அஜய் சிங் (தொழில் முனைவோர்)

அஜய் சிங் என்பவர் இந்திய தொழில் முனைவோர் ஆவார். ஸ்பைஸ் ஜெட் என்னும் வானூர்திக் குழுமத்தின் உரிமையாளர். 2017 சூன் நிலவரப்படி   59.13 விழுக்காடு பங்குகள் வைத்திருக்கிறார். 2015 இல் சன் குழுமத்தைச் சார்ந்த கலாநிதி மாறன் ஸ்பைஸ் ஜெட்  குழுமத்தின் 38.7 விழுக்காடு பங்குகளை வாங்கியதன் விளைவாக,  அஜய் சிங் இந்தக் குழுமத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகினார். தொடக்கத்தில் 2004 நவம்பர் முதல் 2010 வரை அஜய் சிங் ஸ்பைஸ் ஜெட்டின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக இருந்தார். 2015 சனவரியில் அஜய் சிங் மீண்டும் ஸ்பைஸ் ஜெட்டில் பெரும்பாலான பங்குகளை வாங்கி இக்குழுமத்தின் தலைவர் ஆனார்.. [1][2][3]

கல்வித் தகுதிகள்

தொகு

தில்லி பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்தவர். கார்னல் பல்கலைக் கழகத்தில் வணிக மேலாண்மையில் முதுவர் பட்டமும் பெற்றார். தொழில் நுட்பக் கழகத்திலும் பயின்றவர்.[4]

பிற பதவிகள்

தொகு

நடுவணரசின் செய்தித்துறை மற்றும்  தகவல் நுட்பத் துறையில் ஆலோசகராக இருந்தார். தில்லி போக்குவரத்து நிறுவனத்தில் இயக்குனராகவும் இருந்தார்.

மேற்கோள்

தொகு
  1. "Ajay Singh bought SpiceJet for Rs 2, ex-owner Maran says in plea". பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  2. "Ex-promoter Kalanithi Maran and promoter Ajay Singh start SpiceJet dogfight - The Economic Times". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  3. Sinha, Saurabh (17 April 2015). "I am back at SpiceJet for long run: Ajay Singh". The Times of India. TNN. http://timesofindia.indiatimes.com/business/india-business/I-am-back-at-SpiceJet-for-long-run-Ajay-Singh/articleshow/46951504.cms. பார்த்த நாள்: 29 June 2015. 
  4. https://www.bloomberg.com/research/stocks/private/person.asp?personId=32532589&privcapId=13225855