பர்குட் தூண்கள் (Bharhut) (இந்தி: भरहुत) இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில், பர்குட் கிராமத்தில் உள்ளது. கி மு 200 - 300களில் பௌத்தக் கட்டிடக் கலையில் நிறுவப்பட்ட தூபிகளும், தோரணங்களும், நுழைவு வாயில்களும், சிற்பங்களும், கல்வெட்டுகளும் உள்ளது. இந்தியாவில் காணப்படும் துமிளிகளில் மிகப்பெரிய நூக்கிணைப்பு வேலைபாடுகள் கொண்டுள்ளது. நூக்கிணைப்புகளிலும், தூண்களிலும், தோரண வாயில்களிலும், காணப்படும் சிற்பங்கள் பௌத்த சமய கதைகளையும், தத்துவங்களையும் விளக்குவதாக அமைந்துள்ளது. தோரணவாயில்களில் அமைந்துள்ள தூண் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான சிற்ப அணி செதுக்கப்பட்டுள்ளது. பர்குத் துமிளியில் புத்தரின் பிறப்பியல் கதைகளை விளக்கும் சிற்பங்களில் ‘அஜாத சத்துரு’, பிரசேன சித்து’ போன்ற மன்னர்கள் புத்தரை வணங்கும் காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர யட்சர்கள், யட்சினிகள், தேவதைகள் மற்றும் நாகர்களின் உருவச்சிலைகள் காணப்படுகின்றன. தோரணவாயில்களில் குபேரன், தேவர்கள் ஆகியோரின் உருவச்சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. பொதுவாக பர்குத் சிற்பங்களில் அவற்றை உருவாக்கிய கலைஞர்கள் உருவங்களைப் படைப்பதில் அதிக ஆர்வம் காட்டினர் என்பது தெளிவாகிறது.

பர்குட் தூண்கள்
பர்குட் is located in மத்தியப் பிரதேசம்
பர்குட்
Shown within India Madhya Pradesh
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்24°10′N 80°31′E / 24.16°N 80.51°E / 24.16; 80.51
சமயம்பௌத்தம்
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சத்னா
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டுகி மு 200-300
நிலைதூண்களின் அஸ்திவாரம் மட்டும் உள்ளது.
அசோகரின் பர்குட் சிங்கத் தூபி, சத்னா மாவட்டம், மத்தியப் பிரதேசம்

வரலாறு தொகு

பர்குட் தூபிகள் முதலில் மௌரியப் பேரரசர் அசோகரால் கி மு மூன்றாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. பின்னர் கி மு இரண்டாம் நூற்றாண்டில் சுங்கப் பேரரசின் காலத்தில், தூபிகள் உள்ள இடத்தில் செந்நிற மணற்கல்லால் ஆன நுழை வாயில்கள், வளைவுகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது.[1] தூண்களுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு கல் வெட்டில், சுங்கப் பேரரசர் வத்சிபுத்திர தனபூதி ஆட்சிக் காலத்தில் இவைகள் நிறுவப்பட்டது எனக் குறிக்கப்பட்டுள்ளது.[2]

1873இல் அலெக்சாண்டர் கன்னிங்காம் என்ற ஆங்கிலேய தொல்லியலாளரால், பர்குட் கிராமம் அகழ்வாராய்ச்சி செய்பட்டது.[3]

அகழ்வாராய்ச்சியின் போது பர்குட் வளாகத்தில் புத்தர், பிரம்மன் மற்றும் இந்திரன் ஆகியவர்களின் உருவங்கள் பொறித்த மத்திய காலத்தைச் சேர்ந்த தட்டுகள் முதலியன கிடைத்துள்ளது.[4] மேலும் கி பி பத்தாம் நூற்றாண்டின் பௌத்த சமஸ்கிருத கல்வெட்டுகளும் கிடைத்துள்ளது.[5]

பாழடைந்த தூபிகளின் அஸ்திவார அமைப்புகள் மட்டும் தற்போது காணப்படுகிறது. சிதலமடைந்த நுழைவு வாயில்கள் மற்றும் தோரணங்கள் ஒன்று சேர்த்து தற்போது கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.[2] புத்த ஜாதக கதைகள், புத்தரின் அவதாரங்கள், புத்தரின் சீடரான அனாதபிண்டிகன், யட்சன், யட்சினி உருவம் பொறித்த சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளது. .[6]

படக்காட்சியகம் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bharhut
என்பதின் ஊடகங்கள் உள்ளன."https://ta.wikipedia.org/w/index.php?title=பர்குட்&oldid=3580722" இருந்து மீள்விக்கப்பட்டது