இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 (Indian Airlines Flight 814) பொதுவாக ஐ.சி 814 (IC 814) என்று அழைக்கப்படும். இது நேபாளுக்கும் இந்தியாவிற்கும் இடையே செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகும். இந்த விமானம் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தியதி வெள்ளிக் கிழமை 178 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்களுடன் கடத்தப்பட்டது. இதை பாகிஸ்தானில் இயங்கும் ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதக் குழு கடத்தியிருந்தது. இந்தக் கடத்தல் 7 நாட்கள் நீடித்தது. பின்னர் இந்தியச் சிறையில் இருந்த முஷ்டாக் அஹமது சர்கார், அஹமது ஒமர் சையது ஷேக் மற்றும் மௌலானா மசூத் அசார் ஆகியத் தீவிரவாதிகளை விடுவித்தனர். கடத்தப்பட்ட விமானம் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் விமான நிலையத்தில் கடத்தல்காரர்கள் தரையிறக்கி வைத்திருந்தனர். இவ்விமானம் கடத்தப்பட்ட பின்னர் இந்தியாவின் அமிர்தசரஸ் விமான நிலையம், பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையம், ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் துபாய் ஆகிய விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டது. இக்கடத்தலில் 17 பயணிகள் காயமடைந்தனர். ரூபின் காட்யால் என்பவர் மரணமடைந்தார்.[1][2][3]
கடத்தல் சுருக்கம் | |
---|---|
நாள் | 24 டிசம்பர் 1999 – 1 ஜனவரி 2000 |
சுருக்கம் | விமானக் கடத்தல் |
பயணிகள் | 178 |
ஊழியர் | 15 |
காயமுற்றோர் | 17 |
உயிரிழப்புகள் | 1 |
தப்பியவர்கள் | 177 |
இயக்கம் | இந்தியன் ஏர்லைன்ஸ் |
வானூர்தி பதிவு | VT-EDW |
பறப்பு புறப்பாடு | நேபாளம் |
சேருமிடம் | தில்லி |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hijacking Stunt of Air India Aircraft. http://www.defencejournal.com/2000/feb/stunt.htm.
- ↑ "India wanted to raid IC-814 in Dubai, but Farooq Abdullah opposed swap, says former RAW chief AS Dulat". The Indian Express. 3 July 2015 இம் மூலத்தில் இருந்து 5 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180605052007/http://indianexpress.com/article/india/india-others/india-wanted-to-raid-ic-814-in-dubai-farooq-opposed-swap-ex-raw-chief-dulat/.
- ↑ "Govt pressurised negotiators to end IC-814 hijacking by Dec 31: Doval" (in en-IN). The Hindu. 1 January 2010 இம் மூலத்தில் இருந்து 26 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200226151450/https://www.thehindu.com/news/national/Govt-pressurised-negotiators-to-end-IC-814-hijacking-by-Dec-31-Doval/article16835249.ece.