1847
1847 (MDCCCXLVII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1847 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1847 MDCCCXLVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1878 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2600 |
அர்மீனிய நாட்காட்டி | 1296 ԹՎ ՌՄՂԶ |
சீன நாட்காட்டி | 4543-4544 |
எபிரேய நாட்காட்டி | 5606-5607 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1902-1903 1769-1770 4948-4949 |
இரானிய நாட்காட்டி | 1225-1226 |
இசுலாமிய நாட்காட்டி | 1263 – 1264 |
சப்பானிய நாட்காட்டி | Kōka 4 (弘化4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2097 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4180 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 4 - சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் துப்பாக்கியை அமெரிக்க அரசுக்கு விற்றார்.
- ஜனவரி 13 - கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
- பெப்ரவரி 22 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: புவென விஸ்டா என்ற இடத்தில் 5,000 அமெரிக்கப் படைகள் 15,000 மெக்சிக்கோப் படைகளை விரட்டினர்.
- மார்ச் 1 - போஸ்டின் சூலூக், ஹெயிட்டி நாட்டுத் தலைவராகத் தன்னை அறிவித்தான்.
- மார்ச் 9 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோவினுள் நுழைந்தனர்.
- மே 29 - விஸ்கவுண்ட் டொரிங்டன் பிரபு காலியை அடைந்து இலங்கையின் பிரித்தானிய ஆளுநராகப் பதவியேற்றார்.
- ஜூலை 1 - ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.
- ஜூலை 26 - லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- அக்டோபர் 6 - சாமுவேல் பிஸ்க் கிறீன் பருத்தித்துறையை வந்தடைந்தார்.
- டிசம்பர் 31 - ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.
நாள் அறியப்படாதவை
தொகு- ஒட்டோமான் பேரரசு அபாடன் தீவை பாரசீகப் பேரரசுக்கு வழங்கியது.
- ஜோசப் ஃபிரை என்ற ஆங்கிலேயர் முதல் கனசெவ்வக சாக்கலேட் கட்டியை வார்த்து உருவாக்கினார்.
பிறப்புகள்
தொகு- பெப்ரவரி 11 - தொமஸ் அல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1931)
- மார்ச் 3 - அலெக்சாண்டர் கிரகாம் பெல், அறிவியல் அறிஞர் (இ. 1922)
- அக்டோபர் 1 - அன்னி பெசண்ட், பெண் விடுதலைக்குப் போராடியவர் (இ. 1933)
இறப்புகள்
தொகு- தியாகராஜ சுவாமிகள் (பி. 1767)