பண்டுகாபயன்
பண்டுகாபயன் (கி.மு. 437-367) இலங்கையின் முதலாவதாகக் கருதப்படும் அரச மரபின் நான்காவது அரசனாவான். இவன் இம்மரபின் இரண்டாவது அரசனான பண்டுவாசுதேவனின் மகள் வழிப் பேரனும், மூன்றாவது அரசனான அபய மற்றும் அவனைப் பதவியிலிருந்து இறக்கிய பின் பகர ஆளுனராக இருந்த திஸ்ஸ ஆகியோரின் மருமகனும் ஆவான்.
பண்டுகாபயன் | |
---|---|
உபதிஸ்ஸ நுவரவின் அரசன் அனுராதபுர அரசன் | |
ஆட்சி | கி.மு. 437 – கி.மு. 367 |
முன்னிருந்தவர் | உபதிச்சன் |
மூத்தசிவன் | |
அரசி | சுவர்ணபாலி[1] |
மரபு | விசய வம்சம் |
தந்தை | தீககாமினி |
தாய் | இளவரசி சித்ரா |
பிறப்பு | கி.மு. 474[2] |
இறப்பு | கி.மு. 367 |
"பண்டு காபய" என்று மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் இம்மன்னன் சிங்கள மன்னனாக மகாவம்சத்தில் சொல்லப்பட்டாலும், இவனது பெயர் "பண்டு கபாயன்" (பண்டு என்றால் "பழைய" ,கபாயன் என்றால் "சிவன்") என்றும் இது இந்துக்களின் பழம்பெரும் தெய்வமான "முந்துசிவன்" என்ற பெயரை ஒத்து உள்ளது என்றும், இதன்மூலம் இவன் ஒரு தமிழ் மன்னன் என்றும் வாதிடப்படுகிறது. இதே வாதம் இவனது பாட்டனான பண்டுவாசுதேவன் என்பவனுக்கும் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.[3]
இயக்கர்களுடன் ஆதரவு[4]
தொகுஇவனது பாட்டனான பண்டுவாசுதேவன் இறந்த பிறகு அவனுடைய மகனான அபயன் வட இலங்கைக்கு அரசனானான். பண்டுவாசனுடைய பத்துமகன்களையும் (அபயனையும் சேர்த்து) அவர்களது சகோதரியான சித்தா என்பவனின் மகனான பண்டுகாபயன் கொலை செய்வான் என்று நிமித்தர்கள் கூறியதால் அந்த பதின்மரும் பண்டுகாயனை கொல்ல முயன்றனர். அவன் இவர்களிடம் அகப்படாமல் மகாவலி கங்கையின் தெற்கு பகுதியில் மறைந்து கொண்டான். பிற்பாடு சேதியா என்னும் இயக்கர் குலப்பெண்ணின் உதவியோடு வட இலங்கையை கைப்பற்றினான். அனுராதபுரத்தின் காவல் தெய்வங்களாக சித்தராசன் என்னும் இயக்கர்களின் தெய்வத்தை நிறுவியதும் அல்லாமல் தனக்கு உதவிய சேதியாவுக்கும் கோயில் எடுத்தான். இயக்கர்களில் ஒருவனான காளவேள என்பவனை கிழக்குப் பகுதிக்கு அமைச்சனாக நியமித்தான். இவனின் ஆட்சியில் இயக்கர்களுக்கென தனி விழாக்கள் எடுத்தும் அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தில் இடமளித்தும் அவர்களை நண்பர்களாக கொண்டும் அரசாண்டதாக தெரிகிறது.[3]
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ "King Mutasiva". Funday Times. Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 12 December 2011.
- ↑ "The first king of Anuradhapura". Funday Times. Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 12 December 2011.
- ↑ 3.0 3.1 மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். pp. (209 - 211)/232.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ மகாவம்சம் - 10:103-105