எச்.ஏ.எல். துருவ்
எச்ஏஎல் துருவ் (HAL Dhruv) என்பது ஒரு பயன்பாடு உலங்கு வானூர்தி ஆகும். இது இந்தியாவின் இந்துசுதான் வானறிவியல் நிறுவனத்தால் செருமனியின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.
துருவ் Dhruv | |
---|---|
இந்திய வான்படையின் துருவ் உலங்குவானூர்தி | |
வகை | பயன்பாட்டு உலங்குவானூர்தி |
உருவாக்கிய நாடு | இந்தியா |
உற்பத்தியாளர் | இந்துசுதான் வானறிவியல் நிறுவனம் |
வடிவமைப்பாளர் | சுற்று இறக்கை ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையம்[1] |
முதல் பயணம் | 20 ஆகத்து 1992[2] |
அறிமுகம் | 2002[2] |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | இந்தியத் தரைப்படை இந்திய வான்படை இந்தியக் கடற்படை |
தயாரிப்பு எண்ணிக்கை | 400+ (2024)[3] |
அலகு செலவு | ₹400 மில்லியன் (US$5.0 மில்லியன்).[4] |
மாறுபாடுகள் | ருத்ரா |
பின் வந்தது | இலகுரக போர் உலங்கு வானூர்தி |
இதன் முதல் பரிசோதனை வான் பயணம் 1992 இல் நடந்தது, ஆயினும் ராணுவத்தின் தேவைகள் மாறுபட்டதாலும் நிதிப் பற்றாக்குறையினாலும் இத்திட்டம் தாமதமடைந்தது.[2] அதன் பின்னர் இந்தியா நடத்திய அணு ஆயுத பரிசோதனையினால் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ தடைகளினால் இந்த திட்டம் மேலும் தாமதமடைந்தது. இறுதியில், இது 2002 ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புப் படைகளின் உபயோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.[2]
இது மேல் பகுதியில் நான்கு பட்டைகள் கொண்ட ஒரு பெரிய சுழழியையும், வால் பகுதியில் ஒரு சிறிய சுழழியையும் கொண்டுள்ளது.[5] இந்த உலங்கூர்தி இராணுவம் மற்றும் பொது உபயோகம் இரண்டையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இது நேப்பாளம், இசுரேல், மாலத்தீவு மற்றும் மொரிசியசு ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.[6][7][8][9]
விவரக்குறிப்புகள்
தொகுபொது இயல்புகள்
- குழு: 2
- கொள்திறன்: 12
- நீளம்: 15.87 m (52 அடி 1 அங்)
- அகலம்: 3.15 m (10 அடி 4 அங்)
- உயரம்: 4.98 m (16 அடி 4 அங்)
- மொத்தப் பாரம்: 4,445 kg (9,800 lb)
- தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 5,800 kg (12,787 lb)
- எரிபொருள் கொள்ளவு: 1,055 kg (2,326 lb)
- சக்தித்தொகுதி: 2 × தர்போமேக்கா டிஎம் 333 , 807 kW (1,082 shp) each
- சக்தித்தொகுதி: 2 × எச்ஏஎல்/தர்போமேக்கா சக்தி 1-எச் , 1,068 kW (1,432 shp) each
- முக்கிய சுழலி விட்டம்: 13.2 m (43 அடி 4 அங்)
- முக்கிய சுழலி பரப்பளவு: 136.85 m2 (1,473.0 sq ft)
செயற்பாடுகள்
- செல்லும் வேகம்: 250 km/h (155 mph; 135 kn)
- வரம்பு: 630 km (391 mi; 340 nmi)
- சகிப்புத்தன்மை: 3 மணி 42 நிமிடங்கள்
- உச்சவரம்பு: 6,096 m (20,000 அடி) [12]
- ஈர்ப்பு விசை வரம்பு: 3.5
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rotary Wing". Hindustan Aeronautics Limited இம் மூலத்தில் இருந்து 9 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211009163535/https://hal-india.co.in/Rotary%20Wing/M__326.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Equipment: Dhruv". இந்தியத் தரைப்படை. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 13, 2011.
- ↑ Philip, Snehesh Alex (22 October 2022). "Over 400 indigenous Dhruv and its variant helicopters built since 2002, but at least 23 crashed". The Print. https://theprint.in/defence/over-400-indigenous-dhruv-and-its-variant-helicopters-built-since-2002-but-at-least-23-crashed/1178686/.
- ↑ Siddiqui, Huma (15 சூலை 2008). "HAL on a Dhruv ride in LatAm". பைனான்சியல் எக்ஸ்பிரசு. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2011.
- ↑ Jackson, Paul (2003). Jane's All the World's Aircraft 2003–2004. Coulsdon, UK: Jane's Information Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7106-2537-5.
- ↑ syndication (2024-02-08). "Indian troops in Maldives will be replaced by 'competent Indian technical personnel': MEA". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-07.
- ↑ "HAL workers may replace military staff in Maldives". The Times of India. 2024-02-09. https://timesofindia.indiatimes.com/india/hal-workers-may-replace-military-staff-in-maldives/articleshow/107535138.cms.
- ↑ "La police s'équipe d'un nouvel hélicoptère". Archived from the original on 15 March 2023. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.
- ↑ "World Air Forces 2014" (PDF). Flightglobal Insight. 2014. Archived (PDF) from the original on 25 December 2013. பார்க்கப்பட்ட நாள் 5 September 2014.
- ↑ Jackson, Paul; Peacock, Lindsay; Bushell, Susan; Willis, David; Winchester, Jim, eds. (2016–2017). "India". IHS Jane's All the World's Aircraft: Development & Production. Couldson. pp. 307–308. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0710631770.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ "NAVY-DHRUV SPAT: Let's Stop Fighting, HAL Test Pilot Says". LiveFist. 11 June 2020. Archived from the original on 11 June 2020. பார்க்கப்பட்ட நாள் 11 June 2020.
- ↑ Luthra, Gulshan; Rai, Ranjit (September 2011). "IAF: ALH touches 20,000 feet and Cheetal 23,000". India Strategic. Archived from the original on 7 October 2011. பார்க்கப்பட்ட நாள் 6 October 2011.