பைத்தான் நகரம்


பைத்தான் (Paiṭhaṇ) ஒலிப்பு, புராண, இதிகாச காலத்தில் பிரதிஷ்டானம் என அழைக்கப்பட்ட இந்நகரம் மகராஷ்டிரா மாநிலத்தின், அவுரங்கபாத் மாவட்டத்தில் பாயும் கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்த நகராட்சியும் மற்றும் நகரமும் ஆகும். இந்நகரம் அவுரங்காபாத் நகரத்திற்கு தெற்கே 56 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முன்னர் இந்நகரம் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை சாதவாகனர்களின் தலைவநகராக விளங்கியது.

பைத்தான்
நகரம்
பைத்தான் is located in இந்தியா
பைத்தான்
பைத்தான்
பைத்தான் is located in மகாராட்டிரம்
பைத்தான்
பைத்தான்
ஆள்கூறுகள்: 19°29′N 75°23′E / 19.48°N 75.38°E / 19.48; 75.38
Countryஇந்தியா இந்தியா
மாநிலம்மகாராஷ்டிரா
பிரதேசம்மரத்வாடா
மாவட்டம்அவுரங்கபாத்
ஏற்றம்
458 m (1,503 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்41,536
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
431 107
தொலைபேசி குறியீடு எண்02431
வாகனப் பதிவுMH-20

பைத்தான் நகரம் திகம்பர சமணர்களின் முக்கியப் புனிதத் தலங்களில் ஒன்றாகும். இந்நகரத்தில் சமணர்களின் 20வது தீர்த்தகரரான பகவான் முனீஸ்வரநாதரின் கருங்கல் சிலையுடன் கூடிய சமணக் கோயில் உள்ளது. இந்நகரத்தில் சூபி பிரிவு இசுலாமியர்கள் 20% வாழ்கினறனர். பைத்தானி பட்டுச் சேலை ரகங்களுக்கு இந்நகரம் புகழ்பெற்றது. இந்நகரத்தின் அருகே ஜெயக்காடி அணை உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 20 வார்டுகளும், 8,350 வீடுகளும் கொண்ட பைத்தான் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 41,536 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 21,269 மற்றும் பெண்கள் 20,267 ஆகவுள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்ந்தைகள் 5467 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 953 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.59% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 74.66%, இசுலாமியர் 21.71%, கிறித்தவர்கள் 0.22%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 2.45%, சமணர்கள் 0.72% மற்றவர்கள் 0.22% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  •   விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Paithan
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைத்தான்_நகரம்&oldid=3538940" இலிருந்து மீள்விக்கப்பட்டது