தௌலதாபாத் கோட்டை
தௌலதாபாத் கோட்டை (Daulatabad Fort) தேவகிரி அல்லது தியோகிரி என்று அழைக்கப்படும் இது இந்திய மாநிலமான மகாராட்டிராவின் அவுரங்காபாத்துக்கு அருகிலுள்ள தௌலதாபாத் கிராமத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட ஒரு வரலாற்றுக் கோட்டையாகும். இது யாதவ வம்சத்தின் தலைநகராக இருந்தது. (கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை) சிறிது காலத்திற்கு தில்லி சுல்தானகத்தின் தலைநகரமாகவும் (1327–1334), பின்னர் அகமதுநகர் சுல்தானகத்தின் இரண்டாம் தலைநகரமாகவும் (1499-1636) இருந்தது. [1] [2] [3] பொ.ச. ஆறாம் நூற்றாண்டில், தேவகிரி, மேற்கு மற்றும் தென்னிந்தியாவை நோக்கி செல்லும் பயண வழித்தடங்களில் இன்றைய அவுரங்காபாத்திற்கு அருகிலுள்ள ஒரு முக்கியமான மலைப்பாங்கான நகரமாக உருவெடுத்தது. [4] [5] [6] [7]
தௌலதாபாத் கோட்டை | |
---|---|
தேவகிரி, தியோகிரி | |
பொதுவான தகவல்கள் | |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 19°56′34″N 75°12′47″E / 19.942724°N 75.213164°E |
நிறைவுற்றது | 1600s |
கோட்டை ஆரம்பத்தில் 1187 ஆம் ஆண்டில் முதல் யாதவ மன்னன் ஐந்தாம் பில்லாமா என்பவரால் கட்டப்பட்டது. 1308 ஆம் ஆண்டில், இந்த நகரத்தை இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை ஆண்ட வம்சமான கில்ஜி வம்சத்தைத்ச் சேர்ந்த சுல்தான் அலாவுதீன் கில்சி இணைத்துக் கொண்டார். 1327 ஆம் ஆண்டில், துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த முகம்மது பின் துக்ளக் இந்நகரத்தை "தௌலதாபாத்" என்று பெயர் மாற்றி, தனது ஏகாதிபத்திய தலைநகரை தில்லியில் இருந்து இந்நகரத்திற்கு மாற்றினார். தில்லியின் மக்கள் பெருமளவில் தௌலதாபாத்திற்கு குடியேறவும் உத்தரவிட்டார். இருப்பினும், முகம்மது பின் துக்ளக் 1334 இல் தனது முடிவை மாற்றி, தில்லி சுல்தானகத்தின் தலைநகரத்தை இங்கிருந்து மீண்டும் தில்லிக்கு மாற்றினார். [8]
1499 ஆம் ஆண்டில், இது அகமத்நகர் சுல்தானகத்தின் ஒரு பகுதியாக மாறியது. அவர்கள் இதை தங்கள் இரண்டாம் தலைநகராகப் பயன்படுத்தினர். 1610 ஆம் ஆண்டில், கோட்டைக்கு அருகில், கட்கி என்று பெயரிடப்பட்ட புதிய நகரமான அவுரங்காபாத், எத்தியோப்பிய இராணுவத் தலைவர் மாலிக் அம்பர் என்பவரால் அகமத்நகர் சுல்தானகத்தின் தலைநகராக பணியாற்ற நிறுவப்பட்டது. அவர் இந்தியாவுக்கு அடிமையாக கொண்டு வரப்பட்டார். ஆனால் அகமத்நகர் சுல்தானகத்தின் பிரதமராக உயர்ந்தார். இக்கோட்டையில் தற்போதுள்ள பெரும்பாலான பகுதிகள் அகமத்நகர் சுல்தானகத்தின் கீழ் கட்டப்பட்டது.
புராணத் தோற்றம்
தொகுசிவன் இந்த பிராந்தியத்தை சுற்றியுள்ள மலைகளில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. எனவே இந்த கோட்டை முதலில் தேவகிரி என்று அழைக்கப்பட்டது, அதாவது "கடவுளின் மலைகள்". [9] [10]
நகரத்தின் பகுதி தேவகிரியின் மலை-கோட்டையாகும் (சில நேரங்களில் லத்தீன் மொழியில் தியோகிரி). இது சுமார் 200 மீட்டர் உயரமுள்ள ஒரு கூம்பு மலையில் நிற்கிறது. பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 50 மீட்டர் செங்குத்து பக்கங்களை விட்டு வெளியேற யாதவ வம்ச ஆட்சியாளர்களால் மலையின் கீழ் சரிவுகளில் பெரும்பகுதி வெட்டப்பட்டுள்ளது. கோட்டை அசாதாரண வலிமையின் இடமாக இருந்தது. உச்சிக்குச் செல்வதற்கான ஒரே வழி ஒரு குறுகிய பாலம் மட்டுமே. இதில் இரண்டு பேருக்கு மேல் செல்லமுடியாத பாதையும், ஒரு நீண்ட நடைபாதையும் பாறையில் தோண்டப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் படிப்படியாக மேல்நோக்கி சாய்வாக உள்ளது. [11]
நகரம்
தொகுதௌலதாபாத் (19 ° 57'N 75 ° 15'E) அவுரங்காபாத்திலிருந்து மாவட்ட தலைமையகம் மற்றும் எல்லோரா குகைகளின் நடுப்பகுதியில் வடமேற்கே 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. [12] பரவலாக இருந்த அசல் தலைநகரம் இப்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும், ஒரு கிராமமாக குறைக்கப்பட்டுள்ளது.
வரலாறு
தொகுஇந்த இடம் குறைந்தது பொ.ச.மு. 100 முதல் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இப்போது அஜந்தா மற்றும் எல்லோராவில் உள்ளதைப் போன்ற இந்து மற்றும் சமண கோவில்களின் எச்சங்கள் உள்ளன. [13] [14] குகை 32 இல் சமண தீர்த்தங்கரருடன் செதுக்கப்பட்ட தொடர்ச்சியான இடங்கள் உள்ளது. [15]
இந்த நகரம் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1187இல், ஒரு யாதவ இளவரசனான ஐந்தாம் பில்லாமா சாளுக்கியர்களிடம் இருந்த விசுவாசத்தை கைவிட்டு, மேற்கில் யாதவ வம்சத்தின் அதிகாரத்தை நிறுவினார். [16] யாதவ மன்னர் இராமச்சந்திராவின் ஆட்சியின் போது, தில்லி சுல்தானத்தைச் சேர்ந்த அலாவுதீன் கில்சி 1296 இல் தேவகிரியை கைப்பற்றினார். யாதவர்கள் ஒரு பெரும் தொகையை கப்பமாக செலுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். [17] கப்பம் செலுத்துதல் நிறுத்தப்பட்டபோது, அலாவுதீன் 1308 ஆம் ஆண்டில் தேவகிரிக்கு இரண்டாவது படையெடுப்பை நிகழ்த்தினார். இராமச்சந்திராவை தனது அடிமையாக மாற்றும்படி கட்டாயப்படுத்தினார். [18]
1328 ஆம் ஆண்டில், தில்லி சுல்தானகத்தின் முகம்மது பின் துக்ளக் தனது இராச்சியத்தின் தலைநகரை தேவகிரிக்கு மாற்றி, அதற்கு தௌலதாபாத் என்று பெயர் மாற்றினார். 1327 இல் சுல்தான் தௌலதாபாத்தை (தேவகிரி) தனது இரண்டாவது தலைநகராக மாற்றினார். [19]
கோட்டையில், அவர் வறண்ட பகுதியைக் கண்டார். எனவே அவர் தண்ணீர் சேமிப்பிற்காக ஒரு பெரிய நீர்த்தேக்கத்தைக் கட்டினார். மேலும் அதை தொலைதூர நதியுடன் இணைத்தார். நீர்த்தேக்கத்தை நிரப்ப சிபான் முறையைப் பயன்படுத்தினார். இருப்பினும், அவரது தலைநகர மாற்ற உத்தி மோசமாக தோல்வியடைந்தது. எனவே அவர் மீண்டும் தில்லிக்கு தனது தலைநகரை மாற்றினார். இதனால் அவருக்கு "முட்டாள் அரசன்" என்ற பெயர் ஏற்பட்டது.
போக்குவரத்து
தொகுசாலைப் போக்குவரத்து
தொகுதௌலதாபாத் அவுரங்காபாத்தின் புறநகரில் உள்ளது. மேலும் அவுரங்காபாத் - எல்லோரா சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 2003) உள்ளது. அவுரங்காபாத் சாலை வழியாகவும், தேவகிரியிலிருந்து 20 கி.மீ தூரத்திலும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. [20]
இருப்புப்பாதை போக்குவரத்து
தொகுதௌலதாபாத் தொடருந்து நிலையம் தென் மத்திய இருப்புப்பாதைப் பிரிவின் மன்மத்-பூர்ணா பிரிவிலும் , மேலும் தென் மத்திய இருப்புப்பாதைப் பிரிவின் நாந்தேட் பிரிவின் முட்கேத்-மன்மத் பிரிவிலும் அமைந்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் மறுசீரமைப்பு வரை, இது ஐதராபாத் பிரிவின் ஒரு பகுதியாக இருந்தது . அவுரங்காபாத் தௌலதாபாத்திற்கு அருகிலுள்ள ஒரு முக்கிய நிலையமாகும். தேவகிரி விரைவு வண்டி மும்பை மற்றும் ஐதராபாத்தின் செகந்திராபாத் இடையே அவுரங்காபாத் நகரம் வழியாக தொடர்ந்து இயங்குகிறது.
புகைப்படங்கள்
தொகு-
தௌலதாபாத் கோட்டையின் முன் காட்சி
-
சந்த் மினார்
-
சமண நினைவுச்சின்னங்கள்
-
சமண நினைவுச்சின்னங்கள்
-
கோட்டை
-
கோட்டை
-
அவுரங்காபாத்
-
சிறை
-
கோட்டையின் நுழைவாயில்
-
கோட்டையின் நுழைவு
-
அவுரங்காபாத்-தௌலதாபாத் கோட்டை
-
தௌலதாபாத் கோட்டை
-
கோட்டை
-
கோட்டை
-
கோட்டை வாசல்
குறிப்புகள்
தொகு- ↑ "Devagiri-Daulatabad Fort" (in en). Maharashtra Tourism Development Corporation (மகாராட்டிரம், India) இம் மூலத்தில் இருந்து 2 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140702170319/http://www.maharashtratourism.gov.in/MTDC/HTML/MaharashtraTourism/TouristDelight/Forts/Forts.aspx?strpage=DevagiriDaulatabadFort.html.
- ↑ "मध्यकालीन भारत में सबसे ताकतवर था दौलताबाद किला" (in hi). ஆஜ் தக் (இந்தியா). http://m.aajtak.in/story.jsp?sid=706050.
- ↑ "देवगिरी – दौलताबाद" [Dēvagirī - Daulatābād]. www.majhapaper.com (in மராத்தி). மகாராட்டிரம். 9 September 2012. பார்க்கப்பட்ட நாள் 16 November 2018.
- ↑ "ऑक्टोबरपासून हॉट बलून सफारी" (in mr). மகாராஷ்டிரா டைம்ஸ் (Khultabad). http://maharashtratimes.indiatimes.com/maharashtra/aurangabad-marathwada/hot-baloon-safari/articleshow/47409289.cms.
- ↑ "Virtual walks through tourist spots may be a reality". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (புனே). http://m.timesofindia.com/city/pune/Virtual-walks-through-tourist-spots-may-be-a-reality/articleshow/46649077.cms.
- ↑ "રાજ્યના 'સેવન વંડર્સ'માં અજંતા, સીએસટી, દૌલતાબાદ, લોનાર" (in gu). Divya Bhaskar (இந்தியா). http://m.divyabhaskar.co.in/news/Mumbai/2123/MAH-MUM-cst-ajanta-daulatabad-lonar-become-seven-wonders-of-maharashtra-4423883-PHO.html?pg=3.
- ↑ "स्वरध्यास फाउंडेशनच्या कलावंतांनी स्वच्छ केला दौलताबाद किल्ला". Divya Marathi (Aurangabad) இம் மூலத்தில் இருந்து 13 ஜூன் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150613223722/http://m.divyamarathi.bhaskar.com/news/Aurangabad/5528/MAH-MAR-AUR-dauilatabad-fort-clean-by-actors-4810455-NOR.html.
- ↑ "UID યુનિક ઈન્ડિયન ડોન્કી!" (in gu). Mumbai Samachar (இந்தியா) இம் மூலத்தில் இருந்து 18 மே 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150518090322/http://bombaysamachar.com/frmStoryShow.aspx?sNo=22278.
- ↑ Vidya Shrinivas Dhoot (February 2012). "देवगिरी किल्ल्याच्या बुरुजावरून.." (in mr). Divya Marathi (அவுரங்காபாத், மகாராட்டிரம்) இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304103931/http://m.divyamarathi.bhaskar.com/news/Aurangabad/5528/MAH-MAR-AUR-devgiri-fort-story-2853466.html.
- ↑ Dayanand Pingale (11 January 2014). "अद्भुत देवगिरी" (in mr). Prahaar (அவுரங்காபாத், மகாராட்டிரம்) இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305033507/http://prahaar.in/feature/bhannat/173468.
- ↑ Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 176.
- ↑ "Ticketed Monuments - Maharashtra Daulatabad Fort". இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 July 2019.
- ↑ Jain, Shikha; Hooja, Rima (2016-09-23). Conserving Fortified Heritage: The Proceedings of the 1st International Conference on Fortifications and World Heritage, New Delhi, 2015 (in ஆங்கிலம்). Cambridge Scholars Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4438-9637-5.
- ↑ Gopal, Balakrishnan Raja (1994). The Rashtrakutas of Malkhed: Studies in the History and Culture (in ஆங்கிலம்). Mythic Society, Bangalore by Geetha Book House.
- ↑ Limited, Eicher Goodearth (2001). Speaking Stones: World Cultural Heritage Sites in India (in ஆங்கிலம்). Eicher Goodearth Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87780-00-7.
- ↑ Qureshi, Dulari. Fort of Daulatabad. Bharatiya Kala Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8180901133.
- ↑ Kishori Saran Lal. History of the Khaljis (1290-1320). The Indian Press.
- ↑ Banarsi Prasad Saksena. A Comprehensive History of India: The Delhi Sultanat (A.D. 1206-1526). The Indian History Congress / People's Publishing House.
- ↑ https://www.britannica.com/place/India/The-Tughluqs
- ↑ "Devgiri-Daultabad Fort". www.aurangabadcity.com (in ஆங்கிலம்). அவுரங்காபாத், மகாராட்டிரம். பார்க்கப்பட்ட நாள் 23 July 2019.