சூர்ய கிரண்

சூர்ய கிரண் என்பது இந்திய வான்படையின் வானூர்தி வானூர்தி சாகசகாட்சிக் குழு ஆகும். சூர்யா கிரண் வானூர்தி சாகச காட்சிக்குழு 1996 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது இந்திய விமானப்படையின் 52ஆம் படைப்பிரிவின் ஒரு பகுதியாகும். இந்தக் குழு கருநாடக மாநிலத்தில் உள்ள பீதர் விமானப்படை நிலையத்தை தளமாக கொண்டு செயல்படுகின்றது. இந்த படைப்பிரிவு ஆரம்பத்தில் எச்.ஏ.எல். கிரண் எம்கே 2 பயிற்சி விமானங்களை பயன்படுத்தியது. பின்னர் 2015 இல் ஆக் எம்கே 132 விமானங்களை பயன்படுத்த தொடங்கியது.

சூர்ய கிரண் வானூர்தி சாகச காட்சிக்குழு
செயற் காலம்27 மே 1996 - 30 சூன் 2011
15 பிப்ரவரி 2015-தற்போது வரை
நாடு இந்தியா
கிளைஇந்திய வான்படை
பொறுப்புவானூர்திக் கலை
பகுதி52ஆம் படை
அரண்/தலைமையகம்பிதார் விமானப்படை தளம்
சுருக்கப்பெயர்(கள்)சுறாக்கள் (The Sharks)
குறிக்கோள்(கள்)सदैव सर्वोत्तम - Sadaiva Sarvōttama
(சமசுகிருதம்: "எப்போதும் சிறந்தவர்கள்")[1]
நிறம்இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை
        
தளபதிகள்
தற்போதைய
தளபதி
குரூப் கேப்டன் தில்லன்[2]

வரலாறு

தொகு

1940களின் பிற்பகுதியில், இந்திய விமானப்படை சிறப்பு சந்தர்ப்பங்களில் வானூர்திக் கலைக் காட்சிகளை நிகழ்த்தும் ஒரு காட்சி விமானப் படைப்பிரிவைக் கொண்டிருந்தது. மார்ஷல் அர்ஜன் சிங் தலைமையில் செயல்பட்ட இக்குழு ஆக்கர் அண்டர் விமானங்களை பயன்படுத்தியது. 1947 ஆம் ஆண்டில் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களை கொண்ட ஒரு சாகச நிகழ்ச்சியை இந்த குழு வழிநடத்தியது.[3] 1982 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையின் பொன்விழா ஆண்டில், பல்வேறு படைப்பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போர் விமானிகள் லைட்னிங் தண்டர்போல்ட்ஸ் என்ற வானூர்திக் கலைக் குழுவை உருவாக்க நியமிக்கப்பட்டனர்.[4] நீல மற்றும் வெள்ளை நிற அண்டர் விமானங்களை பறக்கவிட்ட இந்த குழு 1989 வரை வானூர்திக் கலைக் காட்சிகளை நிகழ்த்தியது.

 
சூர்ய கிரண் குழு 1996 முதல் 2011 வரை எச்.ஏ.எல். எச்ஜேடி-16 கிரண் விமானத்தை பயன்படுத்தியது.

சூர்ய கிரண் வானூர்தி செயல்விளக்கக் கலைக் குழு 1996 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது இந்திய விமானப்படையின் ஒரு பகுதியாக கருநாடக மாநிலத்தில் உள்ள பீதர் விமானப்படை நிலையத்தை தலமாக கொண்டு உருவாக்கப்பட்டது.[5] இந்தக் குழு 1996 முதல் 2011 வரை எச்.ஏ.எல். எச்ஜேடி-16 கிரண் விமானத்தை பயன்படுத்தியது.[6] 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற விண்வெளி பாதுகாப்பு கண்காட்சியான ஏரோ இந்தியா க்கு முன்னதாக விங் கமாண்டர் குல்தீப் மாலிக்கின் கீழ் இந்த குழு உருவாக்கப்பட்டது.[7] ஆரம்பத்தில் நான்கு விமானங்களை கொண்டு சாகசங்களை செய்த இக்குழு, மே 1996 இல் ஆறு விமானங்களை பயன்படுத்தத் தொடங்கியது.[7] இந்தக் குழு 15 செப்டம்பர் 1996 அன்று கோயம்புத்தூரில் உள்ள விமானப்படை நிர்வாக கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டங்களுக்காக தங்கள் முதல் காட்சியை நிகழ்த்தினர்.[8]

1998 ஆம் ஆண்டில் விங் கமாண்டர் ஏ. கே. முர்கையின் தலைமையின் கீழ், இந்தக் குழு ஒன்பது விமான அமைப்பாக விரிவடைந்தது. இந்த அமைப்பு செங்கோட்டையில் நடந்த  சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது முதல் முறையாக பொதுமக்களுக்கு காட்சிப் படுத்தப்பட்டது.[7] 2006 ஆம் ஆண்டு இந்த அணிக்கு ஒரு தனி படைப்பிரிவு எண் வழங்கப்பட்டது. இது இந்திய விமானப்படையின் எண் 52 படைப்பிரிவாக (சுறாக்கள், Sharks) நியமிக்கப்பட்டது. ஏரோ இந்தியா 2011 க்குப் பிறகு கிரண் பயிற்சி விமானங்களின் பற்றாக்குறை காரணமாக இந்தக் குழு தற்காலிகமாக பறப்பதை நிறுத்தியது.[7] பிறகு 2015 ஆம் ஆண்டில் விங் கமாண்டர் அஜித் குல்கர்னியின் தலைமையின் கீழ் பிரித்தானிய பி. ஏ. இ. ஆக் பயிற்சி விமானங்களை கொண்டு சூர்யா கிரண் குழு மறுசீரமைக்கப்பட்டது.

அமைப்பு

தொகு
 
இந்தக் குழு 2015 முதல் பி.ஏ.இ. ஆக் பயிற்சி விமானங்களை பயன்படுத்துகிறது.

சூர்ய கிரண் குழு 1996 ஆம் ஆண்டு முதல் 2011 வரை எச். ஏ. எல். கிரண் எம்கே-2 பயிற்சி விமானங்களை இயக்கியது. 2015 இல், வானூர்தி கலைக்காட்சிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இருபது ஆக் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.[9] இந்தக் குழு 2015 ஆம் ஆண்டு முதல் ஆக் விமானங்களை பயன்படுத்தி வருகிறது.[10] இந்த விமானங்களில் பிரகாசமான இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை வர்ணங்கள் பூசப்பட்டுள்ளது.[11] வண்ண புகைகளை உருவாக்க மறுவடிவமைக்கப்பட்ட எரிபொருள் தொட்டிகளில் டீசல் எரிபொருளுடன் வண்ண சாயம் கலக்கப்படுகின்றன.[12]

இந்த குழுவில் 13 விமானிகள் உள்ளனர்.[13] இந்த விமானிகள் வருடத்திற்கு இரண்டு முறை செயல்முறை தேர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், மேலும் மூன்று ஆண்டு காலத்திற்கு பணியாற்ற தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். விமானிகளைத் தவிர, குழுவில் ஒரு விமானத் தளபதி, ஒரு நிர்வாகி மற்றும் விமானத்தின் பராமரிப்பு மற்றும் சேவைக்கான தொழில்நுட்ப அதிகாரிகள் உள்ளனர்.

சம்பவங்கள்

தொகு
  • 18 மார்ச் 2006 அன்று பீதர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அணியின் கிரண் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானிகள் விங் கமாண்டர் தீரஜ் பாட்டியா மற்றும் சுகுவாட்ரன் லீடர் ஷைலேந்தர் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர்.[14]
  • 23 திசம்பர் 2007 அன்று, குழுவின் கிரண் விமானம் பிஜு பட்நாயக் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான போது விமானி லேசான காயங்களுடன் தப்பினார்.[15]
  • 21 சனவரி 2011  அன்று, விங் கமாண்டர் ஆர். எஸ். தலிவால் கர்நாடகாவின் பெல்லுரா கிராமத்திற்கு அருகே காலை 8:45 மணிக்கு ஒரு பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து பின்னர் இயற்கை எய்தினார்.[14]
  • ஏரோ இந்தியா 2019 க்காக பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அணியின் இரண்டு ஆக் விமானங்கள் 19 பிப்ரவரி 2019 அன்று பெங்களூரு அருகே காலை 11:54 மணிக்கு விபத்துக்குள்ளாகின. இதில் விமானி விங் கமாண்டர் சாகில் காந்தி மரணமடைந்தார்.[16]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "No.52 Squadron Sharks". Bharat Rakshak. பார்க்கப்பட்ட நாள் 2 January 2022.
  2. "Surya Kiran’s aerobatics leave spectators spellbound". The Times of India. 23 October 2023. https://timesofindia.indiatimes.com/city/mysuru/surya-kirans-aerobatics-leave-spectators-spellbound/articleshow/104638161.cms. 
  3. "Marshal of the Air Force Arjan Singh Padma Vibhushan, DFC". இந்திய விமானப்படை. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  4. "Thunderbolts". Bharat Rakshak. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  5. "Aero India in Bengaluru: Surya Kiran to shine over today’s final". https://www.newindianexpress.com/states/karnataka/2023/Nov/19/aero-india-in-bengaluru-surya-kiranto-shine-over-todays-final-2634233.html. 
  6. "Surya Kiran Aerobatic Team". Bharat Rakshak. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  7. 7.0 7.1 7.2 7.3 "Suryakiran: Flying formation that dazzles the skies with loops, rolls and dives". https://www.tribuneindia.com/news/chandigarh/suryakiran-flying-formation-that-dazzles-the-skies-with-loops-rolls-and-dives-314685. 
  8. "Suryakiran: Flying formation that dazzles the skies with loops, rolls and dives". Tribune. https://www.tribuneindia.com/news/chandigarh/suryakiran-flying-formation-that-dazzles-the-skies-with-loops-rolls-and-dives-314685. 
  9. "For Surya Kiran aerobatics team, IAF set to purchase 20 Hawks". The Indian Express. 26 October 2015. http://indianexpress.com/article/india/india-news-india/for-surya-kiran-aerobatics-team-iaf-set-to-purchase-20-hawks/. 
  10. "Suryakiran: Flying formation that dazzles the skies with loops, rolls and dives". Tribune. https://www.tribuneindia.com/news/chandigarh/suryakiran-flying-formation-that-dazzles-the-skies-with-loops-rolls-and-dives-314685. 
  11. "Surya Kiran team" (PDF). Vayu Aerospace. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  12. "Surya Kiran aerobatics team set to present 500th display". The Hindu. 13 February 2017. https://www.thehindu.com/news/national/karnataka/Surya-Kiran-aerobatics-team-set-to-present-500th-display/article17293068.ece. 
  13. "In A First, Indian Air Force To Grace The Skies During World Cup Final". NDTV. 17 November 2023. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  14. 14.0 14.1 "IAFs Surya Kiran has had its share of accidents". Tribune. https://www.tribuneindia.com/news/archive/nation/news-detail-731513. 
  15. "IAF aircraft crash-lands, pilot jumps out". The Hindu. 23 December 2007. http://www.thehindu.com/todays-paper/tp-national/IAF-aircraft-crash-lands-pilot-jumps-out/article14900115.ece. 
  16. "Surya Kiran Aircraft Crash". Government of India. 19 February 2019. பார்க்கப்பட்ட நாள் 19 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்ய_கிரண்&oldid=4106143" இலிருந்து மீள்விக்கப்பட்டது