ஸ்பைஸ் ஜெட்
ஸ்பைஸ் ஜெட் (SpiceJet) இந்தியாவின் குர்கானை தலைமையிடமாக கொண்ட ஒரு குறைந்தசெலவு விமானசேவை நிறுவனம் ஆகும். இது இந்தியாவின் நான்காவது பெரிய விமானசேவை வழங்கும் நிறுவனமாகும்.[2] இது 34 இந்திய நகரங்கள் மற்றும் 7 வெளிநாட்டு நகரங்களுக்குத் தினமும் 273 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. 2010 ஆம் ஆண்டு, சேவை தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டதன் காரணமாக வெளிநாட்டு முனையங்களுக்கு இயக்க அனுமதி கொடுக்கப்பட்டது. முதல் வெளிநாட்டு சேவையாக டில்லியிலிருந்து காத்மண்டுவிற்கு விமான சேவை இயக்கப்பட்டது. இது 2007 இல் ஸ்கைட்ராக்ஸால் தென் ஆசியா மற்றும் மத்திய ஆசியா பகுதியில் சிறந்த குறைந்த செலவு விமான நிறுவனமாக வாக்களிக்கப்பட்டது.[3]
| |||||||
நிறுவல் | 2004 | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | 24 மே 2005 | ||||||
மையங்கள் | |||||||
இரண்டாம் நிலை மையங்கள் | |||||||
கவன செலுத்தல் மாநகரங்கள் | |||||||
கூட்டணி | |||||||
வானூர்தி எண்ணிக்கை | 40 (+ 29 orders) | ||||||
சேரிடங்கள் | 34 | ||||||
தலைமையிடம் | குர்கான், இந்தியா | ||||||
முக்கிய நபர்கள் | அஜய்சிங்[1] | ||||||
வலைத்தளம் | SpiceJet.com |
உரிமை
தொகுஇந்த நிறுவனம் அஜய் சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. இதனுடைய பங்குகளை சன் குழுமத்தை சார்ந்த கலாநிதி மாறன் 2010 ஆம் ஆண்டு சூன் மாதம் வாங்கினார். ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சந்தித்த நிதி நெருக்கடியை தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் முந்தைய தலைவரான அஜய்சிங்கிற்கு, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தைக் கலாநிதி மாறன் கைமாற்றினார்.[4][5]
சேவைகள்
தொகுஸ்பைஸ்ஜெட்டின் உள்ளூர் சேவைகள் மும்பை, புது டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களை இணைகின்றது. ஸ்பைஸ்ஜெட்டின் சர்வதேச சேவைகள் காத்மாண்டு, கொழும்பு, மாலத்தீவு, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய இடங்களை இணைகின்றது.[6]
விருதுகள்
தொகு- DGCA வின் படி பிப்ரவரி மாதத்தில் (2014), DGCA வின் படி சரியான பயண நேரத்திற்கு கொண்டு சென்றதற்கான முதல் பரிசு டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களுக்காக வழங்கப்பட்டது.
- DGCA வின் படி ஜனவரி மாதத்தில் (2014), DGCA வின் படி சரியான பயண நேரத்திற்கு கொண்டு சென்றதற்கான முதல் பரிசு பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற இடங்களுக்காக வழங்கப்பட்டது.
- DGCA வின் படி டிசம்பர் மாதத்தில் (2013), DGCA வின் படி சரியான பயண நேரத்திற்கு கொண்டு சென்றதற்கான முதல் பரிசு பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற இடங்களுக்காக வழங்கப்பட்டது.
- அவுட்லுக் டிராவலரால் இந்தியாவின் சிறந்த குறைந்த செலவு விமான சேவைக்கான விருது வழங்கப்பட்டது (2008, 2010, 2011 மற்றும் 2012).
- 2012 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சர்வதேச குறைந்த செலவு விமான சேவைக்கான விருதினை டிராவல் ஏஜென்ட்ஸ் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் வழங்கியது.
- இந்தியாவின் சிறந்த விமானசேவைக்காக LCC-டொமஸ்டிக் விருது டிராவல் அண்ட் ஹாஸ்பிடாலிட்டியால் வழங்கப்பட்டது.
- உலகின் குறைந்த செலவு விமான சேவைக்கான ஆசிய பசுபிக் கூட்டத்தில் சிறந்த வலைதளத்திற்கான விருது வழங்கப்பட்டது (2010 மற்றும் 2012).
- வாடிக்கையாளர்களின் மனதிருப்தி மற்றும் வணிக வளர்ச்சிக்கான விருது CIO 100 விருதுகளில் வழங்கப்பட்டது (2007, 2008, 2009, 2011 மற்றும் 2012).
- மார்ஸ்-ஆல் ஹிந்துஸ்தான் டைம்ஸ்-க்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியாவின் சிறந்த குறைந்த செலவு விமான சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
- பல்வேறு சேனல்கள் மற்றும் விநியோகத்திற்காக வேர்ல்டு டிராவல் மார்க்கெட் விருது வழங்கப்பட்டது (2009).
- சிறந்த செலவு மேலாண்மைக்கான தேசிய விருது (ICWAI) 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "கலாநிதிமாறனிடமிருந்து அஜய்சிங்குக்கு கைமாறியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்" இம் மூலத்தில் இருந்து 2015-06-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150628213150/http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85-196461.html.
- ↑ Nair, Vipin V. (2008-07-04). "ஸ்பைஸ் ஜெட் பயணிகள் எண்ணிக்கை உயர்வு". ப்ல்லோம்பெர்க். பார்க்கப்பட்ட நாள் 2012-02-05.
- ↑ "ஸ்பைஸ் ஜெட் சிறந்த குறைந்த செலவு விமான நிறுவனமாக தேர்வு".
- ↑ "ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் கை மாறியது".
- ↑ "கலாநிதிமாறனிடமிருந்து அஜய்சிங்குக்கு கைமாறியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்".
- ↑ "ஸ்பைஸ்ஜெட் சேவைகள்". கிளியர்ட்ரிப்.
- ↑ "ஸ்பைஸ்ஜெட் விருதுகள்". ஸ்பைஸ்ஜெட்.