கில்ஜி வம்சம்

கில்ஜி வம்சம் ( ஆங்கிலம்: The Khilji dynasty பாரசீக மொழி: سلسله خلجی‎; இந்தி: सलतनत ख़िलजी) என்பது 1290 முதல் 1320 வரை தெற்காசியா முழுவதும் பரவியிருந்த ஓர் அரசு ஆகும்.[2] இதைத் தோற்றுவித்தவர் ஜலாலுதீன் கில்ஜி ஆவார். இவர்கள் துருக்கியைச் சார்ந்தவர்கள் ஆகும். தில்லியை ஆண்ட இரண்டாவது வம்சம் கில்ஜி வம்சம் ஆகும். அலாவுதீன் கில்ஜியின் காலகட்டத்தில் இந்தியாவின் மீதான மங்கோலியர்கள் படையெடுப்பு முறியடிக்கப்பட்டது.[3][4]

கில்ஜி வம்சம்
سلسله خلجی
1290–1320
கில்ஜி வம்சம்
கில்ஜி வம்சம்
தலைநகரம்தில்லி
பேசப்படும் மொழிகள்பாரசீக மொழி [1]
சமயம்
சன்னி இசுலாம்
அரசாங்கம்சுல்தான்
சுல்தான் 
• 1290–1296
ஜலாலுத்தீன் கில்ஜி
• 1296–1316
அலாவுதீன் கில்ஜி
• 1316
சாஹிப் உத்தீன் உமர்
• 1316–1320
குத்புதீன் முபாரக்
வரலாறு 
• தொடக்கம்
1290
• முடிவு
1320
பரப்பு
2,700,000 km2 (1,000,000 sq mi)
தற்போதைய பகுதிகள் இந்தியா
 பாக்கித்தான்
 வங்காளதேசம்
 நேபாளம்
 ஆப்கானித்தான்
 தஜிகிஸ்தான்
 சீனா

பூர்வீகம்

தொகு
 
கில்ஜி காலத்திய செம்பு நாணயம்

கில்ஜி வம்சத்தினர் மத்திய ஆசியாவைச் சார்ந்த துருக்கியர்கள்..[5] இவர்கள் தில்லியைக் கைப்பற்றுவதற்கு முன்னர் தற்போதைய ஆப்கானிஸ்தான் பகுதியில் வசித்து வந்தனர். கில்ஜி எனும் சொல் ஆப்கானியக் கிராமம் ஒன்றின் பெயர் ஆகும்.[6] இவர்கள் ஆப்கானியர்களின் கலாச்சாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றியதால் ஆப்கானிய இனக் குழுக்களுள் ஒன்றாகக் கருதப்பட்டனர்.[7][8] அதன் காரணமாய் இவர்களை துருக்கிய-ஆப்கான் வம்சம் என்று அழைத்தனர்.[9][10][11][12] கில்ஜி அரசர்கள் சுல்தான்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களுள் ஜலானுதீன் பிரோஸ் கில்ஜி, அலாவுதீன் கில்ஜி மற்றும் குத்புதீன் முபாரக் ஆகிய மூவர் மிகவும் முக்கியமான சுல்தான்களாக வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றனர்.[5]

மேற்கோள்கள்

தொகு
 1. "Arabic and Persian Epigraphical Studies - Archaeological Survey of India". Asi.nic.in. Archived from the original on 2019-01-10. பார்க்கப்பட்ட நாள் 2010-11-14.
 2. Dynastic Chart The Imperial Gazetteer of India, v. 2, p. 368.
 3. Mikaberidze, Alexander (2011). Conflict and Conquest in the Islamic World: A Historical Encyclopedia: A Historical Encyclopedia. ABC-CLIO. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-5988-4337-0. பார்க்கப்பட்ட நாள் 2013-06-13.
 4. Barua, Pradeep (2005). The state at war in South Asia. U of Nebraska Press. p. 437. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8032-1344-1. பார்க்கப்பட்ட நாள் 2010-08-23.
 5. 5.0 5.1 "Khalji Dynasty". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 2010-08-23. this dynasty, like the previous மம்லுக் வம்சம், was of Turkic origin, though the Khiljī tribe had long been settled in what is now ஆப்கானித்தான்...
 6. Thorpe, Showick Thorpe Edgar (2009). The Pearson General Studies Manual 2009, 1/e. Pearson Education India. p. 1900. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-317-2133-7. பார்க்கப்பட்ட நாள் 2010-08-23. The Khilji dynasty was named after a village in Afghanistan. Some historians believe that they were Afghans, but Bharani and Wolse Haig explain in their accounts that the rulers from this dynasty who came to India, though they had temporarily settled in Afghanistan, were originally Turkic.
 7. Chaurasia, Radhey Shyam (2002). History of medieval India: from 1000 A.D. to 1707 A.D. Atlantic Publishers & Distributors. p. 337. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-269-0123-3. பார்க்கப்பட்ட நாள் 2010-08-23. The Khiljis were a Central Asian Turkic dynasty but having been long domiciled in Afghanistan, and adopted some Afghan habits and customs. They were treated as Afghans in Delhi Court.
 8. Cavendish, Marshall (2006). World and Its Peoples: The Middle East, Western Asia, and Northern Africa. Marshall Cavendish. p. 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7614-7571-0. பார்க்கப்பட்ட நாள் 2010-08-23. The sultans of the Slave Dynasty were Turkic நடு ஆசியாs, but the members of the new dynasty, although they were also Turkic, had settled in Afghanistan and brought a new set of customs and culture to Delhi.
 9. Yunus, Mohammad (2003). South Asia: a historical narrative. Oxford University Press. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-1957-9711-6. பார்க்கப்பட்ட நாள் 2010-08-23.
 10. Farooqui, Salma Ahmed (2011). A Comprehensive History of Medieval India: From Twelfth to the Mid-Eighteenth Century. India: Pearson Education India. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-317-3202-9. பார்க்கப்பட்ட நாள் 2012-11-19.
 11. Kumar Mandal, Asim (2003). The Sundarbans of India: A Development Analysis. India: Indus Publishing. p. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-738-7143-4. பார்க்கப்பட்ட நாள் 2012-11-19.
 12. Singh, D. (1998). The Sundarbans of India: A Development Analysis. India: APH Publishing. p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-702-4992-9. பார்க்கப்பட்ட நாள் 2012-11-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்ஜி_வம்சம்&oldid=3998670" இலிருந்து மீள்விக்கப்பட்டது