1850கள்
பத்தாண்டு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1850கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1850ஆம் ஆண்டு துவங்கி 1859-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
தொகுநுட்பம்
தொகு- பெசெமெர் முறை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உருக்கு தயாரிப்பு வளர்ச்சியடைந்தது.
- இலங்கையில் முதலாவது தொலைத்தந்தித் தொடர்பு கொழும்புக்கும் காலிக்கும் இடையிலும், பின்னர் கண்டிக்கும் மன்னாருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது (1858).
- தொலைத்தந்திச் சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
- இலங்கையில் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது (1858).
- முதலாவது டிரான்ஸ்-அட்லாண்டிக் தொலைத் தந்திக் கம்பி பதியப்பட்டது.
- எலீஷா ஓட்டிஸ் என்பவர் முதலாவது பாதுகாப்பான பாரந்தூக்கியை அறிமுகப்படுத்தினார்.
அறிவியல்
தொகு- 1959 - சார்ல்ஸ் டார்வின் தனது புகழ்பெற்ற உயிரங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார்.
அரசியல், போர்
தொகு- கிரிமியப் போர் (Crimean war, 1854-1856): ரஷ்யாவுக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்றது. கூட்டுப் படைகளில் ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஓட்டோமான் பேரரசு ஆகியன இடம்பெற்றன. போர் முழுமையும் கருங்கடலின் வடக்குக் கரைப் பகுதியான கிரிமியாவிலேயே இடம்பெற்றன.
- இந்திய எழுச்சி (Indian Mutiny): இந்தியாவில் பிரித்தானியக் குடியேற்றவாதத்துக்கெதிரான எழுச்சி.
- முகலாயப் பேரரசின் வீழ்ச்சி.
- மல்தாவியா மற்றும் வலாச்சியா ஆகியன ருமேனியா நாடாக இணைந்தன.