1859
1859 (MDCCCLIX) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1859 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1859 MDCCCLIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1890 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2612 |
அர்மீனிய நாட்காட்டி | 1308 ԹՎ ՌՅԸ |
சீன நாட்காட்டி | 4555-4556 |
எபிரேய நாட்காட்டி | 5618-5619 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1914-1915 1781-1782 4960-4961 |
இரானிய நாட்காட்டி | 1237-1238 |
இசுலாமிய நாட்காட்டி | 1275 – 1276 |
சப்பானிய நாட்காட்டி | Ansei 6 (安政6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2109 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4192 |
நிகழ்வுகள்
தொகு- ஏப்ரல் 20 - சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது.
- மே 21 - பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.
- மே 30 - சார்டீனியர்கள் ஆஸ்திரியப் படைகளை பாலெஸ்ட்ரோ என்ற இடத்தில் தோற்கடித்தனர்.
- ஜூன் 6 - குயீன்ஸ்லாந்து பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக அமைக்கப்பட்டது.
- ஜூன் 24 - சார்டீனிய இராச்சியம் மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகளும் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.
- ஆகஸ்ட் 27 - பென்சில்வேனியாவின் டிட்டுஸ்வில் என்ற இடத்தில் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது எண்ணெய்க் கிணறு எட்வின் டிறேக் என்பவரால் தோண்டப்படட்து.
- அக்டோபர் 26 - வேல்சில், ஆங்கிலெசி என்ற இடத்தில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 454 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 24 - சார்ல்ஸ் டார்வின் தனது உயிரங்களின் தோற்றம் நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.
நாள் அறியப்படாதவை
தொகு- பெப்ரவரி - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக கத்தோலிக்க நூலகம் ஒன்று செமேரியா ஆயரினால் அமைக்கப்பட்டது.
- நவம்பர் - யாழ்ப்பாணத்தில் தமிழில் சிறுவர் இதழ் பாலியர் நேசன் வெளிவந்தது.
- தமிழ் புளூட்டாக், தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
- யாழ்ப்பாண நகரத்தின் மக்கள் தொகை 28,500 ஆக மதிப்பிடப்பட்டது.
- திமோர் தீவு போர்த்துக்கலுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பங்கிடப்பட்டது.
பிறப்புகள்
தொகு- மே 22 - ஆர்தர் கொனன் டொயில், ஆங்கில எழுத்தாளர் (இ. 1930)
- சூலை 7 - இரட்டைமலை சீனிவாசன், இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி (இ. 1945)