பிசுமில்லா கான்
இந்திய இசையமைப்பாளர்
(பிஸ்மில்லா கான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உஸ்தாத் பிஸ்மில்லா கான் (மார்ச் 21, 1916 - ஆகஸ்ட் 21, 2006) உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை. உஸ்தாத் என்பது மேதை அல்லது ஆசான் எனப்பொருள்படும். இவர் இந்தியாவின் மிக உயர் பாரத ரத்னா விருதினை 2001 இல் பெற்றுக்கொண்டார். இந்நூற்றாண்டில் பிறந்த இசைஅறிஞருள் சிறந்தவராகக் கருதப்படுகிறார்.
உஸ்தாத் பிஸ்மில்லா கான் Ustad Bismillah Khan | |
---|---|
Ustad Bismillah Khan at Concert in 1964 | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | Qamaruddin |
பிறப்பு | மார்ச்சு 21, 1916 |
பிறப்பிடம் | இந்தியா |
இறப்பு | ஆகத்து 21, 2006 | (அகவை 90)
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | ஷெனாய் |
இசைக்கருவி(கள்) | ஷெனாய் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகு- 1916 மார்ச் 21 ஆம் நாள், தும்ரான் கிராமத்தில் (தும்ரான் என்ற வட்டாரம் இன்றைய பீகார்), அவரது பெற்றோரான பைகாம்பர் கானுக்கும், மித்தனுக்கும் இரண்டாவது ஆண்குழந்தையாகப் பிறந்தார்.[1] அவரது பெற்றோர், முதல்மகனுக்கு சம்சுதீன் என்று பெயர் வைத்தனர். இசைநயத்திற்காக இரண்டாவது மகனான பிசுமில்லாகானுக்கு, கமருதீன் என்று பெயரிட்டனர். ஆனால்,முதன்முதலில் இரண்டாவது பேரனைக் கண்ட அவரது தாத்தா, 'பிஸ்மில்லாஹ்' (இறைவனின் திருப்பெயரால்) என்று கூறினார். நாளடைவில், பிசுமில்லா கான் என்ற பெயரே நிலைத்து விடுகிறது.[2]
- பிசுமில்லா கானின் முன்னோர்கள் அரண்மனை இசைக்காரர்கள். காசி விசுவநாதர் ஆலயத்தில், அவருடைய மாமா அலிபக்ஸ் (விலாயத்து) இசைச் சேவையில் ஈடுபட்டிருந்தார். இளைய பிசுமில்லாகான் இருபதாவது வயதில் கங்கைக்கரை காசிக்கு செல்கிறார். அவரது மாமாவே, பிசுமில்லா கானிற்கு செனாய் ஆசானாகிறார். பின்னர், எழுபது ஆண்டுகள் காசியிலும், கங்கைக்கரையிலும்,உலகமெல்லாம் சுழன்று, இசைத் தென்றலாய் ஆனார்.
- பிஸ்மில்லாகானுக்கு ஐந்து மகன்களும், மூன்று மகள்களும் இருக்கிறார்கள்.
வாழ்நிலை சூழல்கள்
தொகு- காசியின் நெருக்கடி மிகுந்த தெருவில் எந்த வசதியும் இல்லாத வீட்டில் ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்தவர் பிஸ்மில்லாகான். அவர் நெடிய சிந்தையுடன் ஒருமுறை கேட்ட கேள்வி “மானிடம் கடவுளால் படைக்கப் பட்டிருந்தால் மனித உறவில் சமத்துவம் இல்லையே ஏன்?”.
- முதல் இந்தியக் குடியரசு விழாவில், செங்கோட்டையை நோக்கி ஊர்வலத்தில், நேரு உள்ளிட்ட இந்தியப் பெருந்தலைவர்கள் உடன் சென்றார்கள். அந்த ஊர்வலத்தில் பிஸ்மில்லாகான் செனாய் இசைத்தார். கங்கையில் ஓடம் வலிக்கும் சாதாரண ஏழைகளின் ஓடப்பாட்டையே செனாயில் இசைக்கிறார்.
- நாள்தோறும் ஐந்து வேளை தொழக்கூடியவர் பிசுமில்லா கான். இருப்பினும், காசியின் பாலாஜி கோயில், சங்கத் மோட்சர், கங்கா மாயா, சரசுவதி ஆகியவற்றோடும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. கங்கையையும், காசியையும் பிசுமில்லாகான் நேசித்தது அவருடைய சூஃபிய தன்மையாகக் கருதப்படுகிறது.
விருதுகள்
தொகு- அவர் தனது வாழ்நாளில் உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று தனது இசைத்திறமையால் மக்களை மகிழ்வித்தார்.
- பாரத ரத்னா தவிர, பத்மவிபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, தான்சேன் விருது போன்ற பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
- 1956 சங்கீத நாடக அகாடமி விருது
- 1961 பத்மஸ்ரீ விருது, தேசிய பண்பாட்டு நிறுவனம் வழங்கிய பாரத செனாய் சக்கரவர்த்தி விருது
- 1968 பத்மபூசன் விருது, பத்மவிபூசன் விருது
- 1980 மத்திய பிரதேச அரசின் தான்சேன் விருது
- 1981 காசி இந்து பல்கலைக்கழகம், சாந்தி நிவேதின் பல்கலைக்கழகம், மராத்வாடா பல்கலைக்கழகம் என பல பல்கலைக் கழகங்கள் வழங்கிய டாக்டர் பட்டங்கள்.
- பிஸ்மில்லாகான் பிறந்த 1916ல் பிறந்தவர்கள் தான் எம். எஸ். சுப்புலட்சுமி, ரவிசங்கர், லதாமங்கேஸ்கர் இவர்கள் நால்வருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
ஊடகங்கள்
தொகு-
தும்ரான் கிராமம்,பீகார்
-
பாரத் ரத்னா விருது
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ "Bismillah Khan". The Telegraph. 22 August, 2006. http://www.independent.co.uk/news/obituaries/bismillah-khan-412865.html. பார்த்த நாள்: January 10, 2013.
- ↑ "Virtuoso musician who introduced the shehnai to a global audience". The Independent. 22 August, 2006. http://www.independent.co.uk/news/obituaries/bismillah-khan-412865.html. பார்த்த நாள்: January 08, 2013.