திசம்பர் 24
நாள்
(டிசம்பர் 24 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 24 (December 24) கிரிகோரியன் ஆண்டின் 358 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 359 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஏழு நாட்கள் உள்ளன
நிகழ்வுகள்
- 640 – நான்காம் ஜான் திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- 820 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் லியோ கான்ஸ்டண்டினோபில், ஹேகியா சோபியாவில் கொல்லப்பட்டார். முதலாம் மைக்கேல் பேரரசரானார்.
- 1294 – ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியைத் துறந்ததை அடுத்து எட்டாம் பொனிஃபேசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1690 – யாழ்ப்பாணத்தில் கிறித்துமசு இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.[1]
- 1737 – போபால் போரில் மராட்டியப் படைகள் முகலாய, ஜெய்ப்பூர், நிசாம், அயோத்தி நவாப், வங்காள நவாபுகளின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன.
- 1777 – கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.
- 1814 – பிரித்தானியாவுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812 முடிவுக்கு வந்தது.
- 1846 – பிரித்தானியர் புரூணையிடம் இருந்து லாபுவான் தீவைப் பெற்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் இத்தீவு மலேசியாவுக்குச் சொந்தமானது.
- 1851 – அமெரிக்கக் காங்கிரசு நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.
- 1865 – அமெரிக்காவின் இரகசிய அமைப்பான கு கிளக்சு கிளான் தோற்றுவிக்கப்பட்டது.
- 1906 – ரெஜினால்ட் பெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
- 1913 – மிச்சிகனில் இத்தாலி மண்டபத்தில் கிறித்துமசு கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற நெரிசலில் 59 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்தனர்.
- 1914 – முதலாம் உலகப் போர்: கிறித்துமசு தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
- 1924 – அல்பேனியா குடியரசாகியது.
- 1939 – இரண்டாம் உலகப் போர்: திருத்தந்தை பன்னிரண்டாம் பயசு கிறித்துமசு நாள் அமைதி அமைதி காக்கக் கோரிக்கை விடுத்தார்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் பங்காசி நகரத்தை பிரித்தானியப் படையினர் கைப்பற்றினர்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் சப்பானியரிடம் வீழ்ந்தது.
- 1951 – லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் இத்ரிசு லிபிய மன்னராக முடிசூடினார்.
- 1953 – நியூசிலாந்தில் டாங்கிவாய் என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.
- 1966 – அமெரிக்கப் படையினரை ஏற்றிச் சென்ற கனடாஏர் விமானம் தெற்கு வியட்நாமில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 129 பேர் உயிரிழந்தனர்.
- 1968 – மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
- 1969 – வடகடலின் நோர்வே பகுதியில் முதன் முதலாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1974 – ஆத்திரேலியாவில் டார்வின் நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் இறந்தனர்.
- 1994 – ஏர் பிரான்சு விமானம் 8969 அல்ஜியர்சில் கடத்தப்பட்டது. மூன்று நாட்கள் நீடித்த இக்கடத்தலின் முடிவில் மூன்று பயணிகளும் நான்கு கடத்தல்காரரும் கொல்லப்பட்டனர்.
- 1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 காட்மாண்டிற்கும், தில்லிக்கும் இடையில் கடத்தப்பட்டு, ஆப்கானித்தான், கந்தகார் நகரில் தரையிறக்கப்பட்டது. டிசம்பர் 31 இல் இக்கடத்தல் முடிவுக்கு வந்தது. ஒரு பயணி கொல்லப்பட்டு, 190 பேர் விடுவிக்கப்பட்டனர்.
- 2005 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது துணை இராணுவக் குழுக்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 2005 – டிசம்பர் 18 இடம்பெற்ற தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, சாட் சூடான் மீது போரை அறிவித்தது.
- 2008 – உகாண்டாவின் கிளர்ச்சிக் குழு ஒன்று காங்கோ சனநாயகக் குடியரசில் நடத்திய தாக்குதலில் 400 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1166 – இங்கிலாந்தின் ஜான் (இ. 1216)
- 1740 – ஆண்டர்சு இலெக்செல், பின்லாந்து-சுவீடிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1784)
- 1761 – ழீன் உலூயிசு பொன்சு, பிரான்சிய வானியலாளர் (இ. 1831)
- 1818 – ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல், ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1889)
- 1822 – மேத்யு அர்னால்ட், ஆங்கிலேயக் கவிஞர், திறனாய்வாளர் (இ. 1888)
- 1837 – பவேரியாவின் எலிசபெத் (இ. 1898)
- 1822 – சார்ல்ஸ் ஹெர்மைட், பிரான்சியக் கணிதவியலர் (இ. 1901)
- 1881 – வான் ரமோன் ஹிமெனெஸ், நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (இ. 1958)
- 1896 – மங்காராம் உதராம் மல்கானி, சிந்தி அறிஞர், விமர்சகர், எழுத்தாளர் (இ. 1980)
- 1905 – ஹோவார்ட் ஹியூஸ், அமெரிக்கத் தொழிலதிபர், பொறியியலாளர், விமானி (இ. 1976)
- 1924 – முகமது ரபி, இந்தியப் பின்னணிப் பாடகர் (இ. 1980)
- 1924 – நாராயண் தேசாய், காந்தியவாதி, நூலாசிரியர் (இ. 2015)
- 1932 – மதன் லால் மேத்தா, இந்திய இயற்பியலாளர் (இ. 2006)
- 1938 – சுரேஷ் கிருஷ்ணா, இந்தியத் தொழிலதிபர்
- 1939 – இல. செ. கந்தசாமி, தமிழறிஞர், இதழாளர் (இ. 1992)
- 1944 – ஆஸ்வால்டு கிராசியாஸ், இந்தியப் பேராயர், கருதினால்
- 1946 – நா. மம்மது, தமிழிசை ஆய்வாளர், எழுத்தாளர்
- 1957 – ஹமித் கர்சாய், ஆப்கானித்தானின் 12வது அரசுத்தலைவர்
- 1959 – அனில் கபூர், இந்திய நடிகர்
- 1964 – தமிழ்மகன், எழுத்தாளர்
- 1969 – எட் மிலிபாண்ட், ஆங்கிலேய அரசியல்வாதி
- 1971 – ரிக்கி மாட்டின், புவெர்ட்டோ ரிக்கோ-அமெரிக்கப் பாடகர்
இறப்புகள்
- 1524 – வாஸ்கோ ட காமா, போத்துக்கீச இந்தியாவின் ஆளுநர், மாலுமி (பி. 1469)
- 1950 – பி. ஜி. வெங்கடேசன், திரைப்பட நடிகர்
- 1973 – ஈ. வெ. ராமசாமி, திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர் (பி. 1879)
- 1987 – எம். ஜி. இராமச்சந்திரன், தமிழக நடிகர், தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சர் (பி. 1917)
- 1997 – டோஷிரோ மிபூன், சீன-சப்பானிய நடிகர் (பி. 1920)
- 2002 – வி. கே. ராமசாமி, தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1926)
- 2005 – ஜோசப் பரராஜசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1934)
- 2005 – பி. பானுமதி, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1925)
- 2008 – ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய நாடகாசிரியர் (பி. 1930)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (லிபியா)
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5