இந்திய வான்படை

இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படை.

இந்திய வான்படை அல்லது இந்திய விமானப் படை (IAF; Devanāgarī: भारतीय वायु सेना, Bhartiya Vāyu Senā) இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.

இந்திய பாதுகாப்பு படைகள்
முப்படைகளின் இலச்சினை
முப்படைகளின் இலச்சினை.
ஆள்பலம்
மொத்த பாதுகாப்பு படைகள் 2,414,700 (3 வது இடம் )
செயலார்ந்த பணியில் ஈடுபடுவோர் 1,414,000 (3 வது இடம் )
மொத்தபடைகள் 3,773,300 ((6 வது இடம் ))
துணை ராணுவ படைகள் 1,089,700
உறுப்புகள்
இந்திய தரைப்படை
இந்திய வான்படை
இந்தியக் கடற்படை
இந்தியக் கடலோரக் காவல்படை
துணை இராணுவ படைகள்
உத்திசார்ந்த அணுஆயுத கட்டளையகம்
வரலாறு
இந்திய இராணுவ வரலாறு

இந்திய வான்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. [1] [2] தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய வான்படை நாள் கொண்டாடப்படுகிறது.[3] இந்திய விடுதலைக்கு பின் இந்தியப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.

இந்திய வான்படை சுமார் 170,000 வீரர்களைக் கொண்டுள்ளது. [4] சுமார் 1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் படையில் உள்ளன. இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படையாகத் திகழ்கிறது. [5] அண்மைய காலத்தில் இந்திய வான்படையில் பெரிய அளவிலான நவினமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. [6] இப்படைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களே முதற் பெரும் படைத்தலைவர் ஆவார்.

குறிக்கோள் தொகு

இந்திய வான்படையின் குறிக்கோள் (mission) எனப்படுவது ஆயுதப்படைச் சட்டம் 1947, இந்திய அரசியலமைப்பு மற்றும் வான்படைச் சட்டம் 1950' ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.இந்தியாவின் வான் எல்லையை பாதுகாப்பதே இதன் தலையாய கடமையாகும்.

வரலாறு தொகு

பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் இந்திய பிரிவாக இந்திய விமானப்படை 8 அக்டோபர் 1932 அன்று தொடங்கப்பட்டது.ஏப்ரல் 1933 அன்று நான்கு வெஸ்ட்லாண்ட் வாபிடி விமானங்கள் மற்றும் ஐந்து விமானிகளுடன் இந்திய விமானப்படை தனது முதல் படையணிப்பிரிவை (squadron) தொடங்கியது.இந்தப் பிரிவு பிரிட்டிஷ் விமானப்படை அதிகாரி சீசல் பௌசீர் வழிகாட்டுதலில் இயங்கியது.

இரண்டாம் உலகப் போர்(1939-1945)

இரண்டாம் உலகப்போரின் போது இந்திய விமானப்படை, பர்மாவில் ஐப்பானின் முன்னேற்றத்தை தடுக்க முக்கிய கருவியாகப் செயல்பட்டது.மற்றும் அது அரக்கனில் உள்ள ஜப்பான் இராணுவத் தளங்களின் மீது தாக்குதல் நடத்தியது.அதோடுமட்டுமல்லாமல், வடக்கு தாய்லாந்தில் அமைந்திருந்த ஜப்பானிய விமானப்படை தளங்களான மே ஹோங் சன், சியாங் மை மற்றும் சியாங் ரேய் மீதும் தன் தாக்குதலை நடத்தியது.

இரண்டாம் உலகப்போரின் போது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல்,நெருங்கிய வான் உதவி (close air support), வேவு பார்த்தல்,வெடிகுண்டு வீசும் விமானங்களுக்கு பாதுகாப்பு அளித்தல் போன்ற பணிகளில் பெருமளவு ஈடுபடுத்தப்பட்டன.

போர் நடந்த சமயங்களில் விமானப்படை பெருமளவு விரிவுபடுத்தப்பட்டது. புதிய விமானங்கள் படையில் இணைக்கப்பட்டன.அமெரிக்க தயாரிப்பான Vultee Vengeance,Douglas DC-3 மற்றும் பிரிட்டிஷ் தயாரிப்பான Hawker HurricaneSupermarine Spitfire மற்றும் Westland Lysander, போன்ற விமானங்கள் படையின் வலிமையை கூட்டின.

 
Indian Air Force Soldier guarding India Gate

இந்திய விமானப்படையை அங்கீகரிக்கும் வகையில் 1945ல் அரசர் ஆறாம் ஜார்ஜ் "இராயல்" என்ற சொல்லை இந்திய விமானப்படைக்கு முன்னால் வைக்க அறிவித்தார்.ஆனால் இந்தியா குடியரசானபோது (1950) அந்த வார்த்தை (இராயல்) கைவிடப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பின் (1947-1950)

சுதந்திரத்திற்குப் பிறகு சுதந்திர இந்தியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது.புவியில் ரீதியாக விமானப்படையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.இந்திய விமானப் படை "இராயல்" என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டது.ஆனால் 10ல் மூன்று படையணிப்பிரிவு மற்றும் துணைநலங்கள் (facilities) பாகிஸ்தான் எல்லையினுள் அமைந்திருந்ததால் அவை ராயல் பாகிஸ்தான் விமானப்படைக்கு வழங்கப்பட்டன.

இந்திய வான்படையின் கட்டமைப்பு தொகு

இந்திய ஜனாதிபதி அனைத்து இந்திய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் விமானப்படைத் தலைவராக உள்ள தலைமைத் தளபதி ஆவார். இந்திய விமானப் படைத் தலைவராக இந்திய விமானப்படை தளபதி இருக்கிறார்.இந்திய விமானப்படை தளபதிக்கு உதவியாக ஆறு அதிகாரிகள் உள்ளனர்.அவர்கள் அனைவருமே விமானப்படையின் மார்ஷல் பதவியில் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Indian Air Force : Air Force History". Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2009-03-19.
  2. "Indian Air Force : Down the Memory Lane".
  3. "இந்திய வான்படை நாள்". Archived from the original on 2014-10-08. பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. http://www.avionews.com/index.php?corpo=see_news_home.php&news_id=1071143&pagina_chiamante=corpo%3Dindex.php
  5. "The strength Official website". Archived from the original on 2008-03-21. பார்க்கப்பட்ட நாள் 2009-03-19.
  6. http://www.earthtimes.org/articles/show/indian-defence-industry-100-billion-investment-opportunities,409653.shtml
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_வான்படை&oldid=3754749" இலிருந்து மீள்விக்கப்பட்டது