன் மகாவம்சம் நூலை தொகுத்தவரான மகாநாம தேரர் எந்தவொரு இடத்திலும் தன்னை வரலாற்று ஒரு ஆசிரியராகக் குறிப்பிடவில்லை என்றும் அவர் ஒரு பௌத்தப் பிக்குவாக பௌத்த மதத்தை ஆதரிக்கும் நோக்குடனேயே தொகுத்துள்ளாகவும் கூறப்படுகின்றது.[4]

விஜயனின் வருகை

தொகு

விஜயன் எனும் ஒருவரின் வருகைத் தொடர்பான சான்றுகளோ, அப்படி ஒருவன் இலங்கையை ஆட்சி செய்தமைக்கான எவ்வித ஆதாரங்களோ எங்கும் இல்லை. அதேவேளை இலங்கையின் முதல் அரசனாக சித்தரிக்கும் அதே மகாவம்ச தொகுப்பு நூலில், விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் அரசமைத்து இயக்கர் நாக இனத்தவர்கள் (அரவர்கள்~தமிழர்கள்) வாழ்ந்ததான குறிப்புகள், இலங்கையின் முதல் அரசன் விஜயன் எனும் கூற்றை நம்பகமற்றதாக செய்கின்றது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்[சான்று தேவை].

மகாவிகாரைச் சார்ந்த பௌத்தபிக்குகள் பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் நிகழும் வரலாற்றுச் சம்பவங்களை தினக்குறிப்பேடு போன்று எழுதி பராமரித்து வந்தனர்.இவ் ஏடே பொ.ஊ. 5ம் நூற்றாண்டில் 'மகானாம' எனும் பௌத்தபிக்குவால் ஒன்றுபடுத்தி தொகுத்து மகாவம்சம் எனும் நூலாக வெளிப்பெற்றது. இவர் இலங்கை அரசன் தாதுசேனனின் சகோதரராவார். இவருடைய காலத்துக்கு ஐந்து நூற்றாண்டுகள் முந்திய வரலாற்று நூலான தீபவம்சத்தை சார்ந்தே நூலை தொகுத்துள்ளார். இந் நூல் முழுமையாக பௌத்தமத கண்ணோட்டத்திலே இலங்கையின் வரலாற்றை கூறிச்செல்கின்றது.

மகாவம்சத்தின் தொடர்ச்சியாக பல பௌத்தபிக்குகளால் எழுதப்பட்ட சூள வம்சம் எனும் நூல் பொ.ஊ. 4ம் நூற்றாண்டு முதல் பிரித்தானியர் முழு இலங்கையை கைப்பற்றிய ஆண்டான 1815 வரை நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களை விபரிக்கின்றது.

மகாவம்சம் ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Malalasekera, Dictionary of Pali Proper Names: Pali-English, p. xvi, retrieved Sept. 19, 2010, from "Google Books" at http://books.google.com/books?id=LEn9i9pnRHEC&pg=PR16&lpg=PR16&dq=Mhv+%2BMahavamsa&source=bl&ots=5Yuh9FVCCy&sig=D-jBgZuXw8chZovrlwBfXtywCdY&hl=en&ei=FUGWTN-uG8Pflgfb1aCkCg&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CBcQ6AEwAA#v=onepage&q=Mhv%20%2BMahavamsa&f=false .
  2. Rhys Davids & Stede (1921–25), Pali Text Society's Pali English Dictionary, "B. List of Abbreviations," retrieved Sept. 19, 2010, from "U. Chicago" at http://dsal.uchicago.edu/dictionaries/pali/frontmatter/abbreviations.html .
  3. Mahavamsa. Ceylon Government. 1912.
  4. http://www.youtube.com/watch?v=K2F_YqAqqtw&feature=related

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாவம்சம்&oldid=3998573" இலிருந்து மீள்விக்கப்பட்டது