இராமச்சந்திரா
இராமச்சந்திரன் அல்லது இராமதேவன் (Ramachandra) (IAST: Rāmacandra, r. அண். 1271-1311 கிபி), இந்தியாவின் தக்காண பீடபூமி பகுதியில் இருந்த தேவகிரி யாதவப் பேரரசை ஆண்ட சௌன யாதவ அரசமரபைச் சேர்ந்த பேரரசர் ஆவார்.
இராமச்சந்திரா | |
---|---|
இராஜாதிராஜன் | |
தேவகிரி யாதவப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | கிபி 1271 - 1317 |
முன்னையவர் | அம்மண்ணன் |
பின்னையவர் | மூன்றாம் சிங்கண்ணன் |
குழந்தைகளின் பெயர்கள் | மூன்றாம் சிங்கண்ணன் வல்லாளன் பீமன்னன் |
அரசமரபு | சௌன யாதவ அரசமரபு |
தந்தை | கிருஷ்ணன் |
மதம் | இந்து சமயம் |
இவர் கிளர்ச்சி செய்து, தனது பெற்றோரின் உடன் பிறந்தோரின் மகன் அம்மண்ணனிடமிருந்து, தேவகிரி யாதவப் பேரரசை கைப்பற்றி ஆண்டார். இவர் குஜராத்தின் வகேலர் மற்றும் பராமரர், கர்நாடகத்தின் ஹோய்சாலர் மற்றும் ஆந்திராவின் காக்கத்தியர்களிடமிருநது நிலப்பரப்புகளை வென்று தனது தேவகிரி யாதவப் பேரரசை விரிவாக்கம் செய்தார்.
1296-இல் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைகள் இராமச்சந்திரனின் தேவகிரி யாதவப் பேரரசைக் கைப்பற்றியது. தில்லி சுல்தானுக்கு கப்பம் செலுத்த ஒப்புக் கொண்டார். [1] பின்னர் 1303-1304-ஆண்டுகளில் சுல்தானுக்கு கப்பம் கட்டத் தவறியதால், மாலிக் காபூர் தலைமையிலான தில்லி சுல்தான் படைகள் 1308-இல் தேவகிரி யாதவப் பேரரசை வீழ்த்தியது. இராமச்சந்திரா தோல்வியை ஒப்புக் கொண்டதுடன், தனது படைகளை, ஹோய்சாலர் மற்றும் காக்கத்தியர் இராச்சியங்களை வீழ்த்த மாலிக் காபூருக்கு உதவினார்.
மேற்கோள்கள்
தொகுஆதார நூற்பட்டியல்
தொகு- A. S. Altekar (1960). Ghulam Yazdani (ed.). The Early History of the Deccan. Vol. VIII: Yādavas of Seuṇadeśa. Oxford University Press. இணையக் கணினி நூலக மைய எண் 59001459.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Kishori Saran Lal (1950). History of the Khaljis (1290-1320). Allahabad: The Indian Press. இணையக் கணினி நூலக மைய எண் 685167335.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Onkar Prasad Verma (1970). The Yādavas and Their Times. Vidarbha Samshodhan Mandal. இணையக் கணினி நூலக மைய எண் 138387.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - P. M. Joshi (1966). "Alauddin Khalji's first campaign against Devagiri". In H. K. Sherwani (ed.). Dr. Ghulam Yazdani Commemoration Volume. Maulana Abul Kalam Azad Oriental Research Institute. இணையக் கணினி நூலக மைய எண் 226900.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Ramakant R. Bhoir (2002). "Latest inscription of Ramchandra Yadava". Proceedings of the Indian History Congress (Indian History Congress) 63: 247–250.
- Sheldon Pollock (1995). "Ramayana and Public Discourse in Medieval India". In R. T. Vyas (ed.). Studies in Jaina Art and Iconography and Allied Subjects in Honour of Dr. U.P. Shah. Abhinav. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-316-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Stephen Meredyth Edwardes (1902). The Rise of Bombay: A Retrospect. The Times of India Press / Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-108-14407-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - T. V. Mahalingam (1957). "The Seunas of Devagiri". In R. S. Sharma (ed.). A Comprehensive history of India: A.D. 985-1206. Vol. 4 (Part 1). Indian History Congress / People's Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7007-121-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)