சிங்கப்பூர் வான்வழி

சிங்கப்பூர் வான்வழி (Singapore Airlines (SIA))என்பது சிங்கப்பூர் நகரநாட்டின் கொடி தாங்கும் விமான சேவை நிறுவனம் ஆகும். சிங்கப்பூர் சாங்கி பன்னாட்டு விமானநிலையத்தை மையம் கொண்டுள்ளது. இதற்கு கிழக்காசியா, தெற்காசியா, இங்கிலாந்து-ஆஸ்திரேலியத் தடங்கள் ஆகியவற்றில் நல்ல இருப்பு கொண்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்சு
IATA ICAO அழைப்புக் குறியீடு
SQ SIA SINGAPORE
நிறுவல்1947 (மலேசியன் ஏர்லைன்சு)
மையங்கள்சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்KrisFlyer
PPS Club
கூட்டணிஇசுடார் அலையன்சு
கிளை நிறுவனங்கள்சில்க் ஏர்
வானூர்தி எண்ணிக்கை110 (+55 orders)
சேரிடங்கள்61
தாய் நிறுவனம்Temasek Holdings (54.39%)[1][2]
தலைமையிடம்சிங்கப்பூர்
முக்கிய நபர்கள்Chew Choon Seng (CEO)
வலைத்தளம்http://www.singaporeair.com
Airline House, the Singapore Airlines head office

உலகின் மிகப்பெரிய பயணிகள் வானூர்தியான ஏர்பசு எ 380 தன் முதல் வணிக நோக்கிலான பறப்பை சிங்கப்பூர் ஏர்லைன்சு மூலம் மேற்கொண்டது. அதன் துணை நிறுவனமான சில்க் வான்வழி சிறிய தடங்களில் செயல்படுகிறது . வருவாய், பிறப்புத் தொலைவு, பயணிகள் எண்ணிக்கை ஆகியவற்றில் உலகத்தில் 27வது பெரிய வான்வழி நிருவனமாக போர்ப்சு இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூரின் சங்கி எனும் இடத்தினை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஒரு விமானச் சேவையாகும். தெற்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா மற்றும் ஓசியானியா ஆகிய இடங்களில் இது சிறப்புற செயல்படுகிறது.

வரலாறு

தொகு
 
An Airspeed Consul (VR-SCD) — the first aircraft type operated by Malayan Airways, which was the forerunner of Singapore Airlines

சிங்கப்பூர் வான்வழி மலாய் வான்வழி என்கிறப் பெயரில் முதலில் துவக்கப்பட்டது. சிங்கப்பூர் கோலாலம்பூர் இடையில் முதல் பறப்புகள் துவக்கப்பட்டன. சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்ததும் சிங்கப்பூர் வான்வழி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1970களில் இந்திய நகரங்களுக்கு பறக்கத் தொடங்கியது. போயிங்-747 ரக வானூர்திகள் அதன் அணிவரிசையில் சேர்க்கப்பட்டன. 1980களில் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நகரங்களுக்கு பறப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.


தற்போதைய விமானங்களில் அதிக பயணிகள் விமானத்தினை இயக்குவது இதுவே. ஏர்பஸ் ஏ380 இன் முதல் வாடிக்கையாளர்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆவர். இது தனது கிளைநிறுவனங்களுக்கும் தேவையான விமானச் சேவைகளைப் புரிகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கிளைநிறுவனமாக சில்க்ஏர் குறைந்த நிறுத்தற் தூரம் கொண்ட இடங்களுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் மற்றொரு கிளை நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கார்கோ, சரக்குகளை இடமாற்றும் செய்யும் விமானப் பணியில் ஈடுபட்டுள்ளது. டைகர்ஏர் எனும் நிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கிளைநிறுவனமாக ஸ்கூட் குறைந்த கட்டண விமானச் சேவையினைச் செய்கிறது.


பயணிகளின் வருமானத்தின் அடிப்படையிலான தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள்ளும், சர்வதேச பயணிகளுக்கான சேவையின் அடிப்படையிலான பட்டியலில் 10 வது இடத்திலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளது.[3] டிசம்பர் 15, 2010 இல் உலகின் இரண்டாவது பெரிய சந்தை முதலீட்டினைக் கொண்ட விமான நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்று சர்வதேச விமானப்போக்குவரத்து சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அப்போதைய சந்தை மதிப்பு 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவர்களின் பெருநிறுவன அடையாளங்களில் சிங்கப்பூர் பெண்ணைக் காட்டுவதனை அடையாளமாகக் கொண்டுள்ளனர்.

தொடர்ப்பயணியர் திட்டம்

தொகு

கிரிசுபிளையர்(KrisFlyer) மற்றும் பிபிஎசு கிளப்(PPSClub) என்கிற இரண்டு தொடர் பயணியர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கிரிசுபிளையர்

தொகு

இதில் மைல் புள்ளிகள் StarAlliance உறுப்பினர் வான்வழிகள் மற்றும் அறைவிடுதிகளிலிருந்து சேர்க்கப்படுகிறது.

பிபிஎசு கிளப்

தொகு

Priority Passenger Service (PPS) முதல் வகுப்பு (First Class) அல்லது வணிக வகுப்பு (Business Class) பறப்புகளிலிருந்து சேர்க்கப்படுகிறது.

இலக்குகள்

தொகு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், உலகின் ஆறு கண்டங்களில் உள்ள 35 நாடுகளில் தனது இலக்குகளைக் கொண்டுள்ளது.[4] இந்த இலக்குகளுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் முதன்மை மையத்திலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வலுவான போக்குவரத்துப் பதிவுகளைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதிகளில் தங்களது கிளை நிறுவனமான சில்க்ஏர் உதவியுடன் செயல்பட்டு பல சர்வதேச இலக்குகளை சிங்கப்பூருடன் இணைக்கிறது.

‘கங்காரு பாதை’ என்றழைக்கப்படும் பாதையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெரும்பான்மையாக பணியாற்றியுள்ளது. மார்ச் 2008 ன் படி, ஆஸ்திரேலியாவிற்கு உள்ளே மற்றும் வெளியில் இயக்கப்பட்ட, சர்வதேச விமானப் பயணங்களில் 11 சதவீத பயணங்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸினை சார்ந்தவை.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுடன் தாராளவாத ஒப்பந்தத்தினைச் செய்துகொண்டதன் மூலம் பாங்காங்கில் இருந்து துபாய்க்கு விமானங்களைச் செயல்படுத்தத் தொடங்கியது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – உயர்தர வழித்தடங்கள்

தொகு

கோலா லம்பூர் – சிங்கப்பூர், சிட்னி – மெல்போர்ன், சிங்கப்பூர் – கோலா லம்பூர் மற்றும் சிட்னி – பிரிஸ்பேன் போன்ற வழிப்பாதைகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் உயர்தர விழித்தடங்கள் ஆகும்.[5]

எண் தொடக்கம் முடிவு வாரத்திற்கு இயக்கப்படும்
விமானங்களின் எண்ணிக்கை
1 கோலா லம்பூர் சிங்கப்பூர் 111
2 சிட்னி மெல்போர்ன் 108
3 சிங்கப்பூர் கோலா லம்பூர் 102
4 சிட்னி பிரிஸ்பேன் 68

இவை தவிர பிற தேவைகளுக்கென மெல்போர்னில் இருந்து காஃப்ஸ் துறைமுகம் வரையிலும், கிறிஸ்ட்சர்சில் இருந்து வுட்போர்ன் வரையிலும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

விமானக் குழு

தொகு
 
Boeing 747-400 at Singapore Changi Airport in Star Alliance livery while still maintaining its corporate logo on the tail
 
Boeing 777-300ER

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தற்போதைய விமானக்குழு(பிப்ரவரி 28, 2015 ன் படி)[6]

விமானம் சேவையில் இருப்பது ஆர்டர்கள் விருப்பங்கள் பயணிகள்
அறைகள் முதல் வகுப்பு வணிக வகுப்பு பொருளாதார வகுப்பு மொத்தம்
ஏர்பஸ் ஏ330 – 300 30 4 - - - 30 255 285
ஏர்பஸ் ஏ350 – 900 - 70 20 TBA
ஏர்பஸ் ஏ380 – 800 19 5 1 12 - 60 399 471
86 311 409
போயிங்க் 777 - 200 12 - - - - 38 228 266
30 293 323
போயிங்க் 777 – 200ஈஆர் 16 - - - - 30 255 285
26 245 271
போயிங்க் 777 - 300 7 - - - 8 50 226 284
போயிங்க் 777 – 300ஈஆர் 24 3 - - 8 42 228 278
போயிங்க் 787 - 10 - 30 - TBA
மொத்தம் 108 112 21
 
Boeing 777-300ER First Class

ஏர்பஸ் ஏ330, ஏர்பஸ் ஏ380 மற்றும் போயிங்க் 777 ஆகிய மூன்று ரக விமானங்களில் உள்ள அகன்ற பாகங்களுடன் கூடிய அனைத்து விமானங்களையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இயக்குகிறது. பிப்ரவரி 28, 2015 ன் படி மொத்தம் 108 விமானங்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸிடம் உள்ளது.[7] அதிக பழமையில்லாத விமானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையினை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கொண்டிருப்பதால், அடிக்கடி இதன் விமானங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறது.

உள் விமானச் சேவைகள்

தொகு
 
Boeing 777-300ER Business Class
 
Singapore Airlines Boeing 747-400 9V-SPK involved in Singapore Airlines Flight 006

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், உள் விமானச் சேவைகளாக முதல் வகுப்பு அறைகள், பொருளாதார வகுப்புகள், வணிக வகுப்புகள், உயர் மதிப்பு பொருளாதார வகுப்புகள் மற்றும் அறைச்சேவைகளுடன் சேர்த்து உணவுகளையும் அளிக்கின்றனர்.

கோட்ஷேர் ஒப்பந்தங்கள்

தொகு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துள்ளது. இதில் ஸ்டார் அலையன்ஸின் உறுப்பினர்கள் கிடையாது.[8]

  1. கருடா இந்தோனேசியா
  2. ஜப்பான் ஏர்லைன்ஸ்
  3. ஜெட்புளூ ஏர்வேஸ்[9]
  4. மலேசியா ஏர்லைன்ஸ்
  5. சில்க்ஏர்
  6. டிரான்சேயிரோ ஏர்லைன்ஸ்
  7. யுஎஸ் ஏர்வேஸ்
  8. விர்ஜின் அட்லாண்டிக் ஏர்வேஸ்
  9. விர்ஜின் அமெரிக்கா[10]
  10. விர்ஜின் ஆஸ்திரேலியா
  11. விஸ்டாரா[11]

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Major Shareholders". Singapore Airlines. Archived from the original on 2009-02-27. பார்க்கப்பட்ட நாள் 2009-03-04.
  2. "Singapore Airlines Annual Report 07/08" (PDF). Singapore Airlines. pp. 88, 171. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2009-03-04.
  3. "Airline Spotlight: Singapore Airlines". Flightnetwork.com. Archived from the original on 2016-04-04. பார்க்கப்பட்ட நாள் 2015-03-25.
  4. "Singapore Airlines".
  5. "Singapore Airlines". cleartrip.com. Archived from the original on 2015-03-21. பார்க்கப்பட்ட நாள் 2015-03-25.
  6. "List of Aircraft on Singapore Register". CAAS.gov.sg. Civil Aviation Authority of Singapore. 28 February 2015. Archived from the original on 16 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 8 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "List of Aircraft on Singapore Register". caas.gov.sg. Archived from the original on 2017-04-16. பார்க்கப்பட்ட நாள் 2015-03-25.
  8. "Codeshare Partners of Singapore Airlines". Singapore Airlines. 9 November 2013. Archived from the original on 15 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 9 November 2013.
  9. "Singapore Airlines And JetBlue Airways To Launch Codeshare Operations". singaporeair.com. 29 May 2014. Archived from the original on 4 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 4 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "VIRGIN AMERICA LAUNCHES CODESHARE WITH SINGAPORE AIRLINES". virginamerica.com. Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2015-03-25.
  11. "Vistara to go international once 5/20 rule goes awayS". thehindu.com.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கப்பூர்_வான்வழி&oldid=3631726" இலிருந்து மீள்விக்கப்பட்டது