இந்தியப் பஞ்சம், 1899–1900

இந்தியப் பஞ்சம், 1899–1900 (Indian famine of 1899–1900) பிரித்தானிய இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப்பகுதிகளைப் பாதித்த ஒரு பெரும் பஞ்சமாகும். இப்பஞ்சத்தால் மொத்தம் 12,30,000 சதுர கிமீ நிலப்பரப்பும் 5.95 கோடி மக்களும் பாதிக்கப்பட்டனர். மத்திய மாகாணங்களும் பெராரும், மும்பை மாகாணம், ஆஜ்மெர்-மெர்வாரா, பஞ்சாப்பின் ஹிசார் ஆகிய பிரித்தானிய இந்தியப் பகுதிகள் இப்பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. ராஜபுதானா முகமை, மத்திய இந்திய முகமை, ஐதராபாத், கத்தியவார் முகமை போன்ற சமஸ்தானங்களையும் இப்பஞ்சம் தாக்கியது. இவை தவிர வங்காள மாகாணம், சென்னை மாகாணம், வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் ஆகியவற்றின் சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.[1]

பிரித்தானிய் இந்தியாவின் வரைபடம் (1909); மத்திய மாகாணங்களும் பெராரும், மும்பை மாகாணம், ஆஜ்மீர்-மெர்வாரா, பஞ்சாப்பின் ஹிசார் ஆகிய பகுதிகள் 1899-1900 பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

1896–97 பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலானவற்றை இப்பஞ்சம் மீண்டும் கடுமையாகப் பாதித்தது. முந்தைய பஞ்சத்தைப் போலவே இப்பஞ்சத்திற்கு முன்பும் பருவமழை பொய்த்து வறட்சி நிலவியது. இந்தியாவின் பிற பகுதிகளில் உணவு தானியங்களின் விளைச்சல் வெகுவாகக் குறைந்ததால், மாகாணங்களுக்கிடையே வழக்கமாக நடைபெறும் தானிய வர்த்தகம் பாதிக்கப்பட்டது; பற்றாக்குறையும் கூடியது.[2][3]

பஞ்சத்தினால் இறந்தவர் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. ஏறக்குறைய தக்காணத்தில் 1,66,000 பேரும் மும்பை மாகாணத்தில் 4,62,000 பேரும் மாண்டனர். பிரித்தானிய ஆட்சிப் பகுதிகளில் மட்டும் குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் பட்டினி மற்றும் தொற்று நோய்களால் மடிந்தனர். பல மில்லியன் கால்நடைகளும் மடிந்தன. இந்தியா முழுவதும் இப்பஞ்சத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த கணிப்புகள் மாறுபடுகின்றன. பத்து லட்சம் முதல் நாற்பந்தைந்து லட்சம் பேர் இதனால் மடிந்திருக்கலாம் என கணிப்புகள் கூறுகின்றன.[4][5][6][7]

மேலும் பார்க்க

தொகு

குறிப்புகள்

தொகு


மேற்கோள்கள்

தொகு
  • Ambirajan, S. (1976), "Malthusian Population Theory and Indian Famine Policy in the Nineteenth Century", Population Studies, 30 (1): 5–14
  • Arnold, David; Moore, R. I. (1991), Famine: Social Crisis and Historical Change (New Perspectives on the Past), Wiley-Blackwell. Pp. 164, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0631151192
  • Attwood, Donald W. (2005), "Big Is Ugly? How Large-scale Institutions Prevent Famines in Western India", World Development, 33 (12): 2067–2083
  • Baker, David, "State policy, the market economy, and tribal decline: The Central Provinces, 1861–1920", Indian Economic and Social History Review, 28: 341–370, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1177/001946469102800401
  • Bhatia, B. M. (1991), Famines in India: A Study in Some Aspects of the Economic History of India With Special Reference to Food Problem, 1860–1990, Stosius Inc/Advent Books Division. Pp. 383, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8122002110
  • Bouma, Menno J.; van der Kay, Hugo J. (1996), "The El Niño Southern Oscillation and the historic malaria epidemics on the Indian subcontinent and Sri Lanka: an early warning system for future epidemics", Tropical Medicine and International Health, 1 (1): 86–96
  • Davis, Mike (2001), Late Victorian Holocausts, Verso Books. Pp. 400, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781859847398
  • Drèze, Jean (1995), "Famine prevention in India", in Drèze, Jean; Sen, Amartya; Hussain, Althar (eds.), The political economy of hunger: Selected essays, Oxford: Clarendon Press. Pp. 644, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0198288832
  • Dutt, Romesh Chunder, Open Letters to Lord Curzon on Famines and Land Assessments in India - year =1900 (reprinted 2005), London: Kegan Paul, Trench, Trubner & Co. Ltd (reprinted by Adamant Media Corporation), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1402151152
  • Dyson, Tim (1991a), "On the Demography of South Asian Famines: Part I", Population Studies, 45 (1): 5–25
  • Dyson, Tim (1991b), "On the Demography of South Asian Famines: Part II", Population Studies, 45 (2): 279–297
  • Fagan, Brian (2009), Floods, Famines, and Emperors: El Nino and the Fate of Civilizations, Basic Books. Pp. 368, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0465005306
  • Fieldhouse, David (1996), "For Richer, for Poorer?", in Marshall, P. J. (ed.), The Cambridge Illustrated History of the British Empire, Cambridge: Cambridge University Press. Pp. 400, pp. 108–146, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521002540
  • Ghose, Ajit Kumar (1982), "Food Supply and Starvation: A Study of Famines with Reference to the Indian Subcontinent", Oxford Economic Papers, New Series, 34 (2): 368–389
  • Hall-Matthews, David (2008), "Inaccurate Conceptions: Disputed Measures of Nutritional Needs and Famine Deaths in Colonial India", Modern Asian Studies, 42 (1): 1–24, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/S0026749X07002892
  • Hardiman, David (1996), "Usuary, Dearth and Famine in Western India", Past and Present (152): 113–156
  • Hill, Christopher V. (1991), "Philosophy and Reality in Riparian South Asia: British Famine Policy and Migration in Colonial North India", Modern Asian Studies, 25 (2): 263–279
  • Imperial Gazetteer of India vol. III (1907), The Indian Empire, Economic (Chapter X: Famine, pp. 475–502, Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxx, 1 map, 552.
  • Klein, Ira (1973), "Death in India, 1871-1921", The Journal of Asian Studies, 32 (4): 639–659, JSTOR 2052814
  • Klein, Ira (1984), "When the rains failed: famines, relief, and mortality in British India", Indian Economic and Social History Review, 21: 185–214, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1177/001946468402100203
  • McAlpin, Michelle B. (1983), "Famines, Epidemics, and Population Growth: The Case of India", Journal of Interdisciplinary History, 14 (2): 351–366
  • McAlpin, Michelle B. (1979), "Dearth, Famine, and Risk: The Changing Impact of Crop Failures in Western India, 1870–1920", The Journal of Economic History, 39 (1): 143–157, JSTOR 2118916
  • Roy, Tirthankar (2006), The Economic History of India, 1857–1947, 2nd edition, New Delhi: Oxford University Press. Pp. xvi, 385, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195684303
  • Sen, A. K. (1982), Poverty and Famines: An Essay on Entitlement and Deprivation, Oxford: Clarendon Press. Pp. ix, 257, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0198284632
  • Tomlinson, B. R. (1993), The Economy of Modern India, 1860-1970 (The New Cambridge History of India, III.3), Cambridge and London: Cambridge University Press., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521589398
  • Washbrook, David (1994), "The Commercialization of Agriculture in Colonial India: Production, Subsistence and Reproduction in the 'Dry South', c. 1870–1930", Modern Asian Studies, 28 (1): 129–164, JSTOR 312924
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியப்_பஞ்சம்,_1899–1900&oldid=3696740" இலிருந்து மீள்விக்கப்பட்டது