அவுரங்காபாத், மகாராட்டிரம்


அவுரங்காபாத்(About this soundஉச்சரிப்பு (மராத்தி: औरंगाबाद,உருது: اورنگ‌آباداورنگ‌آباداورنگ‌آباداورنگ‌آباداور "அரியணையால் கட்டப்பட்டது", எனும் பொருளுடையது, மொகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் பெயரால் அழைக்கப்படுவது), இந்தியாவின், மகாராஷ்டிர மாநிலத்தின், அவுரங்காபாத் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். நகரம் ஒரு சுற்றுலா மையப்பகுதியாக, பல வரலாற்று நினைவிடங்களால் சூழப்பட்டுள்ளது. அவற்றில் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளங்களான, அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளையும், அதே போல பீபீ கா மாக்பாராவையும் உள்ளடக்கியுள்ளது. அவுரங்காபாத் கோட்டத்தின் நிர்வாக அல்லது மராத்வாடா பகுதியின் தலைமையகமான அவுரங்காபாத் 'வாயில்களின் நகரம்' எனக் கூறப்படுகிறது. அத்தகையவற்றின் வலுவான இருத்தலை நகரைச் சுற்றி வருகையில் ஒருவர் கவனியாது இருக்க முடியாது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும் அவுரங்காபாத்.[1]

அவுரங்காபாத்

औरंगाबाद

வாயில்களின் நகரம்
—  நகரம்  —
அவுரங்காபாத்
இருப்பிடம்: அவுரங்காபாத்
, மகாராட்டிரம் , இந்தியா
அமைவிடம் 19°47′N 75°17′E / 19.78°N 75.29°E / 19.78; 75.29ஆள்கூறுகள்: 19°47′N 75°17′E / 19.78°N 75.29°E / 19.78; 75.29
நாடு  இந்தியா
பகுதி மராத்வாடா
மாநிலம் மகாராட்டிரம்
மாவட்டம் அவுரங்காபாத்
ஆளுநர் பகத்சிங் கோசியாரி
முதலமைச்சர் உத்தவ் தாக்கரே
பிரதேச ஆணையர் பாஸ்கர் முன்டே
மேயர் விஜய ரஹத்கார்
மக்களவைத் தொகுதி அவுரங்காபாத்
மக்கள் தொகை

அடர்த்தி

1,167,649 (2009)

6,051/km2 (15,672/sq mi)

மொழிகள் மராத்தி, உருது
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

200 கிமீ2 (77 சதுர மைல்)

513 மீட்டர்கள் (1,683 ft)

இணையதளம் www.AurangabadMahapalika.org

வரலாறுதொகு

 
பீபீ கா மக்பாரா, தக்காணத்தின் தாஜ் என அறியப்படுவது

அவுரங்காபாத் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். அது கி.பி. 1610 ஆம் ஆண்டில் அகமத் நகரின் முர்தாஸா நிஸாம் ஷாவின் முதலமைச்சரான மாலிக் அம்பார் என்பவரால் கர்கி எனும் கிராமத்தின் நிலத்தில் நிறுவப்பட்டது. அவர் அதனை அவரது தலைநகராக ஆக்கிக் கொண்டார். மேலும் அவரது இராணுவத்தினர் அதனைச் சுற்றி தங்களது இருப்பிடங்களை எழுப்பினர். ஒரு பத்தாண்டிற்குள் கர்கி மக்கள் தொகை மிகுந்த, கவர்ச்சிகரமான நகரமாக வளர்ந்தது. மாலிக் அம்பார் கட்டடக் கலைக்கு கடுமையான காதலையும் திறனையும் பேணி வந்தார். அவுரங்காபாத் அம்பாரின் கட்டிடக் கலையின் சாதனை மற்றும் படைப்பாக்கமாகும். எனினும், 1621 ஆம் ஆண்டில், அது ஜஹாங்கீரின் பேரரசுக்குக்குரிய படைகளால் அழிக்கவும், எரிக்கவும் பட்டது. நகரத்தின் நிறுவனரான அம்பார் எப்போதும் பேரரசர் ஜஹாங்கீரால் கடுமையான பெயர்களுக்கு உரியவராக கருதப்பட்டு வந்திருந்தார். ஜஹாங்கீர் நினைவுக் குறிப்புகளில், அவர் எப்போதும் அம்பார் பெயரை ஈனன், சபிக்கப்பட்ட நபர், நாடோடி, அம்பார் சியாரி, கருப்பு அம்பார் மற்றும் அம்பார் படாக்துர் போன்ற பெயரடைகளைத் தவிர்த்துக் குறிப்பிடுவதில்லை. 1626 ஆம் ஆண்டில் மாலிக் அம்பார் இறந்தார்.[2] அவருக்கு பின் அவரது மகன் பதேஃக் கான் அரியணை ஏறினார், அவரால் கர்கி என்பது பதேஃக் நகராக மாற்றப்பட்டது. அதே வருடத்தில், மொகலாய அரசப் பிரதிநிதி கான் ஜஹான் லோடி, நகரத்தை நோக்கி முன்னேறினார், ஆனால், நிஸாம் ஷாவின் தளபதி ஹமீத் கான் அவருக்கு லஞ்சம் கொடுத்ததால் பர்ஹான்புருக்கு பின்வாங்கினார். அரசப் படைகளால் 1633 ஆம் ஆண்டில் தௌலதாபாத் கைப்பற்றலோடு, பதேஃக் நகர் உட்பட நிஸாம் ஷாஹியின் மேலாட்சிப் பிரதேசங்கள் மொகலாயகர்களின் உடைமைகளின் கீழ் வந்தது. 1653 ஆம் ஆண்டில் இளவரசர் அவுரங்கசீப் இரண்டாம் முறையாக தக்காண பிரதேசத்திற்கு அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டப்போது, அவர் பதேஃக் நகரை அவரது தலைநகராக ஆக்கியும் அதனை அவுரங்காபாத் எனவும் அழைத்தார். அவுரங்கச்சீப்பின் ஆட்சி வரலாற்றுப் பதிவாளர்களால் அவுரங்காபாத் சில நேரங்களில் குஜிஸ்தா புன்யாட் என மேற்கோளிடப்படுகிறது.

 
ஸேப்-அன்-நிஸா அரன்மணை அவுரங்காபாத் 1880கள்
 
பஞ்சக்கி, பாபா ஷா மொசாஃபர் தர்கா 1880 களில்

1666 ஆம் ஆண்டு மார்ச்சில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 படையினரின் துணையோடு சிவாஜி அவரது ஆக்ரா பயணத்தின் வழியினூடே அவுரங்காபாத்திற்கு வருகை தந்தார். அவுரங்காபாத்தின் ஆளுநரான சாஃப்ஷிக்கன் கான் அவரை மரியாதைக் குறைவாக நடத்தினார். இச் செயலுக்காக, அவர் ஜெய் சிங்கினால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டு, சிவாஜியை மரியாதை நிமித்தமாக சந்திக்க வைக்கப்பட்டார். 1668 ஆம் ஆண்டில், நகரம் ஏறக்குறைய டிலேர் கானின் அரசப் படைகளுக்கும் அரசப் பிரதிநிதியான இளவரசர் மௌசம்மின் கட்டளைக்கு கீழ்ப்படிந்த படைகளுக்கும் இடையேயான மோதல் காட்சிக் களமாக மாறியது. 1681 ஆம் ஆண்டில், பர்ஹான்பூரை சூறையாடியப் பிறகு மராட்டியர்கள் அவுரங்காபாத்தை தாக்கும் நோக்கோடு அருகிலுள்ள சதாரா மலைகளில் கூடியிருந்தனர். இருப்பினும், இத் திட்டமானது அரசப் பிரதிநிதியான கான் ஜஹான் பஹதூரின் வருகையை அறிந்த பிறகு கைவிடப்பட்டது. அதே வருடத்தில், கான் ஜஹான் பஹதூர் அவுரங்காபாத்தைச் சுற்றி மராட்டியர்களின் எதிர்பாராத தக்குதல்களிலிருந்து அதனைக் காக்க மதிற்சுவரினை எழுப்பினார். அது பேரரசரின் ஆணைப்படி நடத்தப்பட்டது, மேலும் அதற்கு ரூபாய் மூன்று இலட்சம் செலவாகியது. இரண்டாண்டுகள் கழித்து பேரரசரே அவுரங்காபாத்திற்கு வருகை தந்தார்.

 
பீபீ கா மக்பாரா 1880 களில்

பீபீ கா மக்பாரா எனும் நினைவுச் சின்னம் 1660 ஆம் ஆண்டில் அவுரங்கசீப்பின் மகனான, ஆஸாம் ஷாவினால், அவரது தாய் தில்ராஸ் பானோ பேகம் மீதான அன்பாஞ்சலியாகக் கட்டப்பட்டது. 1692 ஆம் ஆண்டில், தற்போது கிலா ஆர்க்கில் இடிபாடுகளாக காணப்படும் - நகரத்தின் வடக்குப் பகுதியிலுள்ள பெரிய நீர்த்தேக்கத்தின் அருகில் ஒரு சிறப்பு வாய்ந்த அரண்மைனையைக் கட்டுவிக்க ஆணையிட்டார். கி.பி. 1696 ஆம் ஆண்டில் ஒரு கோட்டைச் சுவர் பேகம்புராவின் புறநகரப் பகுதிகளைச் சுற்றி வளைத்துக் கட்டப்பட்டது. அவுரங்கசீப்பின் மரணத்திற்குப் பின் விரைவில் அவுரங்காபாத் மொகலாயர் கை வசமிருந்து நழுவியது. 1720 ஆம் ஆண்டில், அவுரங்கசீப்பின் குறிப்பிடத்தக்க தளபதியான நிஸாம்-உல்-முல்க் ஆசிப் ஜா, தக்காண பிரதேசத்தில் அவரது சொந்த வம்சத்தை நிறுவிக்கொள்ளும் நோக்கோடு அவுரங்காபாத்திற்கு வருகைத் தந்தார். 1723 ஆம் ஆண்டில் அவர் டெல்லிக்கு விஜயம் செய்தார். ஆனால் 1724 2[தெளிவுபடுத்துக]ஆம் ஆண்டில், பேரரசர் மொகமத் ஷாவின் ஆணைகளை எதிர்த்து திட்டத்தை மாற்றிக் கொண்டார். பின்னர் விரைவில் அவர் தனது தலைநகரை அவுரங்காபாத்திலிருந்து ஹைதராபாத்திற்கு இடம் மாற்றினார்.

 
தெருக் காட்சி அவுரங்காபாத் 1868

பேரரசர் தக்காணத்தின் சுபேதாராகிய முபாரிஸ் கானுக்கு நிசாமை எதிர்க்கும் படி ஆணையிட்டார். ஒரு போர் சாகர்கேர்டாவின் அருகில் நிகழ்ந்தது. சாகர்கேடா பிற்காலத்தில் பதேஃக்கேர்டா என அழைக்கப்பட்டது. அதில் முர்பாரிஸ் கான் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். மொகலாயர்களின் பக்கத்தில் நின்று போரிட்ட சிந்த்கேட் ஜாதவர்களின் ஓர் இளம் வாரிசான ரகோஜியும் கொல்லப்பட்டார். முர்பாரிஸ் கானுக்கு ஜாதவர்கள் அளித்த ஆதரவால் சினம் கொண்ட நிஸாம், ஒரு துருப்புகளின் காவல் படையை ஜாதவர் குடும்பத்தைப் பிடிக்க டேயுல்கானுக்கு அனுப்பி வைத்தார். அத் திட்டத்தினை அறிந்து கொண்ட குடும்பம் சதாராவிற்கு தப்பிச் சென்று சத்ரபதி ஷாஹூவிடம் அடைக்கலம் நாடியது. ஷாஹூவின் தலையீட்டால் நிலப்பகுதி ஜாதவர்களிடம் திரும்ப வழங்கப்பட்டது.

1853 ஆம் ஆண்டில், அவுரங்காபாத் படைப் பிரிவிற்கும் தேவல்காவ்வின் அரசரான மான்சிங் ராவ்வைச் சார்ந்த அராபிய கொலைகார கூலிப்படையினருக்கும் இடையிலான போர்களமாகக் காட்சியளித்தது. அராபியர்கள் அரசரை சிறைப்பிடித்து வைத்துக் கொண்டு, அவர்களது சம்பளப் பணம் நிலுவையிலுள்ள காரணத்தால் அவரைக் கொல்லப் போவதாக அச்சுறுத்தினர். இராணுவத் தளத்தின் தளபதியான பிரிகேடியர் மைனேயிடம் இச்சூழ்நிலை தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் முதல் வாரத்தில், ஐந்தாவது குதிரைப்படைப் பிரிவு, ஆறாவது காலாட்படைப் பிரிவு மற்றும் பீரங்கிப் படை ஒன்றுடனும் அராபியர்கள் தங்களை முகாமிட்டுள்ள ரோஷன்கேட்டிற்குச் சற்று வெளியேயான, ஜஸ்வந்த்புராவை நோக்கி அணிவகுத்தார். கடுமையான எதிர்ப்பிற்குப் பின், அராபியர்கள் தோற்கடிக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டனர், மேலும் அரசரும் விடுவிக்கப்பட்டார். போர் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவப் பிரிவில் 15 பேர் கொல்லப்பட்டனர்; 40 பேர் காயமுற்றனர். இறந்தவர்களில் லெப்டினண்ட். பாஸ்வெல், காயமுற்றவர்களில் லெப்டினண்ட். வான் மற்றும் காப்டன் பார்க்கர் ஆகியோர் அடங்குவர். பின்னர், இருவரும் தங்களது காயம் காரணமாக இறந்தனர்.

விடுதலைப் போர் 1857தொகு

 
இந்திய புரட்சி: ஜெனரல் வூட்பர்ன்னின் நகரக்கூடிய படைப்பிரிவு அவுரங்காபாத் 1857

1857 ஆம் வருடம் அவுரங்காபாத்தின் வரலாறு நாட்டின் பிறப் பகுதிகளைப் போல் பரபரப்பூட்டும் நிகழ்ச்சிகள் நிரம்பியதாக இருந்தது. பிரிட்டிஷ்ஷார் மோமினாபாத்திலிருந்து (அம்பேஜோகை) முதல் காலாட்படைப் பிரிவை அவுரங்காபாத்திற்கு, மூன்றாம் காலாட்படைப்பிரிவு மாலேகானுக்கு அணிவகுத்துச் செல்வதற்கு விடுவிக்கும் நோக்கில் நகர்த்தியது, மேலும் அதுவே அதிருப்தியைக் காட்டிய முதல் இராணுவப் பிரிவாகும். இரண்டாம் பீரங்கிப்படையும் சந்தேகத்திற்குள்ளானது. நகரத்தின் மக்களும் துருப்புகளுடன் இணைந்து கொள்வார்கள் எனும் அச்சமும் ஏற்பட்டது. இதனைத் தடுக்க, அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. மேலும் இரு பீரங்கிப் படைகளின் பிரிவுகள் காம் நதியின் ஒரு முனையிலிருந்து மறு முனை வரைக் கட்டப்பட்டுள்ளதும், காலாட்படை முகாமிட்டுள்ள இடத்திலிருந்து இராணுவப் பாசறையைப் பிரிக்கவும் செய்வதான பாலத்தினைக் காக்க ஆணையிடப்பட்டது. பிரிட்டிஷ்ஷாரின் பக்கத்திலிருந்தான இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை காலாட்படையைக் கலவரமடையச் செய்தது, மேலும் துருப்புக்கள் ஆணைகள் இன்றி வெளியேறி பாசறையை நோக்கி குறிப்பிட்ட நிலையில் அரண்களை அமைத்துக் கொண்டனர். ஹைதராபாத்திலுள்ள அதிகாரிகளுக்கு நிகழ்வுகளின் வளர்ச்சிப்போக்கு குறித்து விரைவாய்த் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் மீது, துருப்புக்களின் ஒரு குழு புனேவிலிருந்து அவுரங்காபாத்திற்கு அணிவகுத்துச் செல்ல ஆணையிடப்பட்டது. இதனிடையில், பீரங்கிப் படையும் புரட்சிக்கான அறிகுறிகளைக் காண்பித்தது, ஆனால் அவுரங்காபாத்தை நோக்கிய பம்பாய் துருப்புக்களின் அணிவகுப்பு வதந்தி அமைதிப்படுத்தும் பலனைத் தந்தது. காலாட்படையின் வீரர்களும் அவர்களின் நிலைகளுக்குத் திரும்பினர்.

ஜெனரல் வூட்பர்ன்னின் கட்டளையின் கீழிருந்த புனேவின் படை மூன்று துருப்புக்களைக் கொண்டிருந்தது, அவை காப்டன் காலின் கீச் வரும் 14 ஆவது ஹுஸ்ஸார்ஸ், காப்டன் வூட்காம்ப்சினுடைய ஐரோப்பிய பீரங்கிப்படை மற்றும் கலோனல் போலியோட்டின் கீழான 24 வது பம்பாய் காலாட்படை ஆகியவையாகும். அவரது வருகையின் மீதான விளைவாக ஜெனரல் வூட்பர்ன் நேராக மூன்றாம் குதிரைப்படையின் முகாமிற்கு அணிவகுத்துச் சென்றார் மற்றும் பாதிக்கப்படாத படைப்பிரிவினை குதிரையிலிருந்து இறங்கச் செய்து அணிவகுப்பு ஒன்றை நடத்த ஆணையிட்டார். முதல் துருப்புக்களின் ரிஸ்ஸால்தார் புரட்சி செய்தவர்களின் பெயர்களை அழைக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டார். மேலும் மூத்த ஜமாதாரின் பெயரினை கொடுக்கத் துவங்கியபோது, அவர் தனது வீரர்களை அவர்களது சிறு துப்பாக்கிகளில் தோட்டாவை நிரப்பும்படி ஆணையிட்டார். இச் சமயத்தில் ஜெனரல் அவரது பணியாளர்கள் மற்றும் ஆங்கில அதிகாரிகளுடன் பாதிக்கப்படாத துருப்புகளுடன் கலந்து விட்டனர், எனவே இரண்டாவதாக இருப்பவர்களை அடக்க துப்பாக்கிகளை பயன்படுத்த இயலாமற் போயிற்று. பின் வந்த குழப்பத்தில், சில துருப்புக்கள் பிரிந்துச் சென்று, குதிரைகளிடம் ஓடிச் சென்று தப்பியோடினர். அவர்கள் மீது பீரங்கி பிரயோகம் செய்யப்பட்டது மற்றும் ஹுஸ்ஸார்ஸ்கள் கொல்வதற்கு பின் தொடர்ந்து சென்றனர்; ஆனால் அவர்களில் பலர் தப்பிச் செல்வதில் வெற்றியடைந்தனர். குதிரைப்படையின் டபேதார், மிர் பிடா அலி எனும் பெயருடையவர், அவரது கட்டளை அதிகாரியான காப்டன் அப்பாட்டின் மேல் சுட்டார். இச் செயலுக்காக, முரசொலிப்பவர் தலைவர் ஒருவரால் விசாரணை செய்யப்பட்டார். இராணுவ நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, தூக்கிலிடப்பட்டார். இராணுவ நீதிமன்றம் அதன் அமர்வுகளை தொடர்ந்தது. இத்தகைய துணிவுமிக்க 24 வீரர்கள் தண்டிக்கப்பட்டனர், அவர்களில் 21 பேர் சுடப்பட்டனர், 3 பேர் இரக்கமற்று பீரங்கிகள் மூலம் வெடித்துச் சிதறடிக்கப்பட்டனர். படைப்பிரிவின் அமைதியாகவிருந்த மூன்றில் இருபகுதியினர் ஏடலாபாத்திற்கு அணிவகுத்தனர், மேலும் அப்படைக்கான முழு வலிமையை அடையஇதர மூன்று குதிரைப்படைப் பிரிவுகளிலிருந்து ஆட்களைப் பணியமர்த்தியது. பின்னர் மூன்றாவது குதிரைப்படை போர் நடவடிக்கைகள் முழுதும் சர் ஹக் ரோஸ்சின் கீழ் பணி புரிந்தது.[சான்று தேவை]

வரலாற்றில் அவுரங்காபாத்தொகு

19-ஆம் நூற்றாண்டில் லாலா தீன் தயாள் & பிறர் எடுத்த, பிரிட்டிஷ் நூலகத்திலிருந்து திரட்டப்பட்ட புகைப்படங்கள். தக்காணத்தின் மேன்மை தாங்கிய ஹைதராபாத் நிஸாமின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் காட்சி .

புவியியல் மற்றும் காலநிலைதொகு

தட்பவெப்பநிலை வரைபடம்
ஔரங்காபாத்
பெமாமேஜூஜூ்செடி
 
 
2.8
 
29
12
 
 
2.1
 
32
14
 
 
3.3
 
36
19
 
 
3.5
 
38
22
 
 
24.4
 
38
25
 
 
114.2
 
34
24
 
 
115.6
 
30
22
 
 
119.6
 
29
21
 
 
121.6
 
30
21
 
 
60.8
 
32
19
 
 
10.7
 
30
15
 
 
6.5
 
28
12
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: MSN Weather
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.1
 
84
54
 
 
0.1
 
90
57
 
 
0.1
 
97
66
 
 
0.1
 
100
72
 
 
1
 
100
77
 
 
4.5
 
93
75
 
 
4.6
 
86
72
 
 
4.7
 
84
70
 
 
4.8
 
86
70
 
 
2.4
 
90
66
 
 
0.4
 
86
59
 
 
0.3
 
82
54
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

அவுரங்காபாத்திற்கான புவியியற் கோணம் வடக்கு 19° 53' 47" - கிழக்கு 75° 23' 54" ஆகும். நகரம் எல்லா திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது.

தட்பவெப்ப நிலை: அவுரங்காபாத்தில் வருடாந்திர தட்பவெப்ப நிலைகள் 9-இலிருந்து 40° சென்டிகிரேட் வரை பரவியிருக்கும். பெரும்பாலும் வருகை புரிவதற்கான வசதியான காலம் மழைக்காலமாகும். அக்காலம் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலானதாகும். எப்போதைக்கும் அதிகபட்ச உயர் தட்பவெப்பம் 1905-ஆம் ஆண்டில் மே 25 அன்று பதிவான 46° சென்டிகிரேட் (114° பாரன்ஹீட்) ஆகும். குறைந்தபட்ச தட்பவெப்பம் 1911-ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 2 அன்று பதிவான 2° சென்டிகிரேட் (36° பாரன்ஹீட்) ஆகும். குளிர் காலங்களில், மாவட்டமானது சில நேரங்களில் வட இந்தியா முழுவதுமாக கிழக்கே செல்லும் மேற்கத்திய குறுக்கீடுகளுடன் இணைந்த குளிர் காற்றால் பாதிக்கப்படும், அப்போது குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை சுமார் 2° சென்டிகிரேட்டிலிருந்து 4° சென்டிகிரேட் வரை கீழாகச் செல்லும் (35.6° பாரன்ஹீட்டிலிருந்து 39.2° பாரன்ஹீட்வரை).[3]

மழைப்பொழிவு: பெரும்பாலான மழைப்பொழிவு ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவ காலத்தில் ஏற்படுகிறது. மழையளவு 9.0 முதல் 693 வரையிலான மிமி/மாதம் வேறுபாட்டையுடையது. சராசரி வருடாந்திர மழையளவு 725 மிமி ஆகும்.

பொருளாதாரம்தொகு

நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் அவுரங்காபாத் ஒரு வர்த்தக மையமாக உருவானதென்று நம்புவதற்கு ஆதாரம் இருக்கிறது. அது வடமேற்கு இந்தியாவின் கடலையும் நிலத் துறைமுகங்களையும் தக்காணப் பிரதேசத்துடன் இணைப்பதற்குப் பயன்படும் ஒரு பெரிய வர்த்தகப் பாதையில் இருக்கிறது.

தொழில்துறைதொகு

நகரமானது ஒரு பெரிய பட்டு மற்றும் பருத்தி ஜவுளி உற்பத்தி மையமாகும். உள்ளூரில் விளைந்த பருத்தி மற்றும் சிறப்பான பட்டினால் உருவாக்கப்பட்ட ஒரு கலப்பின ரகம் ஹிம்ரூ ஜவுளி என பெயர்ப் பெற்றுள்ளது. காலப் போக்கில் பட்டுத் தொழில் மறைந்து போனது, ஆனாலும் சில உற்பத்தியாளர்கள் அம் மரபினை வாழச் செய்ய முயற்சித்து வெற்றிக் கண்டனர். பைத்தானி பட்டுப் புடவைகளும் கூட அவுரங்காபாத்தில் தயாரிக்கப்படுகின்றன. துணியின் பெயர் பைத்தான் எனும் சிறு நகரத்திலிருந்து பெறப்பட்டதாகும்.

அவுரங்காபாத் நகரத்தில் 1889 ஆம் ஆண்டில் 700 பேருக்கு வேலைவாய்பளித்த ஒரு பருத்தி-நூற்றல் மற்றும் நெசவு ஆலை, அமைக்கப்பட்டது. 1900 ஆம் வருடத்தில் ஹைதாராபாத்-கோதாவரி பள்ளத்தாக்கு இரயில்வே திறக்கப்பட்டதுடன் பற்பல விதை நீக்கி பருத்தி ஆலைகள் துவக்கப்பட்டன. ஜால்னாவில் மட்டும் 9 பருத்தி-விதை நீக்கி தொழிற்சாலைகளும் 5 பருத்தி-பிரஸ்களும் இருந்தன. அது தவிர இரு விதை நீக்கி ஆலைகளும் அவுரங்காபாத் மற்றும் கன்னட்டில் இருந்தன. மேலும் ஒரு எண்ணெய்-பிரஸ்சும் அவுரங்காபாத்தில் இருந்தது. பருத்தி-பிரஸ்களிலும் விதை நீக்கி பருத்தி தொழிற்சாலைகளிலும் 1901 ஆம் வருடத்தில் பணியமர்த்தப்பட்ட மொத்த எண்ணிக்கையிலான நபர்கள் 1,016 பேர்களாவர்.[5]

1960 ஆம் ஆண்டுகள் வரை, அவுரங்காபாத் ஒரு நகரமாக தொழில் துறையில் பின் தங்கிய நிலையில் நலிவுற்றிருந்தது. 1960 ஆம் ஆண்டில், மராத்வாடா பகுதி மகாராஷ்டிராவுடன் இணைக்கப்பட்டது. இச் சமயத்தில்தான் மராத்வாடா பகுதியின் தொழில்துறை முன்னேற்றம், பின் தங்கிய பகுதிகளின் நலனுக்காக வரையறுக்கப்பட்ட திட்டத்தின் முன் செலுத்துதலின் மூலம் துவங்கியது. மேலும் அப்போதுதான் மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம் (MIDC) நிலங்களை கையகப்படுத்தியும் தான் வளர்க்கத் துவங்கிய தொழிற் பேட்டைகளை நிறுவவும் செய்தது. அவுரங்காபாத் தற்போது மாநில அரசின் மாநிலத்திற்கான சமமான தொழில்மயமாக்கலை நோக்கிய உன்னதமான முயற்சிகளின் எடுத்துக் காட்டாக உள்ளது.

அவுரங்காபாத்தின் தொழிற்பேட்டைகளில் பல்வேறு இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர்:

 • குட் இயர்
 • பஜாஜ் ஆட்டோ
 • கோல்கேட்-பால்மோலிவ்
 • கென்ஸ்டார்
 • எண்ட்ரெஸ்+ஹாஸர்

 • MAN டீசல்
 • ஸ்டெர்லைட் ஆப்டிகல் டெக்னாலஜீஸ்
 • ஃப்ரேங்க்
 • கிரீவ்ஸ் காட்டன்
 • போர்ப்ஸ் கோகாக் லிமிடெட்

 • பேக்ஸ்டர்
 • லொம்பார்டினி இந்தியா
 • செமினிஸ் சீட்ஸ்
 • மாஹிகோ சீட்ஸ் / மான்சாண்டோ

நன்கறியப்பட்ட இதரப் பெயர்களில் சில: கார்வேர், அஜந்தா பார்மா, AMRI, கிளென்மார்க், லூபின், விப்ரோ, ஆர்க்கிட் பார்மா, எண்டூரன்ஸ் சிஸ்டம்ஸ், ருசா இஞ்சினியரிங், இந்தோ ஜெர்மன் டூல் ரூம், சீகே டாய்க்கின் லிமிடெட், காஸ்மோஸ் பிலிம்ஸ், NRB பேரிங்க்ஸ், ஹிண்டால்கோ-அல்மெக்ஸ் ஏரோஸ்பேஸ், கேன்-பேக் இந்தியா, வர்ராக், டேகர்பிராஸ்ட், பிரிகோரிஃபிகோ அல்லானா, நாத் சீட்ஸ் ஆகியவையாகும்.

அவுரங்காபாத் - ஜல்னா இடைநிலப்பகுதி நாட்டின் பெரிய விதை நிறுவங்கள் சிலவற்றின் இருத்தலால் விதைகளின் இந்திய தலைநகராகக் கருதப்படுகிறது. மஹிகோ (ஆய்வு& மேம்பாடு + உற்பத்தி), நாத் விதைகள் (ஆய்வு&மேம்பாடு + உற்பத்தி), செமினிஸ் விதைகள் (ஆய்வு&மேம்பாடு + உற்பத்தி) மற்றும் மான்சாண்டோ (ஆய்வு&மேம்பாடு தற்போது) ஆகியவை தொழிலிலுள்ள சில பெரியப் பெயர்களாகும்.[6]

வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள், மருந்து மற்றும் மதுபானம், நுகர்வோர் பொருட்கள், நெகிழி உற்பத்தி வழிமுறை,அலுமினியம் உற்பத்தி வழிமுறை விவசாயம் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் பல நிறுவனங்கள் அவுரங்காபாத்தில் அவர்களது உற்பத்தி தளங்களை வைத்துள்ளன. அவுரங்காபாத்தில், மருந்து நிறுவனங்களில் வோக்கார்ட்டின் ரெகாம்பினெண்ட் இன்சுலின் உற்பத்தி ஆலை ( வோக்கார்ட் உயிரியல் பூங்கா) யானது, இந்தியாவின் பெரிய உயிரியல் மருந்து ஆலையாக அமைந்துள்ளது. அவுரங்காபாத்திடம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் ITC வெல்கம்குரூப்பின் தி ராமா இண்டெர்நேஷனல், தி அஜந்தா அம்பாசிடர், தி தாஜ் ரெசிடென்ஸி, தி லெமண்ட்ரீ (முன்னாள் தி பிரெசிடெண்ட் பார்க்) மற்றும் அவுரங்காபாத் கிம்கானா போன்ற ஹோட்டல்களும் கூட உள்ளன.

ஷேந்திரா, சிக்கல்தானா மற்றும் வலூஜ் MIDC தொழிற்பேட்டைகள் நகரத்தின் வெளியே அமைந்துள்ள முக்கிய தொழிற் பகுதிகளாகும். அத்துடன் பல்வேறு முக்கிய பன்னாட்டு குழுமங்கள் உற்பத்தி அல்லது உற்பத்தி வழிமுறை ஆலைகளை நகரத்தின் உள்ளும் புறமும் அமைத்திருக்கின்றன. இந் நகரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள ஐந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs) உள்ளன. அவையாவன வாகனத்தில் (பஜாஜ்), மருந்து (இன்ஸ்பிரா பார்மா சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் வோக்கார்ட்), அலுமினியத்தில் ஒன்றாக (ஹிண்டால்கோ அலுமினியம்) மேலும் ஒன்றாக இன்ஸ்பிரா உயிரியல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியனவாகும். சமீபத்தில் அவுரங்காபாத் மகாராஷ்டிராவில் (புனே மற்றும் நாசிக்கிற்குப் பிறகு) மராத்வாடா வாகனக் கூட்டம் (MAC)[7] எனும் பெயருடைய வாகன கூட்டத்தை ஆதரிப்பதனால் மூன்றாவது வாகன கூட்ட நகரமாக ஆனது. மின்சார பொருட்கள் உற்பத்தியாளரான சீமென்ஸ் விரைவில் மெட்ரோ இரயில் பெட்டிகளை உற்பத்திச் செய்ய ஓர் ஆலையை நிறுவவுள்ளது.

நிதிச் சேவைகள்தொகு

1932 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று ஹைதராபாத் மாநிலத்தின் ஜல்னாவில் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா நிறுவப்பட்டப்போது மாவட்டத்தில் நவீன வங்கியானது துவங்கியதாகக் கூறப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு அதாவது 1933 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று அவுரங்காபாத்தில் நிறுவப்பட்டது.

பின்னர் 1945 ஆம் ஆண்டில் பாங்க் ஆஃப் ஹைதராபாத் 1350 வருடத்தைய ஹைதராபாத் ஸ்டேட் பாங்க் சட்டத்தின் படி நிறுவப்பட்டது. ஸ்டேட் பங்க் ஆஃப் ஹைதராபாத் முதன்மையாக அரசு வணிக நடவடிக்கைகளான அரசின் பணத்தைப் பெறுவது மற்றும் வைத்திருப்பது, மேலும் அரசு சார்பாகப் பணத்தை பிறர்க்கு அளிப்பது மற்றும் வழக்கமான பிற வணிக நடவடிக்கைகளான பரிமாற்றம், வெளிநாட்டு வரவு, முதலியவற்றையும் செய்கிறது. அரசின் பங்கு பத்திரங்களை வெளியிடும் அதன் பணியிலும் அதற்குகொரு முகவராக வேலைச் செய்கிறது.[8]

இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் பத்து வருடத்தில், அவுரங்காபாத் நிதி நடவடிக்கைகளில் ஒரு திடீர் பாய்ச்சலைக் கண்டது. பெரும்பாலான பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் கிளைகளைத் திறந்தன. அதில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சிட்டி பாங்க், டாய்ச்ச பாங்க், ஐசிஐசிஐ பாங்க், பாங்க் ஆஃப் இந்தியா, எச் டி எஃப் சி பாங்க், முதலியவை இருந்தன. அதோடு கூட வட்டார ஊரக வங்கிகளான (பெயர்கள்). அவுரங்காபாத் ஜல்னா கிராமின் வங்கி 1982 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 2008 ஆம் ஆண்டின் போது இந்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி அவுரங்காபாத் ஜல்னா கிராமின் வங்கி மற்றும் தானே கிராமின் வங்கி (இரண்டும் பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவால் ஆதரவளிக்கப்பட்டன) ஆகியவை இணைக்கப்பட்டு புதிய RRB மகாராஷ்டிரா கோதாவரி கிராமின் வங்கி எனும் பெயரில் தோற்றுவிக்கப்பட்டது. அதன் தலைமையகம் அவுரங்காபாத் நகரத்தில் இருந்தது. அது செயல்படும் பகுதிகளான ஒன்பது மாவட்டங்களின் பெயர்களாவன: அவுரங்காபாத், ஜல்னா, ஜல்கோவான், துலே, நந்தர்பார், நாசிக், அஹ்மெத்நகர், தானே மற்றும் ரைகாட் ஆகியவையாகும்.

நிர்வாகமும் அரசியலும்தொகு

உள்ளூர் நிர்வாகம்தொகு

அவுரங்காபாத் மாநகராட்சியே (AMC) உள்ளூர் குடிமை நிர்வாக அமைப்பாகும். அது ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி 1936 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, மாநகராட்சி குழுவின் பரப்பளவு சுமார் 54.5 கிமி2. அது மாநகராட்சி தகுதிக்கு 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் நாளிலிருந்து உயர்த்தப்பட்டது, மேலும் அதே சமயத்தில் விளிம்பிலுள்ள பதினெட்டு கிராமங்களை உள்ளடக்கி, அதன் நிர்வாகப் பகுதியின் மொத்த பரப்பளவை 138.5 கிமீ2 யாக ஆக்கிக்கொண்டு அதன் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டது.

நகரம் பிரபாக் எனும் பெயரிலான 99 தேர்தல் நகர வட்டங்களாக பிரிக்கப்பட்டு, மேலும் ஒவ்வொரு நகர வட்டமும் ஒரு மாநகராட்சி உறுப்பினரால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது (நகர்சேவக் என்று அழைக்கப்படுபவர்) ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் மக்களால் அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இரு குழுக்கள், பொதுக் குழு மற்றும் நிலைக் குழு ஆகியன மேயர் மற்றும் சேர்மன் ஆகியோரால் முறையே தலைமை வகிக்கப்படுகின்றன. AMC அடிப்படை வசதிகளான தண்ணீர், கழிவு நீர்க் கால்வாய் வசதி, சாலை, தெரு விளக்குகள், உடல்நலம் பேணும் மையங்கள், துவக்கப் பள்ளிகள் முதலியவைகளை அளிப்பதற்கு பொறுப்பாகும். நிர்வாகமானது ஓர் இந்தியக் குடிமைப்பணி அதிகாரியான மாநகராட்சி ஆணையரால் இதரப் பல்வேறு துறைகளின் அதிகாரிகளின் துணையுடன் நிர்வகிக்கப்படுகிறது.

மாநில மற்றும் மைய நிர்வாகம்தொகு

அவுரங்காபாத் மக்களவைக்கு ஓர் இடத்தைப் பங்களிக்கிறது. அவ்விடம் தற்போது சிவ சேனா கட்சியின் மக்களவை உறுப்பினரான சந்திரகாந்த் கைரேவினால் கைக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு சட்டப்பேரவையிலும் இடம் உள்ளது. அது அவுரங்காபாத் மேற்கு தொகுதியாகும். அதன் உறுப்பினர் இராஜேந்திர டர்டா (இந்திய தேசிய காங்கிரஸ்) அவுரங்காபாத் கிழக்குத் தொகுதியின் சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் மகராஷ்டிர அரசின் அமைச்சராக தொழில்துறை இலாகாவையும் வைத்திருக்கிறார்.[9] சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்ட தொகுதி ஏற்பாடுகளில் அவுரங்காபாத் ஒரு மக்களவைத் தொகுதியையும், மூன்று சட்டப் பேரவை தொகுதிகளையும், அதாவது, அவுரங்காபாத் கிழக்கு, அவுரங்காபாத் மேற்கு மற்றும் அவுரங்காபாத் மத்தி ஆகியவற்றையும் பங்களிக்கிறது. சமீப கால சட்டப்பேரவை உறுப்பினர்களாக - அவுரங்காபாத் (கிழக்கு) - காங்கிரஸ் (இ) யின் இராஜேந்திர டர்டா, அவுரங்காபாத் (மத்தி) - பிரதீப் ஜெய்ஸ்வால் (சுயேச்சை) மற்றும் அவுரங்காபாத்(மேற்கு) - சஞ்சய் ஷிர்சாத், சிவ-சேனா ஆகியோர் உள்ளனர் அவுரங்காபாத்தின் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் வரைபடங்கள்[10]

நீதித்துறைதொகு

பம்பாய் உயர் நீதிமன்ற அவுரங்காபாத் இருக்கை: பம்பாய் உயர் நீதி மன்றத்தின் அவுரங்காபாத் இருக்கை 1982 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அவுரங்காபாத் இருக்கையின் கீழ் துவக்கத்தில் மகராஷ்டிராவின் ஒரு சில மாவட்டங்களே இருந்தன. பின்னர் 1988 ஆம் ஆண்டில், அஹ்மத்நகர் மற்றும் இதர மாவட்டங்கள் இருக்கையில் இணைக்கப்பட்டன. அவுரங்காபாத் இருக்கையின் நிர்வாக பரப்பு அவுரங்காபாத், அஹமதுநகர், துலே, ஜல்னா, ஜல்கோவான், பீட், பர்பானி, லாத்தூர் மற்றும் உஸ்மனாபாத் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அந்த இருக்கையில் மகாராஷ்டிரா மற்றும் கோவா வழக்குரைஞர் கழக அலுவலகங்களும் உள்ளன. அவுரங்காபாத் உயர் நீதிமன்ற இருக்கை அவுரங்காபாத் விமான நிலையத்திலிருந்து ஏறக்குறைய 4 kiloமீட்டர்கள் (2 mi) மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. அவுரங்காபாத் இருக்கை 700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் வலுவைக் கொண்ட வழக்கறிஞர் கழகத்தினைக் கொண்டுள்ளது. அவுரங்காபாத் இருக்கையில் தற்போது 15 நீதிபதிகள் உள்ளனர். தற்போதைய இருக்கையின் கட்டடம் ஒரு மிகப் பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் மத்தியில் அமைந்துள்ள சிறந்த மாளிகையின் முதல் நிலைக் கட்டடம் ரூபாய் 3.50 கோடி செலவில், 6,202.18 சதுர மீட்டர்கள் பரப்பில் கட்டப்பட்டு 1995 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டது.

ஊடகமும் தகவல்தொடர்பும்தொகு

 • செய்தித்தாள்கள்: லோக்மத் அப்பகுதியின் முன்னணி செய்தித் தாளாகும். உள்ளூர் மொழியில் பதிக்கப்படும் இதர தினசரி செய்தித் தாள்கள் அவுரங்காபாத் டைம்ஸ், சாமனா, லோக்சட்டா, சகால், புன்யாநாக்ரி மற்றும் சஞ்வர்தா ஆகியவற்றுடன் மேலும் தேசிய செய்தித் தாளான தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் புனே பதிப்பும் கூட அங்கிருக்கிறது.
 • வானொலி: நகரம் நான்கு பண்பலை வானொலி நிலையங்களைக் கொண்டுள்ளது - ஆல் இந்தியா ரேடியோ, கியான்வாணி (பல்கலைக் கல்வி மற்றும் தொலைதூரக் கல்விக்கு சமர்பிக்கப்பட்டது) மற்றும் ரேடியோ மிர்சி 98.3 எஃப் எம், ரெட் எஃப் எம் 93.55, ரேடியோ சிட்டி 91.1 எஃப்.எம், ஆகியவற்றுடன் தனியார் செயற்கைக்கோள் வானொலி நிலையமான வேர்ல்ட்ஸ்பேஸ்சும் கூட கிடைக்கக்கூடியதாகவுள்ளது.
 • வலைத்தொடர்பு: வலைத்தொடர்பு வசதிகள் பல்வேறு சேவை அளிப்பாளர்களால் கொடுக்கப்படுகிறது. தற்போது ஆல் சிட்டியினால் வை-மாக்ஸ் (WI-FI) சும், BSNL முன்னணி வலைத் தொடர்பு வசதி அளிப்பவராகவும் உள்ளனர். மீடியா:பிராட்பேண்ட் இன்போசிஸ்டம்ஸ் Sify பிராட்பேண்டினை அளிக்கிறது, METAMAX மற்றும் Hathway [MCN] ஒரு பிராட்பேண்ட் சேவையைக் கொடுக்கின்றன.
 • வலைச் செய்திகள் அவுரங்காபாத்தின் முதல் வலைச் செய்தித் தளமானது, 1,500 இந்திய நகரங்களையும் 152 நாடுகளையும் உட்கொண்டிருக்கிறது WorldNewsEveryday.

போக்குவரத்துதொகு

சாலைதொகு

அவுரங்காபாத், மகாராஷ்டிராவின் மற்றும் இதர மாநிலங்களின் பல்வேறு பெரிய நகரங்களையும் சாலை வழியே நன்கு இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை NH-211 (துலே-அவுரங்காபாத்-சோலாப்புர்) நகரின் வழியேச் செல்கிறது. சாலை இணைப்பு உயர் தரமுள்ளது மேலும் புனே, நாக்புர், பீட், மும்பை ஆகியவற்றிற்கான சாலை இணைப்பு நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஒரு புதிய நாக்புர்-அவுரங்காபாத்-மும்பை நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது.

மாநில நகரங்களுக்கிடையிலான போக்குவரத்துதொகு

பயணிகள் போக்குவரத்து சேவையினை தேசியமயமாக்கும் திட்டம் ஸ்டேட் ஆஃப் ஹைதராபாத்தினால் 1932 ஆம் ஆண்டிற்கு முன்பே துவக்கப்பட்டது. அது பொதுச் சாலைப் போக்குவரத்து துறையின் முன்னோடிகளில் ஒன்றாகும். முதலாவதாக இரயில்வேயுடன் கூட்டாகச் செயலாற்றியது; அதற்குப் பின் தனித்த அரசுத் துறையானது. மாநிலங்களின் மறுசீரமைப்பிற்குப் பிறகு 1961 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல், மராத்வாடா மாநிலப் போக்குவரத்து, மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழகத்துடன் இணைக்கப்பட்டது.[11] "மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்து" (MSRTC) மற்றும் எண்ணற்ற இதர தனியார் பேருந்து நிர்வாகத்தினர் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்து சேவையை அளிக்கின்றனர்.

நகரப் பகுதிகளுக்கான போக்குவரத்துதொகு

"அவுரங்காபாத் நகராட்சி போக்குவரத்து" (AMT) எனும் ஓர் உள்-நகரப் பேருந்து சேவையானது நகரத்தின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது. மேலும் அதிகத்தொலைத் தூர-புறநகர தொழிற் பேட்டைப் பகுதிகளையும் இணைக்கிறது. AMT (அவுரங்காபாத் நகராட்சிப் போக்குவரத்து) உள்-நகர பேருந்துகள் நகரின் வெளிப்பகுதிகளையும் சேர்த்து நகர் முழுதும் பறக்கின்றன. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளையும், அருகிலுள்ள புறநகர் பகுதிகளையும் சேர்த்துக் கொண்டுள்ளன. AMT பேருந்து சேவை செலவைத் தாங்கக்கூடிய வகையிலும் (கட்டண அளவில்), திறன்மிகுந்ததாகவும் பாதுகாப்பானதாகும் உள்ளன.[சான்று தேவை] AMT பேருந்துகள் காலை மற்றும் மாலை நெருக்கடி நேரங்களில் கூட்டம் நிரம்பி வழியும்படியுள்ளது. நகரம் முழுதும் தொலையளவுக் கருவியுடன் கூடிய ஆட்டோ ரிக்ஷாக்கள் பறக்கின்றன. கட்டணங்கள் ஒரு தொலையளவுக் கருவியின் அடிப்படையிலானவை; ஓட்டுநரிடமிருக்கும் கட்டண அட்டையின் மூலம் கணிக்கப்படுகிறது.

வான்வழிதொகு

தற்போது அவுரங்காபாத்தில் சர்வதேச விமான நிலையமுள்ளது. சமீபத்தில் ஹஜ் புனிதப் பயணத்திற்குச் செல்லும் அனைத்து மக்களுக்கும் விமானங்கள் கிடைக்கச் செய்யப்பட்டன. அவுரங்காபாத் விமான நிலையம் டெல்லி, உதய்பூர், மும்பை, ஜெய்ப்பூர் அதே போல ஹைதராபாத் ஆகிய இடங்களை இணைக்கும் விமான சேவைகளைக் கொண்டுள்ளது.

இரயில் சேவைதொகு

வரலாறுதொகு

ஹைதராபாத்-கோதாவரி சமவெளி இரயில்வே ஹைதராபாத் நிஸாமினால் நிறுவப்பட்டது. நிஸாமின் கேரண்டீட் ஸ்டேட் இரயில்வேயின் (Guaranteed State Railway) பகுதியாக, ஹைதராபாத் மாநில உத்திரவாதத்தின் கீழ் சொந்தமாகச் செயல்படும் ஒரு நிறுவனமாகும். ஹைதராபாத்-கோதாவரி சமவெளி இரயில்வேயின் மூலதனம் மறுமீட்பு அடமான கடன் பத்திரங்களின் வெளியீடு மூலம் திரட்டப்பட்டதாகும்.

ஹைதராபாத்-கோதாவரி சமவெளி இரயில்வே (மீட்டர் கேஜ்) ஹைதராபாத் நகரம் முதல் மன்மாட் வரை 391 மைல்களுக்கு வடக்கு-மேற்கு திசையில் கிரேட் இந்தியன் பெனின்சுலா இரயில்வேயின் வட-கிழக்கு பிரிவில் ஓடியது. அது 1899 மற்றும் 1901 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது.

தற்போதைய காலம்தொகு

அவுரங்காபாத் (நிலையத்தின் குறியீடு: AWB ) இரயில் நிலையம் தென் மத்திய இரயில்வேயின் (SCR) நாண்டேட் வட்டாரத்தின் கச்சிகூடா-மன்மாட் பிரிவில் அமைந்துள்ள இரயில் நிலையமாகும். மன்மாட்-கச்சேகூடா அகன்றப் பாதை இரயில்வே இருப்புப் பாதை வரிசை அவுரங்காபாத் மாவட்டத்தின் போக்குவரத்திற்கு முக்கிய உயிர் நாடி போன்றது. அது மன்மாட்டிலுள்ள மும்பை-புஷாவல்-ஹவ்ரா நெடுஞ்சாலை வழியில் காணப்படுகிறது. இந்த இரயில்வே இருப்புப் பாதை வரிசையின் முக்கியத்துவம் மராத்வாடா பகுதியின் வளமான விவசாய நிலப்பகுதியின் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது எனும் உண்மையில் பொதிந்துள்ளது. அது மும்பை மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள செகந்திராபாத் ஆகியவற்றிற்கிடையிலான இணைப்பாகவும் சேவையளிக்கிறது. இந்த இருப்புப் பாதை வரிசை மட்டுமே முன்பு போக்குவரத்திற்கான வழியென இருந்ததற்கு மராத்வாடா பகுதியில் நல்ல சாலைகள் இல்லை என்பதே காரணமாகும். இந்த இரயில்வே வழி 1900 ஆம் ஆண்டில் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.

2003 ஆம் ஆண்டில் வட்டார ஏற்பாடுகளுக்குப் பின்னர், அது ஹைதராபாத் வட்டாரத்தின் இரு பிரிவாக பிரிவதைக் கண்டது, அவுரங்காபாத் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட SCR இன் நாண்டெட் வட்டாரத்தின் (NED) கீழ் வருகிறது. அவுரங்காபாத்திற்கு, மன்மாட், அவுரங்காபாத், நாண்டெட், பர்பானி, பார்லி வைஜ்நாத், லத்தூர், உஸ்மனாபாத், கங்காகேட், முட்கேட், அடிலாபாத், நாக்புர், பசார், நிஸாமாபாத், நாசிக், மும்பை, புனே, தாவுந்த், மஹ்பூப்நகர், கர்நூல், கடப்பா, ரேணிகுண்டா, திருப்பதி, காட்பாடி, ஈரோடு, மதுரை, போபால், குவாலியர் மற்றும் கச்சிகூடா (KCG) ஆகியவற்றுடன் இரயில் இணைப்பு உள்ளது. ஆயினும் அங்கு இன்னும் மக்களிடமிருந்து இந்தோர், லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் இதர பெரிய இந்திய நகரங்களுக்கு நேரடி இரயில் இணைப்பு கோரும் கோரிக்கைகள் உள்ளன. கச்சிகூடா மற்றும் மன்மாட் இடையிலான அஜந்தா எக்ஸ்பிரஸ் அம்ரித்சர் மற்றும் நாண்டெட்டிற்கு இடையிலான சச்காண்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை இந்த நிலையத்தின் வழியே செல்லும் கௌரவமிக்க இரயில்களாகும். அந்த இரயில்கள் அதனை போபால் சந்திப்பு, நாக்பூர், ஜான்சி, குவாலியர் மற்றும் நியூ டெல்லி ஆகியவற்றுடன் இணைக்கிறது.

மும்பைக்கு போய் வருவதற்கு மொத்த பயண நேரமாக 6½ மணி நேரங்கள் எடுக்கும் வேகமான மற்றும் மிக வசதியான அவுரங்காபாத் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் இரயிலே மக்களின் விருப்பத்தேர்வாக உள்ளது. மும்பைக்கும் அவுரங்காபாத்திற்கும் இடையில் மூன்று இரவு நேர இரயில்களும் இரு பகல் நேர இரயில்களும் கூட பயணிக்கின்றன.

அவுரங்காபாத் பிற நகரங்களை விட HYB க்கு (ஹைதராபாத்திற்குச் செல்ல) அதிக எண்ணிக்கையிலான இரயில்களைக் கொண்டுள்ளது. அஜந்தா எக்ஸ்பிரஸ், செகந்திராபாத் பை-வீக்லி எக்ஸ்பிரஸ், காகிநாடா எக்ஸ்பிரஸ், தேவகிரி எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் பாசஞ்சர், மன்மாட்-கச்சிகூடா பாசஞ்சர், ஓக்கா-இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் — இவையனைத்து இரயில்களும் AWB யை HYBt யுடன் இணைக்கின்றன.

கல்விதொகு

அவுரங்காபாத் புனேயின் அருகாமையின் காரணத்தினால் தக்காணத்தின் பெரிய கல்வி மையமாக மாற்றமடைந்துள்ளது. அவுரங்காபாத் மாநகராட்சியினால் நடத்தப்படும் பள்ளிகளும் தனியார் மற்றும் அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான பள்ளிகளும் அவுரங்காபாத்திலுள்ளன.[12] அவுரங்காபாத் உயர் நிலைக் கல்விக்கு பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைக் கொண்டுள்ளது. அதனிடம் ஐந்து பொறியியல் கல்லூரிகள் உள்ளன (ஒரு அரசு பொறியியல் கல்லூரி உட்பட), ஒரு அரசு மருத்துவக் கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவையும் உள்ளன[சான்று தேவை]. DOEACC யின் ஒரு மண்டல மையமும் கூட இங்குள்ளது.

அவுரங்காபாத் பாசறை, சாவ்னிதொகு

அவுரங்காபாத் நகரத்தில் பாசறைப் பகுதியே பசுமை மிகுந்தப் பகுதியாகும். அதனிடம் ஒன்பது துளைகளுடைய கோல்ஃப் மைதானம் உள்ளது. மேலும் மராத்வாடா பகுதியின் ஒரே கோப்ஃப் மைதானமாகும். அவுரங்காபாத் பாசறை (சாவ்னி) 1819 ஆம் வருடத்தில் நிஸாம் படைகளுக்கு பயிற்சியளிக்க ஐரோப்பிய அதிகாரிகளுடன் துவங்கப்பட்டது. 1903 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் மற்றும் நிஸாம் இடையில் ஓர் உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது. மேலும் ஒரு முறையான பாசறையை நிறுவவும் முடிவு செய்யப்பட்டது. பிகானீர் ரியாஸாதிற்குட்பட்ட அனைத்து கிராமங்களும் (பெயர்களாவன கரன்புரா, பாதாம்புரா, கேசார்சிங்புரா மற்றும் கோன்கன்வாடி) பிரிட்டிஷ்ஷாருக்கு கைமாற்றப்பட்டன. இன்று பாசறை 2584 ஏக்கர்களில் பரந்து விரிந்து, 2001 மக்கட்தொகையின்படி 19274 குடிமக்களுடன் உள்ளது.[13]

சுற்றுலா ஈர்ப்புக்கள்தொகு

 • பீபீ கா மக்பாரா : நகரத்திலிருந்து 3 கிமீ தூரத்திலுள்ளது பீபீ கா மக்பாரா, அவரங்கசீப்பின் மனைவியான ரபியா-உத்-துரானியின் புதையிடம் ஆகும். அது ஆக்ராவிலுள்ள தாஜ்ஜின் ஒத்த சாயலையுடையது, மேலும் அதன் ஒத்த பாணியினால் தக்காணத்தின் மினி தாஜ் என அறியப்படுகிறது. மக்பாரா பழமையான வடிவுடைய குளங்கள், நீரூற்றுக்கள், நீர்க் கால்வாய்கள், அகன்ற பாதை வழிகள் மற்றும் கூடாரங்கள் ஆகியவற்றுடன் கூடிய பரந்த வெளியுடனான, முறையாக திட்டமிட்ட முகலாய பூங்காவின் மத்தியில் நிற்கிறது. கல்லறை மாடத்தின் பின்புறம் ஒரு சிறிய தொல்பொருள் ஆராய்ச்சி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
 • பாஞ்சக்கி (நீர் ஆலை) : அதொரு 17 ஆம் நூற்றாண்டு நீர் ஆலை நகரத்திலிருந்து 1 கிமீ தூரத்திலுள்ளது. ஆர்வத்தைத் தூண்டுகிற நீர் ஆலை, பாஞ்சக்கி அதன் நிலத்தடி நீர்க் கால்வாய்க்கு பிரபலமானது, அது 8 கிமீ க்கும் மேல் ஊடுருவி மலைகளுள்ள அதன் மூலாதாரத்திற்குச் செல்கிறது. கால்வாய் வசீகரிக்கும் 'செயற்கை' நீர் வீழ்ச்சியில் முடிவடைகிறது. நீர் வீழ்ச்சி ஆலைக்குச் சக்தியளிக்கிறது. வேலியினுள்ளே நிலைபெற்றிருக்கும் மசூதியின் அழகு தொடர்ச்சியான 'நடனமாடும்' நீரூற்றுக்களால் மேம்படுத்தப்படுகிறது.
 • அவுரங்காபாத்தின் வாயில்கள் : அவுரங்காபாத்தை இந்தியாவின் பல இதர நடுக்கால நகரங்களிலிருந்து தனித்து நிற்கச் செய்வது அதன் 52 'வாயில்கள்' ஆகும். அவை ஒவ்வொன்றுக்கும் ஓர் உள்ளுர் வரலாறு உள்ளது அல்லது அவற்றுடன் தனி நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். பல மக்கள் அவுரங்காபாத் "வாயில்களின் நகரம்' என அறியப்படுவதையும் கூட அறியார்.
 • அவுரங்காபாத் குகைகள் : 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள, கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தைய காலத்தினைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய 12 புத்தமத குகைகள் மலைகளுக்கு நடுவே கூடு அமைத்ததுப் போன்றுள்ளன. குகைகளின் உருவங்களின் மூலம் பொருள் விளக்கங்களிலும் மற்றும் கட்டங்களின் அமைப்பிலும் காணப்படும் தாந்த்ரீக செல்வாக்கே குறிப்பிட்ட ஆர்வம் ஏற்படுத்துவனவாகும். ஒருவர் இந்த முனையிலிருந்து நகரத்தின் பரந்த காட்சியையும், கம்பீரமான மக்பாராவையும் காணும் விருந்தினைப் பெறலாம்.
 • கிரீஷ்னேஷ்வர் கோயில் : எல்லோரா குகைகளிலிருந்து அரை கிலோமீட்டரும் அவுரங்காபாத்திலிருந்து 30 கிமீ தூரத்திலும் உள்ளது. தற்போதைய கட்டமைப்பு ஒரு 18 வது நூற்றாண்டு கோயிலாகும். அது தனிச் சிறப்பு வாய்ந்த கட்டடக்கலையையும் சிற்ப செதுக்கல்களையும் அளிக்கிறது. இந்த இடம் இறைவன் சிவன் வழிபடப்படும் மகாராஷ்டிராவின் ஐந்து ஜோதிலிங்க ஸ்தலங்களில் ஒன்றாகும். அருகிலுள்ள அஹில்யா தேவி ஹோல்கர் கோயில் கட்டாயமாகக் காணப்பட வேண்டிய ஒன்றாகும்.
 • குல்தாபாத் : எல்லோராவிலிருந்து 3 கிமீ தூரத்திலுள்ள மதிற்சூழ் நகரமாகும். குல்தாபாத் நகரம் தக்கானின் மிகப் பிரபலமான துறவிகளின் கோயில்களைக் கொண்டுள்ளது. துவக்கத்தில் அது ரவ்ஸா சொர்க்கத்தின் பூங்கா எனும் பொருள்படும்படி அறியப்பட்டது. அது துறவிகளின் சமவெளி அல்லது அழியாத்தன்மையின் உறைவிடம் என அறியப்பட்டது, ஏனெனில் 14 ஆம் நூற்றாண்டில், பல சூஃபி துறவிகள் இங்குத் தங்குவதற்கு விரும்பினர். மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் மற்றும் அவரது நம்பிக்கைக்குரிய தளபதி கொமார்-உத்-தின் கான், ஹைதாராபாத்தின் முதல் நிஸாம் அஸாப் ஜா I ஆகியோரது கல்லறை இந்த நகரிலுள்ளது, அதே போல மாலிக் அம்பாரின் கல்லறையும் உள்ளது.
 • பிதல்கோரா குகைகள் : அவுரங்காபாத்திலிருந்து 78 கிலோமீட்டர்கள் தொலைவில் சஹ்யாட்ரிஸ்சின் சத்மலா தொடர்களில் கூடு அமைத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது. இப்பகுதியில் 13 குகைச் சரணாலயங்கள் பதிக்கப்பற்றுள்ளன. இத்தகைய புத்த மடாலயங்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை காலத்தில் பிந்தையதாக உள்ளன. இத்தகைய நினைவிடங்களில் வளமான சிற்ப செதுக்கல்களுடன் விரிவான விவரங்களுடனும் காணப்படுகின்றன.
 • தௌலதாபாத் கோட்டை : முன்னர் தேவ்கிரி என அறியப்பட்ட இவ்விடம் அவுரங்காபாத்திலிருந்து 13 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் நகரம் எனவும் கூட அழைக்கப்படுகிற இது கவர்ச்சிகரமான மலையின் மீது நன்கு அமைக்கப்பட்ட வியத்தகு 12 ஆம் நூற்றாண்டு கோட்டைக்கு உறைவிடமாகவுள்ளது. இந்த வெல்ல இயலாத கோட்டை 5 கிலோ மீட்டர் பரப்பிற்கு கடினமான மதிற்சுவரையும் கடுஞ்சிக்கல் வாய்ந்த தொடர்ச்சியான அரணையும் தற்புகழ்ச்சியுடன் கொண்டுள்ளது.
 • அவுரங்காபாத் இடிபாடுகள் : நௌகாந்தா அரண்மனை: அஸாப் ஜா மற்றும் கில்லா ஆரக் அரண்மனைகளே மிகத் தெளிவாய்த் தெரிகிற இடிபாடுகள் ஆகும். முர்டாஸா நிஸாம் ஷா II அமைச்சரான மாலிக் அம்பார் (1546-1626 கி.பி.) தன்னை கிர்க்கியாக இருந்த நவீன அவுரங்காபாத்தில் நிலை நிறுத்திக் கொண்டார். மேலும் எண்ணற்ற கட்டிடங்களையும் மசூதிகளையும் எழுப்பினார். நௌகோண்டா அரண்மனை அவரால் 1616 ஆம் ஆண்டில் உயர்ந்துச் செல்லும் நிலப்பகுதியின் உச்சத்தில் கட்டப்பட்டது. இதற்கு பெரும் நுழைவாயில் வழிவிடுகிறது, அதன் மீதாக பர்கால் என அழைக்கப்படும் நௌபத்கானா நல்ல நிலையில் அமைந்துள்ளது. ஒரு கூற்றின்படி அவுரங்கசீப்பின் சபையிலுள்ள ஆலம் கான் எனும் அடிமை இந்த அரண்மனைக்கு கூடுதலாக கட்டடங்களைச் சேர்த்தார்; மேலும் மேற்கொண்ட சேர்க்கைகள் பின்னர் ஆஸாப் ஜா I வினால் செய்யப்பட்டது. அருகிலுள்ளதொரு கட்டடத் தொகுப்புக்கள் நசீர் ஜங்கிற்காக ஒரு பிரிவுற் சுவரினால் மறைக்கப்பட்டது. நௌகோண்டா அரண்மனை நிஸாம் அலி கானால் கூட அவர் அவுரங்காபாத்தில் இருந்த போது பயன்படுத்தப்பட்டது. முழு இடமும் தற்போது முற்றிலுமாக இடிபாடுகளாக உள்ளன. உள்ளார்ந்த கட்டிடங்கள் ஐந்து ஸனானாக்களைக் கொண்டுள்ளன, ஒரு திவானி-ஆம், ஒரு திவானி காஸ், ஒரு மஸ்ஜித் மற்றும் ஒரு கச்சேரியுடன், ஒவ்வொன்றும் ஒரு பூங்கா மற்றும் ஒரு நீர்த்தொட்டியுடனும் உள்ளன. தேவன்கானாவின் மத்தியப் பகுதியின் சுவர்கள் மற்றும் ஒரு ஹமாம் அல்லது சுடு நீர்க் குளியலறைக் கட்டடத்துடன் இணைக்கப்பட்டது ஆகியவை பாதுகாக்கப்பெற்று நல்ல நிலையில் உள்ளன. இருப்பினும், மர வேலைப்பாடுகள் மற்றும் குழைகாரை அரைச்சாந்து ஆகியன போய்விட்டன. திவானி-ஆம் என்பது பெரிய நாற்கரம் போன்ற கட்டடம் ஆகும். அதிகம் இடிபாடுகளிலுள்ளது. அருகிலுள்ள கச்சேரி நிஸாமின் காடி ஒன்றை உள்ளடக்கியுள்ளது. அரசரின் நாற்காலி அறையில் அசல் சொந்த உடைமைகள் வைக்கப்பட்டுள்ளன.
 • கிலா-ஏ-ஆர்க் : 1692 ஆம் ஆண்டில், அவுரங்கசீப் அரண்மனையொன்றை கட்ட ஆணையிட்டார், மேலும் அதற்கு கிலா அராக் என பெயர்ச் சூட்டினார். கிலா ஆர்க் அல்லது கோட்டையால் சூழ்ந்துகொள்ளப்பட்ட இடைவெளி கிட்டத்தட்ட நகரத்தின் மெக்கா மற்றும் டெல்லி வாயில்களின் இடையேயான முழு மைதானத்தையும் உட்கொண்டிருக்கிறது. அது நான்கு அல்லது ஐந்து வாயில்களையும் ஒரு நாகர்கானாவையும் இசைக் கலைஞர்களுக்காக வைத்துள்ளது. சுவர்கள் போர்ப்-பாதுகாப்பு மற்றும் சுடுவதற்கு ஏற்றத் துளைகளுடனும் சுவர் முனைகளில் அரை-வடிவ கோபுரங்களையும், ஒருகாலத்தில் அதன் மீது பீரங்கிகள் ஏற்றப்பட்டிருந்தனவாகவும் இருக்கின்றன. உட்பகுதி நகரச் சுவர்களில் உள்ளது போன்ற உட்பகுதிகளைக் கொண்டிருக்கிறது. நுழைவாயிலின் வலது புறம் ஓர் உயர்ந்த மேற்கூரை சூழ்ந்துகொள்ளப்பட்ட நிலத்தின் முழு நீளத்திற்கும் நீடித்துக் கொண்டுள்ளது. இதில் பரந்த தோட்டத்தின் மற்றும் பாதி இடிந்த குளங்கள் மற்றும் கோட்டையின் மீதம் ஆகியவற்றை இப்போதும் விட்டுச் சென்ற அடையாளங்களாகக் காணலாம். ஆம் காஸ் அல்லது தர்பார் ஹால், ஜூம்மா மசூதி ஆகியன மட்டுமே மீதமுள்ள ஆர்வமூட்டும் இடங்களாகும். மஸ்ஜித்தின் அருகிலுள்ள நிலப்பகுதியின் ஒரு துண்டானது விளையாட்டிற்காக சுவர் எழுப்பி பிரிக்கப்பட்டுள்ளது. நிலப்பகுதிக்கு வழிவிடும் வாயிற்பகுதி 1659 கி.பி. எனக் காலம் பொறித்து வைத்தலைக் கொண்டுள்ளது. தக்த் அல்லது அரசர் அவுரங்கசீப்பின் நாற்காலி அறை ஒரு பூங்கா கூடாரத்திலுள்ளது. மேலும் ஒரு உரை நிகழ்த்தும் மேடை போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. அதொரு தெளிவான மற்றும் எளிய வகையினதாகும்.
 • பர்ரா தார்ரி : சலார் ஜங்கின் அரண்மனை மற்றும் கோவிந்த் பக்ஷ்ஷின் மஹால் ஆகியவை பைத்தானுக்கும் ஜாஃபர் கேட்டிற்கும் இடையிலுள்ளது. டாம்ரி மஹால் மற்றும் இவாஸ் கானின் பர்ரா தார்ரி ஆகியவை டெல்லி வாயிலுக்கு அருகிலுள்ளது. மஹால் தற்போது மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தினால் பயன்படுத்தப்படுகிறது. பர்ரா தார்ரியும் அருகிலுள்ள கட்டடங்களும் இவாஸ் கானால் எழுப்பப்பட்டன. ஒரு மூடப்பட்ட கால்வாய் கட்டடங்களின் ஒன்றின் மீது கடந்துச் செல்கிறது மற்றும் பழங்காலங்களில் நீர் கீழே பல நீரூற்றுக்களைக் கொண்டிருக்கிற செவ்வக கோட்டையில் மழைப் போல் தாரையாய் பொழியும். அது தற்போது செயலற்றுள்ளது.
 • தாம்ரி மஹால் : அருகிலுள்ள தாம்ரி மஹால் பர்ரா தார்ரி முடிவடைந்தப் பிறகு கட்டப்பட்டது. அதற்கு அப்பெயரானது பர்ரா தார்ரியில் பணியமர்த்தப்பட்ட வேலையாட்களின் தாம்ரியின் பங்களிப்பு மீது விதிக்கப்பட்ட வரியினால் வந்தது. தூண்கள் மீது அமைந்த வளைவுகளின் வரிசையுடைய வெளிப்புறத் தாழ்வாரம் முன்புறத்தில் கட்டடத்தின் புகுமுக மண்டபம் போன்று நீட்டிக் கொண்டிருக்கிறது. மேலும் ஐந்து நத்தைப் போன்ற வளைவுடைய வில்வளைவுகளைக் கொண்டுள்ளது. பின்புறம் வரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்ட பல்வேறு அளவுகள் கொண்ட பத்து அறைகள் உள்ளன. வலது புறத்தில் ஏழு சிறிய அறைகள் வரவேற்பறைகளுடனுள்ளன. வலது மூலையில் நுழைவாயிலுள்ளது. அருகில், மற்றவற்றை விட சிறிது உயரமான நிலையில் மற்றொரு சிறிய ஆனால் துண்டிக்கப்பட்ட கட்டிடமுள்ளது. கூரை வில்வளைவுகளைக் கொண்டுள்ளது. அங்கு இரு கோட்டைகள், ஒன்று தாழ்வாரம் முன்பும் மற்றொன்று கட்டிடத்திற்கு வெளியேயுமுள்ளது.
 • காலி மஸ்ஜித், ஜூம்மா மஸ்ஜித் : மசூதிகளிடையே, மாலிக் அம்பாரால் கட்டப்பட்ட ஜூம்மா மஸ்ஜித் மற்றும் காலி மஸ்ஜித்,மேலும் ஷா கஞ்ச் மசூதி ஆகியவை மேன்மை வாய்ந்தவை. மாலிக் அம்பார் ஏழு மசூதிகளைக் கட்டியுள்ளார் எனக் கூறப்படுகிறது. அவை காலி மஸ்ஜித் எனும் பொதுப் பெயரில் அழைக்கப்படுகின்றன. காலி மஸ்ஜித் ஜூனா பஜார் பகுதியிலுள்ளது மற்றும் 1600 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்டது. அதொரு ஆறு தூண் கொண்ட கல் கட்டடமாக உயர்வான பீடத்தில் நின்றுகொண்டிருக்கிறது. மாலிக் அம்பாரின் ஜூம்மா மஸ்ஜித் கிலா அர்ராக் அருகிலுள்ளது. அது ஐந்து வரிசைகளுடைய ஐம்பத்து நான்கிற்கு மேற்பட்ட தூண்களுடன் வரிசையுடையது, மேலும் வில் வளைவுகளையுடைய அமைப்பினால் இணைக்கப்பட்டது, அவை கட்டடத்தை இருபத்தியேழு சமமான தொகுதிகளாகப் பிரிக்கின்றன, ஒவ்வொன்றும் எளிமையான ஆனால் நேர்த்தியான வடிவுடைய கூம்பு வடிவிலான வில்வளைவுகளினால் மூடப்பட்டிருக்கின்றன. முன்புறம் கூரிய முனையுடைய ஒன்பது வில்வளைவுகள் உள்ளன. இவற்றில், ஐந்து மாலிக் அம்பாரால் 1612 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்டன, மேலும் மீதமுள்ள நான்கு அவுரங்கசீப்பினால் சேர்க்கப்பட்டன. பீடம் உயர்வானது மற்றும் பல சந்தைப் பக்கம் திறந்திருக்கும் அறைகளைக் கொண்டுள்ளது. சாய்வான சுவர் ஏந்தற்பலகையினால் முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் பதுங்கு குழி அரண் நன்கு துளையிடப்பட்டுள்ளது. மூலையிலுள்ள கோணங்கள் எண்கோண வடிவிலான சுரங்க வாயில்களைக் கொண்டுள்ளது, வட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மற்றும் சிறிய கவிகைமாடங்களையும் பெற்றிருக்கிறது. மசூதியின் வடிவம் நல்ல ரசனையோடு உள்ளது. சாதாரணமானது ஆனால் உறுதியானது, மேலும் அதிகமாக பீஜப்பூரின் கட்டடங்களைப் போல் உள்ளது. மசூதியின் முன்னுள்ள முற்றம் சுற்றுலாப் பயணிகளுக்காக மூன்று பக்கங்களில், திறக்கப்பட்ட முன்புறம் உடைய கட்டடங்களைக் கொண்டுள்ளது. முற்றத்தின் நடுவே கோட்டையுள்ளது, அது பிரபலமாக நஹார் அம்பேரி எனப்படும் மாலிக் ஆம்பெர் கால்வாயிலிருந்து தனது நீர் அளிப்பைப் பெறுகிறது.
 • ஷாகஞ்ச் மஸ்ஜித் : அவுரங்காபாத்தின் பெரிய சந்தை சதுக்கத்தினை ஆக்ரமித்தவாறு இருப்பது அகன்ற ஷா கஞ்ச் மசூதியாகும், இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் காணப்படக்கூடிய அதன் வகையிலான சிறந்த மாளிகைகளில் ஒன்றாகும். அது சுமார் 1720 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். காஃபி கான், முண்டகாபு-இல்-லூபாப் நூலாசிரியர் தக்காணத்தின் அரசப்பிரதிநிதியாக சய்யாத் ஹுசைன் கானின் காலத்தை குறித்து கூறுகிறார் "ஷா கஞ்ச் சிலுள்ள நீர்த்தேக்கம் சய்யாத் ஹுசைன் அலியினால் துவங்கப்பட்டது, மேலும் ஆஸூ-ட் தௌலா இர்ஸா கான் கட்டடங்களையும் மசூதியையும் அகலப்படுத்தியும் உயர்த்தியிருந்தாலும் இன்னும் சய்யாத் ஹுசைன் அலியே விரிந்த நீர்த்தேக்கத்தை துவக்கியவர், அது கோடைக்காலத்தில் நீர் பற்றாக்குறையுடன் இருக்கும்போது குடிமக்களின் பாதிப்பினை அகற்றுகிறது". மசூதியானது உயர்த்தப்பட்டதொரு தளத்தில் உள்ளது, வெளிப்புறத்தில் மூன்று கடைகளும் உள்ளன; அதே போல நான்காவது அல்லது வடக்கு புறம் திறந்துள்ளது மற்றும் வரிசையான படிகளால் உயர்த்தப்பட்டது கட்டடத்தின் முகப்பிற்கு அறிகுறியாயிருப்பது தூண்களின் மீதமைந்த ஐந்து நத்தை வடிவிலான வளைவுகள், இந்தோ-சாராசானிக் பாணியிலமைந்துள்ளன. மேலும் கல்தூண்களால் தாங்கி நிற்பனவாகும். இப் பக்கம் சற்று முன் துருத்தியுள்ளது; மேலும் உட்புறம் இருபத்தி நாலு தூண்களைக் கொண்டுள்ளது, அது ஆறு சதுரத் தூண்களுடன் பின்புறச் சுவரில் உள்ளது, சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பகுதி கண்கவரும் குமிழ் வடிவ கவிகைமாடத்தினால் மூடப்பட்டுள்ளது, அதன் அடிப்புறம் முறுக்கப்பெற்ற சுருக்கப்பட்ட தாமரை இலை குறுகிய அழகிய இழையில் கட்டப்பட்டுள்ளது; மேலும் உச்சப் பகுதியில் நேர்த்தியான கோபுரக் கலசமுள்ளது. காம் காஸ் என அழைக்கப்படும் தூண்கள் மீதமைந்த துறவி மடம் கிழக்கு மேற்கு பிரிவுகளில் அமைந்து, ஒவ்வொரு பக்கத்திலும் ஐந்து வளைவுகளைக் கொண்டுள்ளது, முதன்மைக் கட்டடம் போன்று கட்டப்பட்டது, ஆனால் தரைமட்ட கட்டடமாகும். உட்புறம் தரைமட்ட வளைவுகளால் இணைக்கப்பட்டுள்ளது; மேலும் கூரை தொடர்ச்சியான சிறிய கவிகை மாடங்களால் அமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் நான்கு தூண்களால் தாங்கி நிறுத்தப்பட்டுள்ளது. முதன்மைக் கட்டடத்தின் முனைகளிலும், மேலும் காம் காஸ்சின் முனைகளின் முடிவில் பள்ளி வாயிற்தூபிகள் உள்ளன. முன் புறமுள்ள முற்றம் இரு பெரிய கோட்டைகளைக் கொண்டுள்ளது. நுழைவாயில் சிறிய மசூதி வடிவிலுள்ளது, கூரான வளைவையும் இரு பள்ளிவாயிற் தூபிகளுள்ளன.
 • சௌக் மஸ்ஜித் : 1655 ஆம் ஆண்டில் ஷாயிஸ்தா கான் அவுரங்கசீப்பின் தாய் மாமனால் கட்டப்பட்டது. அதன் முன்புறம் ஐந்து கூரான வளைவுகளைக் கொண்டுள்ளது, மேலும் இரு வளைவுகள் நடுப்பகுதியில் உள்ளன. இவை ஒன்றுடன் மற்றொன்று எட்டுத் தூண்களுடனும் மற்றும் ஒத்திசைவான சதுரத் தூண்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் ஐந்து கவிகை மாடங்களையும் தாங்கி நிற்கிறது. மத்திய கவிகைமாடமானது உலோகம் போன்ற கம்பீரமான கோபுரத் தூபியுடன் உள்ளது, அதேபோல மற்றவை கூரையில் மறைக்கப்பட்டுள்ளன. முனைகள் பள்ளி வாயில்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. முழுக் கட்டடமும் உயர்ந்த அடித்தளத்தை கடைகளுக்கு பயன்படும் அறைகளைக் கொண்டுள்ளது, அவை சாலைப் பக்கத்தில் திறக்கப்பட்டுள்ளன. வாயிற்புறம் இரு பள்ளி வாயிற்களைக் கொண்டுள்ளது. மசூதி முன்னே முற்றத்தில் ஒரு கோட்டையுள்ளது.
 • ஜெயக்வாடி நீர்த்தேக்கம் : ஜெயக்வாடி திட்டம் மகாராஷ்டிராவின் பெரிய நீர்ப்பாசன திட்டங்களில் ஒன்றாகும். இதொரு பல்நோக்கு திட்டமாகும். அதன் நீர் முக்கியமாக மகாராஷ்டிராவின் வறட்சிப் பாதித்த மராத்வாடா பகுதியின் விவசாய நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்யப் பயன்படுகிறது. அது அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் தொழில் பயன்பாட்டிற்கும், மேலும் நகராட்சிகளுக்கும் அவுரங்காபாத் மற்றும் ஜல்னாவின் தொழிற்பேட்டைகளுக்கும் வழங்கவும் செய்கிறது. நீர்த்தேக்கத்தைச் சுற்றிலும் ஒரு அழகிய பூங்காவும் பறவைகள் சரணாலயமும் உள்ளது.
 • பைத்தன் : இதொரு பழமையான தாலுகா நகரமாகும், அது அவுரங்காபாத்திற்கு தெற்கே 50 கிமீ தூரத்திலுள்ளது. பைத்தானின் நூற் தறிகள் இப்போதும் பெண்களால் உயர்வாய் கருதப்படும் அழகிய பைத்தானி புடவைகளை நூற்கிறது. அது சமீபத்தில் ஒரு அதி முக்கிய அகழ்வாராய்ச்சி ஸ்தலத்தினை அமைத்துள்ளது. அருகில் காணப்படும் ஒரு சில ஈர்ப்புக்களுக்கு மத்தியில், ஜெயக்வாடி நீர்த்தேக்கம் பேரார்வமிக்க பறவை நோக்கர்களுக்கு விருந்தாக அமைகிறது. பூங்கா மைசூர் விருந்தாவன் பூங்காவைப் போல நீர்ப்பாயும் கால்வாய்கள், இசை நீரூற்றுக்கள், பல்வேறு மரங்கள், செடிகள், குட்டைச் செடிகள் மற்றும் மலர்கள் ஆகியவற்றுடனுள்ளது. அதொரு நன்கு பராமரிக்கப்பட்ட பூங்காவாகும். மின் விளக்கு ஏற்பாடுகளும் மிக அழகானவை. பூங்கா முழுதும் மிக கண்ணிற்கினிய மற்றும் மகிழ்ச்சியூட்டும் சூழலை உருவாக்குகிறது. நகரம் மகாராஷ்டிராவின் பெரிய பூங்காவான தியானேஷ்வர் உதயனுக்கும் பிரபலமானது, மேலும் ஒரு வசீகரிக்கும் கலை பொருட்களின் சேர்க்கையைக் கொண்ட அருங்காட்சியகத்தையும் கொண்டுள்ளது.
 • எல்லோரா : எல்லோராவின் குகைக் கோயில், உலக பாரம்பரியத் தலங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது, நகரிலிருந்து 30 கிமீ வடமேற்கேயுள்ளது. எல்லோரா குகைகள் மேலுமொரு பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைகள் அழகிய கோயில்கள் மற்றும் மடாலயங்களைக் கொண்டுள்ளது. மொத்தத்தில் அங்கு 34 குகைகள் உள்ளன, அவை 12 மஹாயானா புத்த குகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன (கி.பி.550-750), 17 ஹிந்துக் குகைகள் (கி.பி.600-875) மற்றும் 5 ஜைன மத குகைகள் (கி.பி.800-1000). பின்னர் 22 புதிய குகைகள் இறைவன் சிவனிற்கு அர்ப்பணிக்கப்பட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு பெரிய பாறையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட அதில் வாயில், கூடாரம், முற்றம், முன் கூடம், கருவறை மற்றும் கோபுரம் ஆகியன உள்ளன. குகைகளின் அருகிலுள்ள கைலாஷ் கோயில் இவ்விடத்தின் முக்கிய ஈர்ப்பாகும்.
 • அஜந்தா : அஜந்தாவிலுள்ள உலகப் புகழ்வாய்ந்த புத்தமத குகைகள், அவுரங்காபாத்தின் வட கிழக்கே இருக்கும் ஓர் உலகப் பாரம்பரியத் தலமாகும். சிறப்பான அஜந்தா குகைகள் எவருக்கும் புதிதல்ல. சஹ்யாத்ரி மலைகளின் அமைதியான மடியில் கூடமைத்துள்ள அஜந்தாவின் 30 பாறை குடைக் குகைகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவுரங்காபாத்திலிருந்து 100 கிமீ தூரத்திலுள்ளன. குகைகளில் புத்தரின் வாழ்க்கையை விளக்கும் அழகிய ஓவியங்கள், மற்றும் சிற்பங்கள் காட்சிக்கு உள்ளன, மேலும் கூடங்கள் மற்றும் மடாலயங்கள் உள்ளன. இந்நிலப்பகுதி 1819 ஆம் ஆண்டில், ஒரு பிரிட்டிஷ் அதிகாரிகள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.
 • பாரியோன் கா தாலாப் : குல்தாபாத்தில் 30 கிமீ தூரத்தில் அமைந்துள்ள, பாரியோன் கா தாலாப்பின் மொழியாக்கம் 'வனதெய்வங்களின் ஏரி', அதன் மேற்குக் கரையில் வழியெங்கும் படிகட்டுகளைக் கொண்ட பெரிய ஏரியாகும், மேலும் ஒரு மேடைப் போன்ற தளம் பழங்கால ரோமன் ஆம்பிதியேட்டரை பெரியளவில் ஒத்த உருவமுடையதைக் கொண்டது. அதன் கரையில் தக்காணத்தின் முற்காலத்திய இஸ்லாமிய துறவி என நம்பப்படும் கஞ்ச் ராவான் கஞ்ச் பக்ஷ்சின் சமாதியுள்ளது. பாரி-கா-தாலாப் கஞ்ச் ராவான் தாலாப் எனவும் அறியப்படுகிறது.[14]
 • பாணி பேகம் பூங்காக்கள் : அவுரங்காபாத்திலிருந்து 24 கிமீயில் இருப்பது பாணி பேகம் பூங்காக்கள், அவை அவுரங்கசீப்பின் அரசிகளில் ஒருவரின் கல்லறையைச் சூழ்ந்துள்ளது. பாணி பேகம் அவுரங்கசீப்பின் மகன்களில் ஒருவரின் மனைவியாவார். ஒருவர் தூணில் செங்குத்தான நீள்வரிப் பள்ளங்களால் ஒப்பனை செய்யப்பெற்றதையும், பல்வேறு வேறுபட்ட பாணிகளில் பெருத்த கவிகை மாடங்களையும் நீரூற்றுக்களையும் காணலாம்.
 • மாயிஸ்மால் : அவுரங்காபாத்திலிருந்து 33 கிமீயிலிருக்கும் மற்றொரு சுற்றுலாத் ஸ்தலமாகும். மாயிஸ்மால் உண்மையில் 'மாஹேஷ்மால்' என அழைக்கப்படுகிறது. கிரிஜாமாதாவின் பழங்கால கோயிலொன்று கிராமத்திலுள்ளது, மேலும் திருப்பதியிலுள்ள இறைவன் பாலாஜியினுடையதை ஒத்தது போலவே மலையின் மீது ஒரு கோயிலுள்ளது. அது சிறியதெனினும் அழகிய மலைவாழிடம், எல்லோராவின் அருகாமையிலுள்ளது, பாராகிளைடிங் மற்றும் பாராசைலிங் போன்ற சாகச விளையாட்டுக்களுக்கு ஏற்ற இடமாகவும் மாறியுள்ளது.
 • லோனார் பெரும் பள்ளம் : நகரிலிருந்து 122 கிமீ தூரத்திலுள்ளது. லோனார்- உலகின் ஐந்து பெரிய பள்ளங்களில் ஒன்று, 50000 வருடங்களுக்கு முன்பு விண்கல் விழுந்த பாதிப்பால் அமைக்கப்பட்டதாகும். லோனார் போன்ற பாதிப்பு பெரும் பள்ளங்கள் டினோசார்களின் அழிவிற்கு சாத்தியமான காரணங்களில் ஒன்றாக இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. பள்ளத்தின் மேல்பரப்பு விட்டம் கிட்டத்தட்ட 1.75 கிமீ., மேலும் அதன் ஆழம் கிட்டத்தட்ட 132 மீட்டர்கள் ஆகும். அதன் அடித்தளத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்துள்ளது, அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிலையான நீரோட்டங்கள் பள்ளத்தினுள் பாய்ந்ததால் ஏற்பட்டதாகும். ஏரியின் வெளிப்புறத்தில் 12-13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்கள் உள்ளன. அவற்றின் அழகிய சிற்ப செதுக்கல்கள் அவற்றின் பெருமைமிகுந்த கடந்த காலத்தின் எச்சமிச்சமாகும்.
 • கௌதலா சரணாலயம் : சரணாலயம் அவுரங்காபாத்திலிருந்து 65 கிமீ தூரத்திலுள்ளது. சஹ்யாத்ரி மலைத் தொடர்களில் அவுரங்காபாத் மற்றும் சாலிஸ்காவோன் அருகாமையிலுள்ளது. பல்வேறு தாவர வகைகள் பரவலாக இடைவிட்டு வளமான பல்வேறு செடிவகைகளை தாங்கி நிற்கிறது. குறிப்பாக அது தேன் உண்ணும் கரடி வகைக்கு நல்ல வாழிடமாக இருப்பதாகும், மேலும் தங்கி வாழும் மற்றும் இடம் பெயரும் பறவை வகைகளுக்கு மிகச் சிறப்பானது.
 • அருங்காட்சியகம் : அவுரங்காபாத்தில் அறியப்படாத மற்றும் மறக்கப்பட்ட சிறந்த அருங்காட்சியகங்களின் உறைவிடமாகும். அவுரங்காபாத்தில் மாநில தொல்பொருள் அருங்காட்சியகம் (சோனேஹ்ரி மஹால்) உள்ளது, பல்கலைகழக வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் அவுரங்காபாத் மாநகராட்சி அருங்காட்சியகம் ஆகியன உள்ளன. இத்தகைய அருங்காட்சியகங்கள் நகரத்தின் வளர்ச்சிக்கு வரலாற்று அடையாளங்களை உறைவிடமாக உள்ளன. இந்திய தொல்லியல் ஆய்வுகளில் ASI தோண்டி கண்டெடுக்கப்பட்டப் பொருள்கள் இங்குள்ளன. நாணயங்கள், பதக்கங்கள், முத்திரைகள், கருவிகள், ஆயுதங்கள், படைக்கலங்கள், ஆபரணங்கள், சுவடிகள், ஜவுளிகள், இரத்தினங்கள் ஆகியன இங்கு காணப்படுகின்றன. ஆனால் குறைவாக அறியப்படுகின்றன மற்றும் தனித்தன்மை வாய்ந்தவை.
 • நாட்டுப்புறக் கலை : அவுரங்காபாத்தில் சிறந்த நாட்டுப் புறக்கலைப் பாரம்பரியங்களையும், மேலும் தற்பெருமை வாய்ந்த தமாஷாக்கள் மற்றும் லாவணிகள், பௌவடாஸ் மற்றும் கோந்தால்கள், ரங் பாஸி மற்றும் சவால் ஜவாப், தோல் நாட்டியம், புக்டி, டர்பி, திண்டி மற்றும் நாட்டுப் புறப் பாடல்கள் உள்ளன.
 • இதர ஈர்ப்புக்கள் : மிகச்சிறந்த வகையில் மத வழிபாட்டுதலங்களான ஷீர்டி, நாண்டெட், பைத்தன், கிரிஷ்னேஷ்வர், சானி ஷிங்கப்பூர், அவுந்தா நாக்நாத், பர்லி வைஜ்நாத், காட்கேஷ்வர், பத்ர மாருதி தியோஸ்தான் ஆகியவற்றிற்கு நுழைவாயிலாக நகரத்தோடு இரயில் மற்றும் சாலை வழியே நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

பண்பாடு மற்றும் சமையல் பாணிதொகு

பண்பாடுதொகு

அவுரங்காபாத்தின் நகரத்தின் பண்பாடு ஹைதராபாத்தினால் வலுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பழைய நகரம் இன்னும் ஹைதராபாத்தின் இஸ்லாமிய பண்பாட்டின் சுவைகளையும் அழகியல்களையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன் செல்வாக்கு உள்ளூர் மக்களின் மொழி மற்றும் உணவு முறைகளில் பிரதிபலிக்கிறது. இருப்பினும், மராத்தி மற்றும் உருது ஆகியவையே நகரின் முதன்மை மொழிகளாகும். ஆனால் அவை தக்ணி/ஹைதராபாத் உருது வழக்கு மொழியில் பேசப்படுகின்றன.[15]

வாலி தக்ணி வாலி அவுரங்காபாதி (1667-1731 அல்லது 1743) எனவும் அறியப்படுகிற அவுரங்காபாத்தின் முதல் தர உருதுப் புலவராவார். உருது மொழியில் பாடல் புனைந்த முதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட புலவராவார். தலைசிறந்த புலவர்களான ஷா ஹடேம், ஷா அப்ரோ, மிர் டாகி மிர், ஸாக் மற்றும் ஸௌதா - ஆகியோர் அவரது ரசிகர்களுள் இருந்தனர்.[16]

சமையல்வகைதொகு

அவுரங்காபாத்தின் உணவு முக்லாய் அல்லது ஹைதராபாதி சமையல் வகைகளைப்போல் அதன் மணம் மிகுந்த புலாவ் மற்றும் பிரியாணியைப்போல் அதிகம் ஒத்திருக்கும். புத்துணர்ச்சி வாய்ந்த நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைகளால் சமைக்கப்பட்ட இறைச்சி சிறப்பு வாய்ந்தது, அதேபோல இன்பமூட்டும் இனிப்புகளுமாகும். உள்ளூர் சமையல் முறை முக்லாய் மற்றும் ஹைதராபாதி சமையல் முறை ஆகியவற்றின் கலப்பாகும், அது மராத்வாடா பகுதியின் நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைகளின் பாதிப்பில் உள்ளது.[17]

நான் காலியா இந்தியாவின் அவுரங்காபாத்துடன் சம்பந்தமுடைய உணவு வகையாகும். அதொரு பல்வகையான நறுமணப் பொருட்கள் மற்றும் சரக்குகளைச் சேர்த்து பக்குவம் செய்த உணவாகும். நான் என்பது தந்தூரியில் (சூடான கனப்பு) செய்யப்பட்ட ரொட்டியாகும். அதே சமயத்தில் காலியா என்பது ஆட்டிறைச்சி மற்றும் பல்வேறு நறுமணப்பொருட்களின் கலவையாகும்.

இந்த உணவு வகை முகம்மது பின் துக்ளக்கின் இராணு முகாமில் தொடங்கப்பட்டது. பின்னர் முகலாயர்களின் இராணுவ முகாம்களில் பயன்படுத்தப்பட்டது. அவர்கள் தக்காணத்தின் தௌலதாபாத் மற்றும் அவுரங்காபாத்தின் உள்ளும் புறமும் தங்களது தளங்களை வைத்திருந்தப்போது செய்யப்பட்டதாகும். அவுரங்காபாத்திலேயே தங்கி விட்ட சிப்பாய்கள் மற்றும் பாசறையில் பணிபுரிபவர்கள் உணவை புரந்தருளியது இன்று வரையொரு மரபாகத் தொடர்கிறது.

தஹ்ரி : தஹ்ரி அல்லது தஹரி புலாவ்/பிரியாணி போன்றது. மேலும் அவுரங்காபாத் மற்றும் மராத்வாடாவில் மிகப் புகழ்பெற்றதாகும். தஹ்ரி அரிசியில் இறைச்சி சேர்த்து தயாரிக்கப்படுவதாகும், மரபாக பிரியாணியில் அரிசி இறைச்சியில் சேர்க்கப்படுவது போலல்லாததாகும்.[18]

மராத்வாடா / தக்ணி சமையல் முறை என்பது புனேரி மற்றும் ஹைதராபாதி சமையல் முறைகளின் கலப்பாகும் (அது வழக்கமான தென்னிந்திய நறுமணப் பொருட்களான குழம்பு இலைகள், புளி மற்றும் தேங்காயை தங்களது உயர்வான சமையல் முறைகளில் அழகாக கலக்கப்படுவதாகும்).[19] ஹைதராபாதி சமையல் முறைக்கு குறிப்பிட்ட வகையில் வேறுபட்டதானது, தக்காண சமையல் (மராத்வாடா, வடக்கு கர்நாடகா மற்றும் தெலுங்கானா) எளிமையானது இன்னும் முழுமையான முதல்தரமான விஷயமாகும். சமைக்கும் போது மசாலாப் பொடிகளுக்கும் அதன் சரியான கலவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, முகலாய் பண்டங்களில் அழுத்தம் வளமுள்ள ஒப்பனை மற்றும் சுவையூட்டுதலில் உள்ளது. அதேபோல முகலாய் பெரும்பாலும் குறைந்த வெப்பத்தில் தம்-பாணியில் தயாரிக்கப்படுவதாகும், தக்காண உணவு அதன் அரசு சமகாலத்திய உணவு போல் நேரம் நுகருகின்ற மற்றும் காராசாரமானது கிடையாது.[20]

முக்கிய உணவு பொருட்கள் கிடைப்பது, எளிதாக பயன்படுத்தப்படும் நறுமணப் பொருட்கள் மற்றும் சில மூலப் பொருட்கள் வாடிஸ் (காயவைக்கப்பட்ட அரிசி/அவரை விதைகள்), பருவத்தின் காய்கறிகள் - வாங்கி (கத்தரிக்காய்கள்) பெரும்பாலான உணவு பட்டியல்களில் காணப்படுகின்றன, அதேபோல அப்பிரதேசத்தின் இதர அவரை விதைகள் அவற்றின் இருப்பை ஜுன்காக்கள் அல்லது பிட்லாக்களில் (பச்சையான தக்காளி குழம்பு பருப்பு பொடியுடன் கூடியது) காணும். பூண்டுடன் வேர்க்கடலையை பயன்படுத்துவது, மிளகாய் மற்றும் கொப்பரை தேங்காய்களுடன் சட்னி, தேச்கள் மற்றும் பசைகள்/குழம்புகள் உருவாக்கத்தில் (வெங்காயம் முக்கிய இடுபொருள்) காணப்படுவது போன்றது. ஆட்டிறைச்சியும் காட்டுக்கோழியும் அவற்றின் மென்மை மற்றும் சுவைக்கு (உள்ளூரில் காவ்ரன் கோழிகள் இழைச் சத்துக்களோடு பிராய்லர் கோழிகளோடு ஒப்பிடும்படி இருந்தாலும் அதன் சிறப்பான சுவைக்கு மிகவும் விரும்பப்படுகின்றன). உடன் உண்ணப்படக்கூடிய ஜ்வாரிச்சி அல்லது பாஜ்ரிச்சி பாக்ரி ரொட்டி, சப்பாத்திக்கள் மற்றும் தாபட்யா போன்ற வேறுவகைகள் நன்கறியப்பட்டவை, தளிபீத் பல்வேறு தானியங்களின் சேர்க்கையிலிருந்து தயாரிக்கப்பட்டது, வெண்ணெயுடன் நுகரப்படுகிறது.[19]

உள்ளூர் கலைகள்தொகு

 • பைத்தானி ஜவுளி: இப்பகுதியிலிருந்து அவர்களின் தனித்த இன்பமளிக்கும் தன்மைக்கு அங்கீகாரத்தை அடைந்தன. பைத்தானின் பைத்தானி புடவைகள் அவுரங்காபாத்திலிருந்து 50 கிமீ தூரத்திலுள்ளது, இன்றும் ஒவ்வொருவராலும் விலைமதிக்கத்தக்க உடைமையாகக் கருதப்படுகிறது. ஒருவர் இந்த 2000 வருட பழமையான பைத்தானி புடவைகளை நெய்வதை நேரில் கண்டறியும் வாய்ப்பினைப் பெறலாம். தூய இழை பட்டுப்புடைவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஜரிகை அல்லது தங்க நூல்கள் தூயத் தங்கத்திலிருந்து பெறப்படுகிறது.

மாஷ்ரூ மற்றும் ஹிம்ரூதொகு

அவுரங்காபாத் பருத்தி மற்றும் பட்டின் பளபளப்பு பகட்டினாலான மாஷ்ரூ மற்றும் ஹிம்ரூ துணிவகைகளுக்கு பிரபலமானது. ஹிம்ரூ ஒரு பழமை வாய்ந்த நெய்யும் கைத்திறனாகும் மேலும் உண்மையில் கும் குவாப் என அறியப்பட்டது.

 • ஹிம்ரூ : இந்தத் துணிக்கு சுவையான வரலாறு உண்டு. பெர்ஷியாவில், உறுதியாகக நிரூபிக்கப்படவில்லையென்றாலும், தோன்றியதாகக் கூறப்படும், ஹிம்ரூ 14 ஆம் நுற்றாண்டில் ஆண்ட முகம்மது பின் துக்ளக்கின் காலத்துடன் தொடர்புடையது. முகம்மது பின் துக்ளக் அவரது தலை நகரை இடம் மாற்றிய போது பல நெசவாளர்கள் டெல்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு வருகைத் தந்து குடியேறினர். இடம் பெயர்தலின் போது நெசவாளர்கள் டெல்லிக்குத் திரும்பிச் செல்வதற்கு பதிலாக இங்கேயே தங்கினர். மாலிக் அம்பாரின் ஆட்சியின் போது நகரத்தின் புகழ் பலரை நீண்ட அகல திசைகளிலிருந்து ஈர்த்தது. அவுரங்காபாத் அவுரங்கசீப்பின் ஆளுநர் ஆட்சிக் காலத்திலும் முகலாயர்களின் காலத்திலும் தலைநகராக மாறியதால் நெசவாளர்கள் சுபிட்சமடைந்தனர். அவுரங்காபாத்தின் ஒரே தொழில் நூற்றுக் கணக்கான கைவினைஞர்களை இழுத்தது. ராஜ குடும்பத்தின் உறுப்பினர்களும் உயர்குடி மக்களில் சிலரும் அவுரங்காபாத்தின் பிரபல ஹிம்ரூவை பயன்படுத்தினர். ஹிம்ரூவின் நெசவு, மிகுந்த குணாம்சங்களையும் தனித்த தன்மைகளையும் உடையது. அவுரங்காபாத்திலிருந்து துணிகளும் சால்வைகளும் அவற்றின் தனித்த பாணி மற்றும் வடிவத்திற்கு அதிகத் தேவையுடையதாக இருந்தன.[21]
 • பிட்ரிவேர் : செப்பில் தங்கம்/வெள்ளி ஆகியவற்றை உள்பதிக்கும் ஓர் தனித்தன்மையுடைய வடிவம் இங்கு பெர்சிஷியாவின் பழமையான மரபுகளிலிருந்து தக்காணத்தில் நிலைநிறுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த பழமையான கலை இன்னும் நவீன கால பொருட்களான கைவளையல்கள், பெயர்ப்பலகைகள் மற்றும் பிறவற்றில் அதன் பிரதிபலிப்பைக் காணலாம். வழக்கமான பிட்ரி பொருட்களில் தட்டுக்கள், கிண்ணங்கள், பூக்குவளைகள், சாம்பல் தட்டு, சிறு அணிகலன் பெட்டிகள், ஹூக்கா அடித்தளம் மற்றும் நகை ஆகியன அடங்கியுள்ளன.
 • கக்ஸீபுரா : தௌலதாபாத்தின் அருகில் அமைந்துள்ள ஓரிடம் முதல் முறையாக இந்தியாவில் கை காகிதத்தை உருவாக்கிய இடம், மங்கோலியப் படையெடுப்பாளர்களால் இத் தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டப் பிறகு செய்யப்பட்டது. இப்போதும் ஓர் அடையாளக் குறியாகவுள்ளது. ஆர்வமூட்டும் வகையில் கூறுவதென்றால் இந்தக் காகிதம் குரான் அச்சடிக்க பயன்படுத்தப்பட்டது.

மேலும் காண்கதொகு

படக் காட்சிக் கூடம்தொகு

புவியியல் அமைப்புதொகு

மேற்குறிப்புக்கள்தொகு

 1. 11 இந்திய நகரங்கள் உலகில் வேகமாக வளர்ந்து வருகின்றவற்றிலுடையன.
 2. குரேஷி துலார், "அவுரங்காபாத்தில் சுற்றுலாச் சாத்தியங்கள்," ப.6
 3. மகாராஷ்டிரா அரசு வலைத் தளம்
 4. "Mahapopulation" (PDF). Census of India (in Marathi). www.maharashtra.gov.in. 2008-06-04 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unrecognized language (link)
 5. மிர்சா மெஹ்தி கான்னின் "ஹைதராபாத்", இம்பீரியல் கெஸட்டீர் ஆஃப் இந்தியா, அரசு அச்சகம், கல்கத்தா, 1909.
 6. இன்ஸ்பிரா இன்ஃப்ராஸ்டரக்சர் - வொய் அவுரங்காபாத் பரணிடப்பட்டது 2010-06-05 at the வந்தவழி இயந்திரம்.
 7. இந்தியன் எக்ஸ்பிரஸ்செஸ்(இறுதியாக, அவுரங்காபாத் அதன் ஆட்டோ தொழில் கூட்டத்தை பெறுகிறது).
 8. மகாராஷ்டிரா அரசு வலைத்தளம் வங்கி மற்றும் நிதிச் சேவை அவுரங்காபாத்
 9. மகாராஷ்டிர அரசில் அமைச்சர்கள்.
 10. aurangabad.nic.in பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்.
 11. மகாராஷ்டிரா அரசு வலைத் தளம் பொதுப் போக்குவரத்து அவுரங்காபாத்
 12. ""Educational Institutes, Colleges and Universtities in Inda"". Education 4 India. 2009-07-22 அன்று பார்க்கப்பட்டது.
 13. "அவுரங்காபாத் பாசறைப் பகுதி வலைத்தளம்". 2012-02-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 14. மகாராஷ்டிரா அரசு - செய்தியிதழ் துறை
 15. "தக்ணி தி லாங்க்வேஜ் இன் விச் தி காம்போசைட் கல்ச்சர் ஆஃப் இந்தியா வாஸ் பார்ன் பை டி.விஜயேந்தரா". 2011-10-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 16. {1(வாலி தக்ணி) தி லாங்க்வேஜ் இன் வித் தி காம்போசைட் கல்ச்சர் ஆஃப் இந்தியா வாஸ் பார்ன் பை டி விஜயேந்திரா.{/1}
 17. அவுரங்காபாத்தின் சமையல் முறை
 18. "பிரியாணியின் வகைகள் - Adibah.co.uk". 2012-04-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 19. 19.0 19.1 மேல் பட்டை
 20. தி ஹிந்து - ப்ளாட்டோ பலேட்
 21. க்யூரேஷி துலார், "டூரிஸம் பொடென்ஷியல் இன் அவுரங்காபாத்," டூரிஸம் புராடக்ட்ஸ் இன் அவுரங்காபாத் ப.65

புற இணைப்புகள்தொகு