இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்

புதிதில்லியிலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம்

இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Indira Gandhi International Airport, (ஐஏடிஏ: DELஐசிஏஓ: VIDP))இந்தியத் தேசிய தலைநகர் வலயத்தில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். புது தில்லியின் மையப் பகுதியிலிருந்து 16 கிலோமீட்டர்கள் (9.9 mi) தொலைவில் தென்மேற்கு தில்லியில் அமைந்துள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த வானூர்தி நிலையம் இந்தியாவின் மிகவும் நெருக்கடிமிக்க வானூர்தி நிலையமாகும்.[2] புதியதாக கட்டப்பட்டுள்ள மூன்றாம் முனையத்தின் செயலாக்கத்திற்கு பிறகு இதுவே இந்தியாவினதும் தெற்காசியாவினதும் மிகப் பெரிய வானூர்தி நிலையமாக விளங்குகிறது. தற்போது 46 மில்லியன் பயணிகளை கையாளுகின்ற இந்த நிலையம் 2030ஆம் ஆண்டில் 100 மில்லியன் பயணிகளை கையாளும் என மதிப்பிடப்படுகிறது. இதுவும் மும்பையின் சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையமும் இணைந்து தெற்கு ஆசியாவின் வான் போக்குவரத்தில் பாதியளவை கையாள்கின்றன.[3][4][5] இதனை பன்னாட்டு இடைவழி மையமாக மாற்ற இதன் இயக்கு நிறுவனம் தில்லி பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம் (DIAL) திட்டமிட்டுள்ளது.[6]

இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம்
இயக்குனர்தில்லி பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம் (DIAL)
சேவை புரிவதுதில்லி/ தேசிய தலைநகர் வலயம்
அமைவிடம்தென் மேற்கு தில்லி, தில்லி, இந்தியா
மையம்
உயரம் AMSL777 ft / 237 m
இணையத்தளம்www.newdelhiairport.in
நிலப்படம்
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் is located in டெல்லி
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் is located in இந்தியா
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
10/28 12,795 3,900 தார் (கருங்காரை)
09/27 13,780 4,200 தார் (கருங்காரை)
11/29 14,764 4,500 தார் (கருங்காரை)
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் '11 - மார்ச்சு '12)
பயணிகள் போக்குவரத்து35,881,965
வானூர்தி போக்குவரத்து345,143
சரக்கு டன்கள்600,045
மூலம்: ஏஏஐ[1][1][1]

5220 ஏக்கராப் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தில்லி வானூர்தி நிலையம் தேசிய தலைநகர் வலயத்திற்கான முதன்மை குடியியல் பறப்பியல் மையமாக விளங்குகிறது. முன்னதாக இந்திய வான்படையால் இயக்கப்பட்டு வந்த இந்த நிலையத்தின் மேலாண்மை இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது.[7] மே 2006 இல் இந்த ஆணையம் வானூர்தி நிலையத்தை புதுப்பித்து இயக்குவதற்காக தில்லி பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனத்திற்கு கொடுத்தது. இது ஜிஎம்ஆர் குழுமத்தின் கூட்டு நிறுவனமாகும்.[8]

2011இல் உலகில் 34வது நெருக்கடிமிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆண்டில் 34,729,467 பயணிகள் பயணித்த இந்தப் போக்குவரத்து முந்தைய ஆண்டினதை விட 17.8% கூடுதலாகும்.[9]

வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்

தொகு
வானூர்திச் சேவைகள் சேரும் இடம் குறிப்புகள்
ஏர் அரேபியா சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையம் [10]
ஏர் அஸ்டானா அல்மாட்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் [11]
ஏர் கனடா தொராண்டோ, வான்கூவர் [12]
ஏர் சீனா பெய்ஜிங் [13]
ஏர் பிரான்சு பாரிசு [14]
ஏர் இந்தியா அகமதாபாத், அமிருதசரசு, அவுரங்காபாத், பாக்டோக்ரா பகுரைன், பெங்களூர், பேங்காக் - சுவர்ணபூமி

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Traffic stats for 2011
  2. Delhi Airport busier than Mumbai by 40 flights a day
  3. Saurabh Sinha, TNN, 10 July 2008, 03.54am IST (2008-07-10). "Delhi beats Mumbai to become busiest airport". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2010-08-24.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  4. "Delhi's IGIA edges ahead of Mumbai's CSIA as country's busiest airport". Domain-b.com. 2008-09-01. பார்க்கப்பட்ட நாள் 2010-08-24.
  5. "Travel Biz Monitor: Mumbai airport gets ready for new innings". Archived from the original on 2012-10-18. பார்க்கப்பட்ட நாள் 2013-03-18.
  6. Business Standard (2011-11-07). "Not a stopover to snub, Delhi now wants to be a transit hub". Business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2012-01-24. {{cite web}}: |author= has generic name (help)
  7. Why they should stay with the Air Force
  8. Mumbai, Delhi airport management to be handed over to pvt cos
  9. Simon Rogers (2012-05-04). "The world's top 100 airports: listed, ranked and mapped | News | guardian.co.uk". Guardian. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.
  10. "Flight Schedules". Air Arabia. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018.
  11. "Timetable". Air Astana. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018.
  12. "Flight Schedules". Air Canada. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018.
  13. "Flight Timetable". Air China. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018.
  14. "Flight Schedule". Air France. Archived from the original on 21 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு