இரத்மலானை வானூர்தி நிலையம்

கொழும்பு விமான நிலையம் (Colombo Airport) அல்லது இரத்மலானை விமான நிலையம் (Ratmalana Airport) இலங்கையின் உள்ளூர் வானூர்தி சேவைகளுக்காகவும் மற்றும் இராணுவத் தேவைகளுக்காகவும் பாவிக்கப்படும் ஒரு வானூர்தி நிலையம் ஆகும். இது முன்னர் இலங்கையின் ஒரேயொரு பன்னாட்டு விமான நிலையமாக இருந்தது. இவ்வானூர்தி நிலையம் இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான இரத்மலானையில் அமைந்திருக்கிறது.

கொழும்பு வானூர்தி நிலையம்
ஐஏடிஏ: RMLஐசிஏஓ: VCCC
கொழும்பு வானூர்தி நிலையம் is located in இலங்கை
கொழும்பு வானூர்தி நிலையம்
கொழும்பு
வானூர்தி நிலையம்
கொழும்பு
வானூர்தி நிலையம் (இலங்கை)
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது/வர்த்தக/இராணுவ
இயக்குனர் வானூர்தி மற்றும் வானூர்திப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை)
அமைவிடம் கொழும்பு
மையம்
  • அமீர் எயார்
  • டீகன் லங்கா
  • கெலிருவர்ஸ்
  • லங்கள் கார்கோ
உயரம் AMSL 16 ft / 5 m
ஆள்கூறுகள் 6°49′19.18″N 79°53′10.35″E / 6.8219944°N 79.8862083°E / 6.8219944; 79.8862083ஆள்கூறுகள்: 6°49′19.18″N 79°53′10.35″E / 6.8219944°N 79.8862083°E / 6.8219944; 79.8862083
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
4/22 6 2,035 சரளைக்கல்

1934ஆம் ஆண்டில் அன்றைய இலங்கை அரசாங்க சபை இரத்மலானையில் வானூர்தி நிலையம் கட்டுவதற்கு முடிவெடுத்தது. நவம்பர் 27, 1935 அன்று முதலாவது வானூர்தி மதராசில் இருந்து வந்திறங்கியது.

இரண்டாம் உலகப் போரின் போது இது பிரித்தானியாவின் ரோயல் வான்படையினரின் தளமாகப் பயன்பட்டது. ஜப்பானிய வானூர்திகளுக்கெதிரான பல தாக்குதல்களுக்கு இவ்விமான நிலையம் பயன்பட்டது. மேற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரான பேர்த்தில் இருந்து இடைத்தங்கல் இல்லாமல் வானூர்திகள் இங்கு வந்து போயின. போரின் பின்னரும் பேர்த்தில் இருந்தான பயணம் நடைபெற்று வந்தது.

இதன் ஓடுபாதை 1833 மீட்டர் நீளமானது.