யட்சினி அல்லது யட்சி (Yakshini) (சமக்கிருதம்: याक्षिणि என்பவர்கள் யட்சர்களில் பெண் பாலினத்தவர்கள் ஆவர். யட்சினிகள் மனிதர்களை விட உயர்சக்தி கொண்டவர்களாகவும், தேவர்களை விட குறைந்த சக்தி படைத்தவர்களாகவும், பண்டைய இந்து சமய புராணங்கள் கூறுகிறது. மேலும் பௌத்தம், சமண சமய நூல்களும் யட்சினைகளைப் பற்றிக் கூறுகிறது. யட்சர்களும், யட்சினிகளும் பூமிக்கடியில் உள்ள குபேரனின் அனைத்துச் செல்வங்களைக் காக்கும் அழகு மிக்க பெண்கள் எனக் கருதப்படுகிறது.

தீதார்கஞ்ச் யட்சினி, மணற்கல் சிற்பம், பாட்னா அருங்காட்சியகம்
தீதார்கஞ்ச் யட்சினி, மணற்கல் சிற்பம், பாட்னா அருங்காட்சியகம்

அழகும், காமமும் நிரம்பிய யட்சினிகளை, சிறுத்த இடை, பரந்த தோள்ககள், பெருத்த மார்புகளுடன் மிக அழகுடையவர்களாக காட்சிப்படுத்தப்படுகிறது. உத்தமரேஷ்வர தந்திர நூலில் 36 வகையான யட்சினிகளையும், அவர்களுக்குரிய மந்திரங்களையும், சடங்குகளையும், படையல்களையும் விளக்குகிறது.

புராணங்களில் யட்சர்களைப் போன்று யட்சினிகள் இரக்க குணம் மிக்கவர்களாக கூறியிருந்தாலும், சில இடங்களில் தீய குணம் படைத்தவர்க்ளாகவும் சித்தரிக்கிறது. [1]

36 யட்சினிகள்

தொகு
 
கி மு 2-1ஆம் நூற்றாண்டின் சுங்கப் பேரரசு காலத்திய அசோக மரத்தடி யட்சினி
 
இந்திய ரிசர்வ் வங்கி, தில்லி, நுழைவாயிலில் வேளாண் செல்வத்தை வாரி வழங்கும் யட்சினியின் உருவச்சிலை[2]
 
யட்சினி, பத்தாம் நூற்றாண்டு, அரசு அருங்காட்சியகம், மதுரா
 
யட்சினி, பர்குட், மத்தியப் பிரதேசம், இந்தியா

உத்தமேஷ்வர தாந்ரீக நூலில் கூறியுள்ள 36 யட்சினிகளையும், அவர்களின் குணங்களையும், அவர்களை துதித்தால் கிடைக்கும் நன்மைகளையும், சுகங்களையும், சக்திகளையும் விவரிக்கிறது.[1]

  1. ஹம்சினி  : அன்னத்துடன் கூடிய இவள், பூமிக்கடியில் உள்ள புதையல்கள் மற்றும் ஒரு வித மையினால் கல் போன்ற சடப்பொருளையும் ஊருவி பார்க்கும் அருள் தருபவள்.
  2. பிசாசினி  : (கொடூரமானவள்): முச்சந்தி கூடுமிடத்தில், இவளுக்குரிய மந்திரத்தை 10,000 முறை தொடர்ந்து ஜெபித்து, பச்சை கற்பூரம் மற்றும் நெய் படையலிட வேண்டும்.
  3. ஜனரஞ்சிகா : ஆண்களை மகிழ்வூட்டும் இவள் நல்ல வருங்காலத்தையும், மகிழ்ச்சியையும் தருபவள்
  4. விசாலா : பெரிய கண்களைக் கொண்ட இவள் ரசவாத அமுதத்தை வழங்குபவள்
  5. மதனா  : காம ரூபம் கொண்ட இவள் தரும் குளிகை அனைத்து நோய்களுக்கும் மருந்தாகும்.
  6. காந்தா : உலகத்தவரை மதிமயக்கும் திறன் அளிப்பவள்
  7. காலகர்ணி  : காதுகளில் எமதூதர்களை அணிந்தவள்
  8. மகாபயா : அதிபயங்கரமான இவள் தரும் ரசவாத மருந்தால் பயம், நரை மற்றும் மூப்பிலிருந்து விடுபடலாம்.
  9. மகேந்திரி: மகாசக்தி பொருந்திய இவள், வானில் பறக்கும் சக்தி அளிக்கிறாள்
  10. சங்கினி : சங்கு போன்றவளான இவள், அனைத்து ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறாள்.
  11. சந்திரி : நிலாவைப் போன்றவள்
  12. மசானா :மயான பூமியில் வாழும் இவள், செல்வத்தை வழங்குபவள், தடைகளை தகர்ப்பவள், கடைக்கண் பார்வையால் மனிதர்கள் நடமாட இயலாதபடி செயலிக்க வைப்பவள்.
  13. வத்யாட்சினி : மந்திர குளிகை அளிப்பவள்
  14. மேகலா : சுற்றிச் சுற்றி காதலிப்பவள்
  15. விகலா  : விருப்பமான பழங்களை வழங்குபவள்
  16. லட்சிமி : இரகசிய இரசவாதம் மற்றும் தெய்வீக செல்வங்களை வழங்குபவள்.
  17. மாலினி : மலர்களை விரும்பும் இவள் எவ்வித ஆயுதங்களின் செயற்பாட்டை தடுத்து நிறுத்துபவள்.
  18. சதபத்திரிகா : நூறு விதமான மலர்களை அணிந்தவள்.
  19. சுலோச்சனா : காதல் பார்வை கொண்ட இவள், காற்றில் வேகமாக பறக்கும் ஆற்றலைத் தருபவள்.
  20. சோபா : முழு மகிழ்வும், அழகும் வழங்குபவள்
  21. கபாலினி  : மண்டையோட்டுடன் கூடிய இவள், தூக்கத்தில் வானில் எங்கும் செல்லும் ஆற்றலைத் தருபவள்.
  22. வரயாட்சினி : வரங்களை தருபவள்
  23. நடி : இவள் மறைந்திருக்கும் புதையல், இரசவாத குளிகை மற்றும் மந்திர யோகத்தை அருள்பவள்
  24. காமேஸ்வரி :
  25. ஏற்கனவே சொல்லப்பட்டதே
  26. -------------do--------------------
  27. மனோரமா : கவர்ச்சிகரமானவள்
  28. பிரமோதா  : நறுமண வாசனையுடையவள்
  29. அனுராகினி : எளிதில் உணர்ச்சி வசபடக்கூடியவள்
  30. நாகேசி
  31. பாமினி
  32. பத்மினி
  33. சுவர்ணாவதி : அஞ்சனா சித்தியை அருளுபவள்
  34. ரதிப்பிரியா : மிக அன்புடன் கூடியவள்

யட்சினி சிலைகள்

தொகு

பர்குட், சாஞ்சி மற்றும் மதுராவில் அகழ்வாராய்ச்சிகளின் போது தூண்களில் வரிசையாக அமைந்த யட்சினி சிலைகள் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டது.[3]

சமணத்தில் யட்சினிகள்

தொகு
 
எல்லோராவின் 34வது சமணர் குகையில் அம்பிகை சிலை

சமண சமய சாத்திரங்கள் 24 யட்சினிகள் குறித்து பேசுகிறது. இந்த யட்சினிகள் சமணர் கோயில்களில் காணப்படுகிறது.[4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Magee, Mike (2006). "Yakshinis and Chetakas". Shiva Shakti Mandalam. Archived from the original on ஏப்ரல் 9, 2009. பார்க்கப்பட்ட நாள் March 2, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Anecdote 3: Of Art, Central Banks, and Philistines". Reserve Bank of India. பார்க்கப்பட்ட நாள் March 2, 2016.
  3. Zimmer, Heinrich Robert (1972). Campbell, Joseph (ed.). Myths and Symbols in Indian Art and Civilization. Delhi: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0751-0.
  4. Vasanthan, Aruna. "Jina Sasana Devatas". Tamil Jain. Archived from the original on அக்டோபர் 27, 2009. பார்க்கப்பட்ட நாள் March 2, 2016.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Yaksha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யட்சினி&oldid=4057547" இலிருந்து மீள்விக்கப்பட்டது