1916
1916 (MCMXVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1916 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1916 MCMXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1947 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2669 |
அர்மீனிய நாட்காட்டி | 1365 ԹՎ ՌՅԿԵ |
சீன நாட்காட்டி | 4612-4613 |
எபிரேய நாட்காட்டி | 5675-5676 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1971-1972 1838-1839 5017-5018 |
இரானிய நாட்காட்டி | 1294-1295 |
இசுலாமிய நாட்காட்டி | 1334 – 1335 |
சப்பானிய நாட்காட்டி | Taishō 5 (大正5年) |
வட கொரிய நாட்காட்டி | 5 |
ரூனிக் நாட்காட்டி | 2166 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4249 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 8 - முதலாம் உலகப் போர்: துருக்கியின் கல்லிப்பொலியில் இருந்து கூட்டுப் படைகள் விலகின.
- பெப்ரவரி 3 - கனடாவின் ஒட்டாவா நகரில் நாடாளுமன்றக் கட்டிடம் தீயில் அழிந்தது.
- மே - யாழ்ப்பாணத்தில் 115 அடி உயரமான கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது.
- மே 5 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் டொமினிக்கன் குடியரசினுள் புகுந்தனர்.
- மே 16 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை சிங்களவர்களால் கொண்டாடப்பட்டது.
- ஜூலை 18 - யாழ்ப்பாணத்தில் கடுமையான புயல் ஏற்பட்டதில் பலர் கொல்லப்பட்டனர். மின்கம்பிகள், வீடுகள் என்பன பலத்த சேதமடைந்தன.
- அக்டோபர் 10 - வட இலங்கை அமெரிக்க மிஷன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், பட்டிக்கோட்டா செமினறியில் கொண்டாடியது.
- அக்டோபர் 12 - இலங்கையில் தயாரிக்கப்பாட்ட சீனியின் முதலாவது தொகுதி
கொழும்பில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
- தனித்தமிழ் இயக்கம் மறைமலை அடிகளால் தோற்றுவிக்கப்பட்டது.
பிறப்புகள்
தொகு- மார்ச் 19 - நாவலாசிரியர் இர்வின் வாலஸ் (Irving Wallace) (இ. 1990)
- மார்ச் 21 - பிஸ்மில்லா கான்
- ஏப்ரல் 17 - சிறிமாவோ பண்டாரநாயக்கா
- மே 5 - பி. யு. சின்னப்பா
- சூலை 11 - கஃப் விட்லம், ஆத்திரேலியப் பிரதமர் (இ. 2014)
- செப்டம்பர் 13 - ரூவால் டால்
- செப்டம்பர் 16 - எம். எஸ். சுப்புலட்சுமி