அகழி
அகழி (ஒலிப்பு (உதவி·தகவல்)) எனப்படுவது கோட்டை முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும். பண்டைக்காலத்தில் அரசர்கள் தங்கள் நாட்டு மக்களை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காகக் கோட்டைகளைக் கட்டினர். அக்கோட்டைகளை எதிரிகள் தாண்டி வராமல் இருக்க கோட்டையைச் சுற்றிலும் அகழிகள் அமைத்தனர். இதில் முதலைகள், பாம்புகள் போன்ற கொடிய விலங்குகள் நிறைந்திருக்கும். இதைத் தாண்டி கோட்டைக்குச் செல்வது என்பது மிகவும் அரிய செயலாகும். தமிழ் நாட்டில் தஞ்சை பிரகதீசுவரர் ஆலயம், வேலூர் கோட்டை ஆகிய இடங்களில் அகழி அமைப்பு உள்ளது.[1]


அகழிகள் அமைப்பு தொகு
கோட்டையைச் சுற்றிலும் ஆழமான குழியை வெட்டி இருப்பார்கள். அதில் நீரால் நிரப்புவார்கள். பின்பு அதில் முட்களையும் நச்சுக் கொடிகளையும் வளர்த்து பகைவர் அண்டாவண்ணம் அமைப்பது அகழியாகும்.[2]