செப்டம்பர் 13
நாள்
<< | செப்டம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
செப்டம்பர் 13 (September 13) கிரிகோரியன் ஆண்டின் 256 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 257 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 109 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1229 – ஒகோடி கான் மங்கோலியப் பேரரசின் ககானாகப் பதவியேற்றார்.
- 1437 – போர்த்துக்கீசப் படைகள் மொரோக்கோவின் தாங்கியர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
- 1501 – மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற தாவீது என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார்.
- 1541 – மூன்றாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த ஜான் கால்வின் திருச்சபைகளை கால்வினீசம் என்ற தனது புதிய சமய அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கும் நோக்கில் ஜெனீவா திரும்பினார்.
- 1584 – எல் எசுக்கோரியல் அரண்மனை மத்ரித் நகரில் கட்டி முடிக்கப்பட்டது.
- 1609 – என்றி அட்சன் பின்னர் அட்சன் ஆறு எனப் பெயரிடப்பட்ட ஆற்றை அடைந்தார்.
- 1743 – பெரிய பிரித்தானியா, ஆஸ்திரியா, சார்தீனிய இராச்சியம் ஆகியன அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.
- 1759 – ஏழாண்டுப் போர்: கனடாவின் கியூபெக் நகருக்கு அருகாமையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.
- 1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரான்சிய-எசுப்பானியப் படைகள் ஜிப்ரால்ட்டர் மீதான பெரும் முற்றுகையை ஆரம்பித்தன.
- 1788 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுத்தலைவர் தேர்தலுக்கான திகதி பிலடெல்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக நியூயோர்க் நகரம் அறிவிக்கப்பட்டது.
- 1791 – பதினாறாம் லூயி மன்னன் பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டான்.
- 1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: போரின் திருப்புமுனையாக பிரித்தானியர் பால்ட்டிமோர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இச்சமரில் பிரான்சிசு கீ இயற்றிய பாடல் பின்னர் அமெரிக்காவின் தேசியப் பண்ணாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படையினர் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினர்.
- 1898 – அனிபால் குட்வின் செலுலாயிடு புகைப்படச் சுருளைக் கண்டுபிடித்தார்.
- 1899 – ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது தானுந்து விபத்து உயிரிழப்பு இடம்பெற்றது.
- 1923 – எசுப்பானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினான்.
- 1948 – ஐதராபாதில் நுழைந்து அதனை இந்திய ஒன்றியத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க இந்தியத் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல் இராணுவத்துக்கு உத்தரவிட்டார்.
- 1949 – இலங்கை, இத்தாலி பின்லாந்து, ஐசுலாந்து, யோர்தான் ஆகிய 6 நாடுகள் ஐநாவில் அங்கத்துவம் பெற சோவியத் ஒன்றியம் தடை செய்தது.
- 1953 – நிக்கிட்டா குருசேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1956 – ஐபிஎம் முதல் தடவையாக வட்டு சேமிப்பை அறிமுகப்படுத்தியது.[1]
- 1968 – பனிப்போர்: அல்பேனியா வார்சா ஒப்பந்த அமைப்பில் இருந்து விலகியது.
- 1971 – மா சே துங்கின் இரண்டாவது தளபதி லின் பியாவோ இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து சீனாவை விட்டு வெளியேறினார். இவர் சென்ற விமானம் மங்கோலியாவில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
- 1971 – நியூயோர்க்கில் சிறைக்கைதிகளின் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த காவற்துறையினர் எடுத்த நடவடிக்கையில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
- 1987 – பிரேசில் மருத்துவமனை ஒன்றில் இருந்து திருடப்பட்ட கதிரியக்கப் பொருள் ஒன்றினால் அடுத்தடுத்த வாரங்களில் பலர் கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறியால் உயிரிழந்தனர்.
- 1989 – டெசுமான்ட் டுட்டுவின் தலைமையில் தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கல் கொள்கைக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
- 1993 – நோர்வேயில் இடம்பெற்ற இரகசியத் தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத்தை வெள்ளை மாளிகை சந்தித்தார்.
- 1995 – கொழும்பு இரத்மலானையில் இருந்து பலாலிக்கு இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற அன்டனோவ் ஏஎன்-32 வானூர்தி ஜா-எல அருகே கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 81 பேரும் உயிரிழந்தனர்.[2][3]
- 2001 – செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் முதல் தடவையாக அமெரிக்காவில் விமான சேவைகள் ஆரம்பமாயின.
- 2007 – பழங்குடிகளின் உரிமைகள் குறித்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 2008 – தில்லியில் தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதில் 30 பேர் கொல்லப்பட்டனர், 130 பேர் காயமடைந்தனர்.
- 2013 – தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானித்தான் எராட் நகரில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகம் மீது தாக்குதலை நடத்தியதில், இரண்டு காவல்துரையினர் கொல்லப்பட்டனர்.
- 2018 – மாசச்சூசெட்ஸ் எரிவளி வெடிப்புகள்: எரிவாயு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார், 25 பேர் காயமடைந்தனர். 40 வீடுகள் அழிந்தன.
பிறப்புகள்
- 1853 – ஆன்சு கிறிட்டியன் கிராம், தென்மார்க்கு நுண்ணுயிரியியலாளர் (இ. 1938)
- 1886 – ராபர்ட் ராபின்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1975)
- 1896 – மு. நல்லதம்பி, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1951)
- 1898 – கதிரவேலு சிற்றம்பலம், இலங்கை அரசியல்வாதி (இ. 1964)
- 1912 – ஒரேசு வெல்கம் பாப்காக், அமெரிக்க வானியலாளர் (இ. 2003)
- 1916 – ரூவால் டால், உவெல்சு-ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1990)
- 1929 – கோ. சி. மணி, தமிழக அரசியல்வாதி (இ. 2016)
- 1932 – எம். கே. றொக்சாமி, இலங்கை இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1988)
- 1932 – பிரபா ஆத்ரே, இந்துத்தானி இசைப் பாடகர் (இ. 2024)
- 1947 – சி. தர்மகுலசிங்கம், ஈழத்து எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 2011)
- 1960 – கார்த்திக், தென்னிந்திய நடிகர்
- 1960 – கெவின் கார்ட்டர், தென்னாப்பிரிக்க ஊடகவியலாளர் (இ. 1994)
- 1960 – நல்லாரி கிரண் குமார் ரெட்டி, ஆந்திராவின் 16வது முதலமைச்சர்
- 1969 – சேன் வார்ன், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2022)
- 1971 – கொரான் இவானிசெவிச், குரொவாசிய தென்னிசு வீரர்
- 1982 – வி. சேதுராமன், தமிழகத் திரைப்பட நடிகர், மருத்துவர் (இ. 2020)
- 1989 – தோமா முல்லர், செருமானியக் கால்பந்து வீரர்
இறப்புகள்
- 81 – டைட்டசு, உரோமைப் பேரரசர் (பி. 39)
- 1598 – இரண்டாம் பிலிப்பு, எசுப்பானிய மன்னர்]] (பி. 1526)
- 1901 – கு. சேசாத்ரி ஐயர், இந்திய வழக்கறிஞர், மைசூர் திவான் (பி. 1845)
- 1929 – ஜத்தீந்திர நாத் தாஸ், இந்தியச் செயற்பாட்டாளர் (பி. 1904)
- 1936 – யோகான்னசு பிரான்சு ஆர்ட்மேன், செருமானிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1865)
- 1941 – போரிசு வசீலியேவிச் நியுமெரோவ், உருசிய வானியலாளர், புவி இயற்பியலாளர் (பி. 1891)
- 1944 – நூர் இனாயத் கான், பிரித்தானிய சிறப்பு உளவுப் பிரிவின் இரகசிய உளவாளி (பி. 1914)
- 1975 – முடிகொண்டான் வெங்கடராம ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1897)
- 1996 – டூப்பாக் ஷகூர், அமெரிக்க ராப் இசைக்கலைஞர் (பி. 1971)
- 1999 – பெஞ்சமின் புளூம், அமெரிக்க உளவியலாளர் (பி. 1913)
- 2009 – அரங்க முருகையன், தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1932)
- 2010 – ஆர். சூடாமணி, தமிழக எழுத்தாளர் (பி. 1931)
- 2012 – ரங்கநாத் மிஸ்ரா, இந்தியாவின் 21-வது தலைமை நீதிபதி (பி. 1926)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ https://www-03.ibm.com/ibm/history/exhibits/650/650_pr2.html
- ↑ "Principal Ceylon Events, 1995". Ferguson's Ceylon Directory, Colombo. 1997-99.
- ↑ AN - 32 B Crash -22 Years of Remembrance, 13/09/2017
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "செப்டம்பர் 13 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்