கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்

கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Cochin International Airport, (ஐஏடிஏ: COKஐசிஏஓ: VOCI)) கொச்சி மற்றும் அதன் அண்மையிலுள்ள மாவட்டங்களுக்கான பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தின் வடகிழக்கில் ஏறத்தாழ 30 km (19 mi) தொலைவிலுள்ள நெடும்பாச்சேரி (உள்ளூர் உச்சரிப்பு:நெடும்பாஸ்ஸேரி) என்னுமிடத்தில் கட்டப்பட்டுள்ளது.[4] முன்னதாக வெல்லிங்டன் தீவில் செயல்பட்டு வந்த வானூர்தி நிலையம் பெரிய வானூர்திகளுக்காக விரிவாக்கபட தேவையான நிலப்பரப்பை கொண்டிராததாலும் கப்பற்படைக்கு உரிமையானதாக இருந்ததாலும் மாற்று வானூர்தி நிலையமாக இது திட்டமிடப்பட்டது. அதுநாள் வரை முற்றிலும் அரசுநிதியிலிருந்தே கட்டமைக்கப்பட்டுவந்த திட்டங்களுக்கு மாற்றாக இது இந்தியாவில் முதன்முதலாக அரசு-தனியார் கூட்டு முயற்சியாக எடுத்துக்கொள்ளப்பட்டது.30 நாடுகளிலிருந்து 10,000 வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு வழங்கி உள்ளனர்.[5]

கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்

நெடும்பாச்சேரி வானூர்தி நிலையம்
கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்ளூர் முனையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலைய குமுகாயம் லிமிடெட்
இயக்குனர்கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் லிமிடெட்
சேவை புரிவதுகொச்சிப் பெருநகரப் பகுதி
அமைவிடம்நெடும்பாச்சேரி, எர்ணாகுளம், கேரளம்
மையம்
  • ஏர் இந்தியா எக்சுபிரசு
  • புளு டார்ட் ஏவியேசன்
உயரம் AMSL9 m / 30 ft
ஆள்கூறுகள்10°09′20″N 76°23′29″E / 10.15556°N 76.39139°E / 10.15556; 76.39139
இணையத்தளம்http://www.cial.aero/
நிலப்படம்
COK is located in கேரளம்
COK
COK
COK is located in இந்தியா
COK
COK
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
27/09 3,400 11,155 அசுபால்ட்டு
உலங்கூர்தித் தளங்கள்
எண்ணிக்கை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
H1 19 63 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2019 - மார்ச் 2020)
பயணிகள் இயக்கம்9,624,334 (4.9%)
வானூர்தி இயக்கங்கள்66,106 (7%)
சரக்கு டன்கள்72,142 (Increase2.8%)
மூலம்: ஏஏஐ[1][2] [3]

கேரளாவின் வானூர்தி நிலையங்களில் இதுவே மிகவும் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. 2011-12 நிதியாண்டில் 4,717,650 பயணிகள் பயன்படுத்திய இது இந்தியாவின் ஏழாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்கியது. பன்னாட்டுப் பயணிகளை மட்டும் கருத்தில் கொண்டால் 2,586,658 பன்னாட்டுப் பயணிகள் வந்தசென்ற இந்த வானூர்தி நிலையம் இந்தியாவின் நான்காவது நிலையமாக உள்ளது.[6] ஏர் இந்தியா எக்சுபிரசு இதனைத் தனது முதன்மை முனைய நடுவமாகக் கொண்டுள்ளது; ஏர் இந்தியா, கோஏர், இன்டிகோ, ஜெட் ஏர்வேஸ், ஜெட்லைட் மற்றும் ஸ்பைஸ் ஜெட் இங்கிருந்து பல இடங்களுக்கு சேவைகள் வழங்கி வருகின்றன.

வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்

தொகு
வானூர்திச் சேவைகள் சேரிடங்கள்
ஏர் அரேபியா சார்ஜா
ஏர்ஏசியா கோலாலம்பூர்
ஏர்ஆசியா இந்தியா பெங்களூர், தில்லி, ஐதராபாத்து, கொல்க்கத்தா, மும்பை, விசாகப்பட்டினம்
ஏர் இந்தியா பெங்களூர், சென்னை, தில்லி, துபாய், ஜித்தா, மும்பை, ரியாத், திருவனந்தபுரம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அபுதாபி, பகுரைன், பெங்களூர், தோகா, துபாய், கோழிக்கோடு, மஸ்கட், சலலா, சார்ஜா, திருவனந்தபுரம்
அலையன்ஸ் ஏர் அகத்தி, மைசூர்
எமிரேட்ஸ் துபாய்
எடிஹட் ஏர்வேஸ் அபுதாபி
பிளே துபாய் துபாய்
கோஏர் அகமதாபாத் (1 பெப்ரவரி 2021 முதல்), பெங்களூர், சென்னை, தில்லி, ஐதராபாத்து, செய்ப்பூர், கொல்க்கத்தா, மும்பை

மேற்சான்றுகள்

தொகு
  1. "Traffic News for the month of March 2020: Annexure-III" (PDF). இந்திய வானூர்தி நிலைய ஆணையம். 22 May 2020. p. 3. Archived from the original (PDF) on 1 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 22 May 2020.
  2. "Traffic News for the month of March 2020: Annexure-II" (PDF). இந்திய வானூர்தி நிலைய ஆணையம். 22 May 2020. p. 3. பார்க்கப்பட்ட நாள் 22 May 2020.
  3. "Traffic News for the month of March 2020: Annexure-IV" (PDF). இந்திய வானூர்தி நிலைய ஆணையம். 22 May 2020. p. 3. Archived from the original (PDF) on 1 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 22 May 2020. url-status=live}}
  4. "Ernakulam, Kerala, India to Cochin International Airport - Google Maps". Maps.google.com. 1970-01-01. பார்க்கப்பட்ட நாள் 2012-02-10.
  5. "Kochi airport is the first aviation venture owned by the public". rediff.com. 1999-12-06 இம் மூலத்தில் இருந்து 2010-12-14 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5uyPqUAVQ?url=http://www.rediff.com/business/1999/dec/06inter.htm. பார்த்த நாள்: 2007-11-11. 
  6. AAI traffic figures as on April 2012

வெளி இணைப்புகள்

தொகு