போயிங் 777

நீள்தொலைவு அகலவுரு இரட்டைப்பொறி தாரை வானூர்தி

போயிங் 777 போயிங் வணிக வானூர்திகள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் நீள்தொலைவு இரட்டைப் பொறி அகலவுரு தாரை வானூர்தி குடும்பமாகும். இது பெரிய இரட்டைப்பொறி வானூர்திகளில் ஒன்றாகும். இதில் பொதுவாக 314 முதல் 451 வரையிலானப் பயணிகள் அமரக்கூடும்.5235 முதல் 9380 வரையிலான (கடல்வழி மைல்) தொலைவு செல்லக்கூடியது. பரவலாக "டிரிப்பிள் செவன்" என அழைக்கப்படும் இந்த வானூர்தியின்[3][4] குறிப்பிடத்தக்க பண்புக்கூறுகள்: மிகப்பெரும் விட்டமுடைய டர்போ பொறிகள், ஒவ்வொரு முதன்மை கீழறங்கு அமைப்பிலும் ஆறு சக்கரங்கள், வட்ட வடிவில் அமைந்த எரிபொருட் கிடங்கு, தகடு போன்ற வால் கூம்பு ஆகியன ஆகும்.எட்டு முதன்மை வான்சேவை நிறுவனங்களுடன் கலந்தாய்ந்து உருவாக்கப்பட்ட 777 போயிங்கின் 767க்கும் 747க்கும் இடையேயான கொள்ளளவு வேறுபாட்டை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே போயிங்கின் கம்பி வழிப் பறப்பு வானூர்தியாகும்; கணினி ஒத்திசைக்கும் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. மேலும் முழுமையும் கணினி-வடிவமைத்த வணிக வானூர்தியாகும்.

போயிங் 777
Aircraft landing approach. Front quarter view of twin-engine jet in flight with flaps and landing gear extended.
யுனைடெட் எயர்லைன்சின் போயிங்
777-200ER, பதிவு N797UA
வகை அகல உரு தாரை வானூர்தி
உருவாக்கிய நாடு ஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர் போயிங் வணிக வானூர்திகள்
முதல் பயணம் சூன் 12, 1994
அறிமுகம் சூன் 7, 1995,
யுனைடெட் எயர்லைன்சு
தற்போதைய நிலை சேவையில்
முக்கிய பயன்பாட்டாளர்கள் எமிரேட்சு
யுனைடெட் எயர்லைன்சு
எயர் பிரான்சு
சிங்கப்பூர் வான்வழி
உற்பத்தி 1993–நடப்பு
தயாரிப்பு எண்ணிக்கை 1,212 சூன் 2014 வரை
அலகு செலவு 777-200ER: US$261.5 மில்லியன்[1]
777-200LR: US$296.0 மில்லியன்[1]
777-300ER: US$320.2 million[1]
777F: US$300.5 மில்லியன்[1]
777-8X: US$349.8 மில்லியன்[2]
777-9X: US$377.2 மில்லியன்[2]
பின் வந்தது போயிங் 777X

1995இல் முதல் 777-200 வானூர்திகள் சேவை புரியத் தொடங்கின. அடுத்து சற்றே நீட்டித்த 777-300 (33.3 அடி அல்லது 10.1 மீ நீட்டிக்கப்பட்டது) 1998இல் சேவைக்கு வந்தது. நீள்தொலைவு செல்லக்கூடிய 777-300ER மற்றும் 777-200LR வேறுபாடுகள் முறையே 2004இலும் 2006இலும் சேவைக்கு வந்தன. சரக்குகளை ஏற்றிச் செல்லவல்ல 777F தனது முதல் பறப்பை 2008இல் நிகழ்த்தியது.

வேறுபாடுகள்

தொகு
 
அமெரிக்க எயர்லைன்சு 777-200 இலண்டன் ஹீத்ரோவில் இறங்குதல்.

போயிங் 777இன் வேறுபாடுகளாவன :
5000+ வான்வழி மைல்கள் வீச்சு

  • 777-200
  • 777-200ER
  • 777-300

9000+ வான்வழி மைல்கள் வீச்சு

  • 777-200LR
  • 777-300ER

சரக்கு வானூர்திகள்

  • 777F

777இரக வானூர்திகளில் முதலில் சேவைக்கு விடப்பட்டது 777-200 ஆகும். இது முதலில் சூன் 12, 1994இல் பறக்க விடப்பட்டது. யுனைடெட் எயர்லைன்சு நிறுவனத்தின் வணிக சேவையில் சூன் 7, 1995 முதல் ஈடுபடுத்தப்பட்டது. இதில் 440 பயணிகள் 5240 வான்வழி மைல்கள் (9700 கிமீ) தொலைவிற்கு செல்லவியலும்.[5] இதுவரை 777-200 இரக வானூர்திகள் 88 தயாரிக்கப்பட்டுள்ளன; தயாரிப்பு காத்திருப்பு எதுவும் இல்லை.

 
சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையத்தில் சிங்கப்பூர் எயர்லைன்சின் 777-200ER.

777-200ER என்பது 777-200 இரகத்தின் விரிவுபடுத்தப்பட்ட தொலைதூரமுடைய இரகமாகும். இந்த இரக வானூர்திகள் அதே அளவுப் பயணிகளுடன் 7725 வான்வழி மைல்கள் (14305 கிமீ) தொலைவு பறக்க வியலும். இதுவரை 777 -200ER இரக வானூர்திகள் 422 தயாரிக்கப்பட்டுள்ளன; தயாரிப்பு காத்திருப்பு எதுவும் இல்லை.

காட்சிக்கூடம்

தொகு

வானூர்தி கொள்வனவு ஆணை மற்றும் விநியோகம்

தொகு
கொள்வனவு ஆணை மற்றும் விநியோகம்
கொள்வனவு ஆணை விநியோகம்
வகை மொத்தம் நிறைவுறாதது மொத்தம் 2014 2013 2012 2011 2010 2009 2008 2007 2006 2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996 1995
777-200 88 0 88 1 3 2 1 3 9 3 10 11 32 13
777-200ER 422 0 422 0 4 3 3 4 3 19 23 13 22 29 41 55 42 63 50 48
777-200LR 59 1 58 2 1 1 6 9 16 11 10 2
777-300 60 0 60 1 4 2 9 6 3 4 17 14
777-300ER 721 236 485 33 79 60 52 40 52 47 53 39 20 10
777F 134 43 91 5 14 19 15 22 16
777X 216[6] 216
Total 1700 496 1204 40 98 83 73 74 88 61 83 65 40 36 39 47 61 55 83 74 59 32 13

தகவல்கள் மே 31, 2014[7][8][9][10][11]

ஐசிஏஓ அழைப்புப்பெயர்[12] மாதிரி தொடர்
B772 777-200
777-200ER
B77L 777-200LR
777F
B773 777-300
B77W 777-300ER

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Commercial Airplanes Jet Prices". Boeing. The Boeing Company. பார்க்கப்பட்ட நாள் November 18, 2013.
  2. 2.0 2.1 "Introducing the 777X". Boeing. The Boeing Company. பார்க்கப்பட்ட நாள் November 18, 2013.
  3. Robertson, David (March 13, 2009). "Workhorse Jet Has Been Huge Success with Airlines that Want to Cut Costs". The Times (London, England, United Kingdom: Times Newspapers) இம் மூலத்தில் இருந்து June 12, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110612140321/http://business.timesonline.co.uk/tol/business/industry_sectors/transport/article5898240.ece. பார்த்த நாள்: March 20, 2009. 
  4. Grantham, Russell (February 29, 2008), "Delta's new Boeing 777 Can Fly Farther, Carry More", The Atlanta Journal-Constitution, Delta will put the new "triple seven" — as airline folks call the jet — into service March 8. {{citation}}: |access-date= requires |url= (help)
  5. "Boeing: 777-200/-200ER Technical Characteristics." Boeing. Retrieved February 20, 2014.
  6. Menon, Praveen. "Emirates finalizes $56 billion order for 150 Boeing 777X planes". Reuters. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-07-18.
  7. "777 Model Orders and Deliveries summary". Boeing. December 2013. Archived from the original on ஆகஸ்ட் 23, 2013. பார்க்கப்பட்ட நாள் January 6, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Current Year Deliveries". Boeing. December 2013. பார்க்கப்பட்ட நாள் January 10, 2014.
  9. "Orders and Deliveries search page". Boeing. December 2013. பார்க்கப்பட்ட நாள் January 10, 2014.
  10. "Boeing Launches 777X with Record-Breaking Orders and Commitments". Boeing. November 2013. பார்க்கப்பட்ட நாள் December 23, 2013.
  11. "Boeing and Cathay Pacific Airways Announce Order for 21 777-9Xs". Boeing. December 2013. பார்க்கப்பட்ட நாள் December 23, 2013.
  12. "ICAO Document 8643." பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு. Retrieved: February 6, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போயிங்_777&oldid=3968278" இலிருந்து மீள்விக்கப்பட்டது