இயக்கர்

தொல்தமிழ்ப் பழங்குடி

இயக்கர்கள் (Yaksha), (சமக்கிருதம்: यक्ष [1] உருவமற்ற, மனிதரல்லாதவர்கள் என்று கருதப்பட்டனர். இயற்கை வணக்கத்தைக் கொண்டவர்கள் இயக்கர்கள். பண்டைய சமஸ்கிருத நூல்கள், இவர்களை ஆரியரின் எதிரிகளாகக் குறிப்பிடுகின்றன. ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்னர் இயக்கர்கள் இந்தியாவில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கை வரலாற்று நூல்களும் இவர்களை அத்தீவின் பழங்குடிகளுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன.

டோக்கியோ தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள 3ஆம் நூற்றாண்டின் இந்திய இயக்கர்

இலங்கையின் முதல் வரலாற்று நூலான மகாவம்சம், இயக்கர்கள் இலங்கையின் பல இடங்களில் நகரங்கள் அமைத்து அரசாண்டு வந்ததாக குறிப்பிடுகின்றது. இந்த நூலின்படி சிங்கள இனத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் எனப்படும் கலிங்க இளவரசன் இலங்கையில் இறங்கி இயக்க இளவரசியான குவேனியை மணம் செய்து கொண்டான். அவனுடன் வந்த 700 நண்பர்களும் இயக்கப் பெண்களையே மணந்து கொண்டனர்.

முற்காலத்தில் இலங்கைக்கு வந்த நாடு காண் பயணிகள் பலரும் இயக்கர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். இப்போது இலங்கையில் சிறு தொகையினராகக் காணப்படும் வேடுவர் (வேடர்) இவர்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகின்றார்கள்.

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.britannica.com/EBchecked/topic/651312/ yaksha

உசாத்துணை

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இயக்கர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்கர்&oldid=3960984" இலிருந்து மீள்விக்கப்பட்டது