அலாவுதீன் கில்ஜியின் தேவகிரி முற்றுகை
அலாவுதீன் கில்சியின் தேவகிரி முற்றுகை ( Alauddin Khalji's conquest of Devagiri ) என்பது அலாவுதீன் கில்சியால் தேவகிரி மீது மேற்கொள்ளப்பட்ட ஓர் முக்கிய இராணுவ நடவடிக்கையாகும். பொ.ச.1308 வாக்கில்,[1][1][2] தில்லி சுல்தானக ஆட்சியாளர் அலாவுதீன் கில்சி தனது தளபதி மாலிக் கபூரின் தலைமையில் ஒரு பெரிய படையை யாதவ மன்னர் இராமச்சந்திரனின் தலைநகரான தேவகிரிக்கு அனுப்பினார்.
தேவகிரி கோட்டையின் இடிபாடுகள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
தேவகிரி யாதவப் பேரரசு | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Delhi Sultanate | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
இராமச்சதிரன் | அலாவுதீன் கில்சி மாலிக் கபூர் |
அலாவுதீன் முன்பு 1296-இல் தேவகிரி மீது படையெடுத்தார்.[3] மேலும் இராமச்சந்திரனை தனக்கு கப்பம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தினார். இருப்பினும், இராமச்சந்திரன் இதனை செலுத்த மறுத்தார். மேலும் 1304 இல் குசராத்தில் இருந்து அலாவுதீனால் இடம்பெயர்க்கப்பட்ட வகேலா மன்னன் கர்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தார்.[2]
அல்ப் கான் தலைமையிலான தில்லி இராணுவத்தின் ஒரு பகுதி, யாதவ இராச்சியத்தில் கர்ணனின் சமஸ்தானத்தின் மீது படையெடுத்து, வகேலா இளவரசி தேவலாதேவியைக் சிறைபிடித்தது.[4] பின்னர் அவர் அலாவுதீனின் மகன் கிஸ்ர் கானுக்கு திருமணம் செய்து வைக்கபட்டார். மாலிக் கபூரின் தலைமையில் மற்றொரு பிரிவு, பலவீனமான எதிர்ப்பிற்குப் பிறகு தேவகிரியைக் கைப்பற்றியது. இராமச்சந்திரன் அலாவுதீனின் அடிமையாக மாற ஒப்புக்கொண்டார். பின்னர், தெற்கு இராச்சியங்களில் சுல்தானகத்தின் படையெடுப்புகளில் மாலிக் கபூருக்கு உதவினார்.
பின்விளைவு
தொகுஇராமச்சந்திரனுக்கு பல்லாலன் மற்றும் பீமதேவன் என்ற இரு மகன்கள் இருந்தனர். [5] இவர்களில், பீமன் கொங்கணுக்கு தப்பிச் சென்றார். அங்கு அவர் மகிகாவதியில் ( மும்பையிலுள்ள நவீன மாகிம் ) ஒரு தளத்தை நிறுவினார். [6]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Kishori Saran Lal 1950, ப. 189.
- ↑ 2.0 2.1 Banarsi Prasad Saksena 1992, ப. 401.
- ↑ Kishori Saran Lal 1950, ப. 188.
- ↑ Kishori Saran Lal 1950, ப. 190.
- ↑ A. S. Altekar 1960, ப. 555.
- ↑ Stephen Meredyth Edwardes 1902, ப. 25.
உசாத்துணை
தொகு- A. S. Altekar (1960). Ghulam Yazdani (ed.). The Early History of the Deccan. Vol. VIII: Yādavas of Seuṇadeśa. Oxford University Press. இணையக் கணினி நூலக மைய எண் 59001459.
- Abraham Eraly (2015). The Age of Wrath: A History of the Delhi Sultanate. Penguin Books. p. 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5118-658-8.
- Banarsi Prasad Saksena (1992) [1970]. "The Khaljis: Alauddin Khalji". In Mohammad Habib and Khaliq Ahmad Nizami (ed.). A Comprehensive History of India: The Delhi Sultanat (A.D. 1206-1526). Vol. 5 (Second ed.). The Indian History Congress / People's Publishing House. இணையக் கணினி நூலக மைய எண் 31870180.
- Kishori Saran Lal (1950). History of the Khaljis (1290-1320). Allahabad: The Indian Press. இணையக் கணினி நூலக மைய எண் 685167335.
- P. M. Joshi (1966). "Alauddin Khalji's first campaign against Devagiri". In H. K. Sherwani (ed.). Dr. Ghulam Yazdani Commemoration Volume. Maulana Abul Kalam Azad Oriental Research Institute. இணையக் கணினி நூலக மைய எண் 226900.
- Ramakant R. Bhoir (2002). "Latest inscription of Ramchandra Yadava". Proceedings of the Indian History Congress (Indian History Congress) 63: 247–250.
- Satish Chandra (2004). Medieval India: From Sultanat to the Mughals-Delhi Sultanat (1206-1526) - Part One. Har-Anand Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-1064-5.
- S. Digby (1990). "Kāfūr, Malik". In E. Van Donzel; B. Lewis; Charles Pellat (eds.). Encyclopaedia of Islam (2 ed.). Vol. 4, Iran–Kha: Brill. p. 419. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-05745-5.
{{cite book}}
: CS1 maint: location (link) - Shanti Sadiq Ali (1996). The African Dispersal in the Deccan: From Medieval to Modern Times. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-0485-1.
- Stephen Meredyth Edwardes (1902). The Rise of Bombay: A Retrospect. The Times of India Press / Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-108-14407-0.
- T. V. Mahalingam (1957). "The Seunas of Devagiri". In R. S. Sharma (ed.). A Comprehensive history of India: A.D. 985-1206. Vol. 4 (Part 1). Indian History Congress / People's Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7007-121-1.