ஒரேசு வெல்கம் பாப்காக்
ஒரேசு வெல்கம் பாப்காக் (Horace Welcome Babcock) (செப்டம்பர் 13, 1912 -ஆகத்து 29, 2003) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் அரோல்டு டி. பாப்காக் அவர்களின் மகனாவார்.
ஒரேசு வெல்கம் பாப்காக் | |
---|---|
பிறப்பு | 13 செப்டெம்பர் 1912 பாசடீனா |
இறப்பு | 29 ஆகத்து 2003 (அகவை 90) ஸான்டா பார்பரா |
படித்த இடங்கள் | கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
பணி | வானியல் வல்லுநர் |
விருதுகள் | என்றி டிரேப்பர் பதக்கம், அரசு வானியல் கழகப் பொற்பதக்கம், எடிங்டன் பதக்கம், புரூசு பதக்கம், Fellow of the American Academy of Arts and Sciences, ஜார்ஜ் எல்லேரி ஏல் பரிசு, Rank Prize |
அறிவியல் வாழ்க்கைப் போக்கு | |
துறைகள் | வானியல் |
நிறுவனங்கள் |
|
வாழ்க்கைப்பணி
தொகுபாப்காக் பல வானியல் கருவிகளைப் புதிதாக வடிவமைத்து கட்டியமைத்தார். இவர் 1953 இல் முதன்முதலில் தகவமை ஒளியியல் பற்றிய எண்ணத்தை வெளியிட்டார்.[1] இவர் கதிர்நிரலியலில் சிறப்பு தகுதி பெற்றார்; விண்மீன்களின் காந்தவியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவர் சூரியக் கரும்புள்ளிகளுக்கன காந்தவியல் கோட்பாட்டுப் படிமத்தை உருவாக்கினார். இது பாப்காக் படிமம் என வழங்குகிறது.
இரண்டாம் உலகப் போரின்போது இவர் மசாசூசட்டிலும் கால்டெக்கிலும் கதிர்வீச்சு ஆய்வில் ஈடுபட்டார். போர் முடிந்த்தும், தன் தந்தையாருடன் ஆக்கமுறை வாய்ந்த கூட்டுப்பணியில் ஈடுபட்டார். இவர் தன் பட்டப்படிப்பைக் கால்டெக்கிலும் முனைவர் பட்ட ஆய்வை பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார்.[2]
இவரது முனைவர் ஆய்வுரை கரும்பொருண்மம் குறித்த தொடக்கநிலை புலப்பாடுகளைக் கொண்டிருந்தது. இவர் ஆந்திரமேடாவின் சுழற்சி வரைவின் அளவீடுகளை அறிவித்தார். இது ஆரம் சார்ந்து பொருண்மை-ஒளிர்மை விகிதம் உயர்தலை எடுத்து காட்டியது.[3] என்றாலும் இவர் இதை பால்வெளிக்குள் அமையும் ஒளி உட்கவர்தலாலோ பால்வெளிச் சுருளின் வெளிப்புற பகுதியின் இயக்கவியலாலோ ஏற்படுவதாகக் கருதினாரே தவிர விடுபட்ட பொருண்ம்ம் எதற்கும் சுட்டவில்லை.
இவர் 1964 முதல் 1978 வரை கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் பலோமார் வான்காணகத்தின் இயக்குநராக இருந்தார்.
தகைமைகள்
தொகுவிருதுகள்
- என்றி டிரேப்பர் பதக்கம் of the National Academy of Sciences (1957)[4]
- எடிங்டன் பதக்கம் (1958)
- அமெரிக்க்க் கலை, அறிவியல் கழகம் ஆய்வுறுப்பினர் (1959)[5]
- புரூசு பதக்கம் (1969)[6]
- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1970)[7]
- அமெரிக்க வானியல் கழகத்தின் சூரிய இயற்பியல் பிரிவு தரும் ஜார்ஜ் எல்லேரி ஏல் பரிசு (1992)
இவரது பெயர் இடப்பட்டவை
- குறுங்கோள் 3167 பாப்காக் (கூட்டாகத் தன் தந்தையாருடன்)
- நிலாவின் பாப்காக் குழிப்பள்ளம்இவரது தந்தையார் பெயரில் வழங்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "'Adaptive optics' come into focus". பிபிசி. 18 February 2011. http://www.bbc.co.uk/news/science-environment-12500626. பார்த்த நாள்: 24 June 2013.
- ↑ Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் August 22, 2012.
- ↑ Babcock, H, 1939, “The rotation of the Andromeda Nebula பரணிடப்பட்டது 2020-07-05 at the வந்தவழி இயந்திரம்”, Lick Observatory bulletin ; no. 498
- ↑ "Henry Draper Medal". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
- ↑ "Book of Members, 1780-2010: Chapter B" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 14 April 2011.
- ↑ "Past Winners of the Catherine Wolfe Bruce Gold Medal". Astronomical Society of the Pacific. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
- ↑ "Winners of the Gold Medal of the Royal Astronomical Society". Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
வெளி இணைப்புகள்
தொகு- Bruce Medal page பரணிடப்பட்டது 2020-09-20 at the வந்தவழி இயந்திரம்
- Awarding of Bruce Medal
- Awarding of RAS gold medal
- H.W. Babcock, "The Possibility of Compensating Astronomical Seeing", PASP 65 (1953) 229
- Oral History interview transcript with Horace Babcock 25 July 1977, American Institute of Physics, Niels Bohr Library and Archives பரணிடப்பட்டது 2014-02-22 at the வந்தவழி இயந்திரம்
- National Academy of Sciences Biographical Memoir
நினைவேந்தல்கள்
தொகுPASP 116 (2004) 290(not available online yet, see [1])- George W. Preston (2004). "Obituary: Horace Welcome Babcock (1912–2003)". Publications of the Astronomical Society of the Pacific 116 (817): 290–294. doi:10.1086/382664. Bibcode: 2004PASP..116..290P.