தாய் நிறுவனம்

தனக்கு கீழுள்ள நிறுவனங்களை பெருவாரியான பங்குகள் கொண்டு நிருவகிக்கும் நிறுவனம்

தாய் நிறுவனம் அல்லது பற்று நிறுவனம் என்று அறியப்படும் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களில் பங்குகளை வாங்கி தக்கவைத்துக் கொள்ளும் நிறுவனமாகும். இத்தகைய நிறுவனங்களின் கீழுள்ள நிறுவனங்களை கிளை நிறுவனங்கள் என்பர். தாய் நிறுவனங்களையும் கிளை நிறுவனங்களையும் ஒருசேர பெருநிறுவனக் குழுமம் என்பர்.[1]

பதவேறுபாடு தொகு

ஒரு நிறுவனம் தாய் நிறுவனமாக அறியப்பட அதன் கிளை நிறுவனங்களின் பெருவாரியான பங்குகளை தக்கவைத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படி பெருவாரியான பங்குகளை தக்க வைத்திருக்காத நிறுவனங்களைப் பற்று நிறுவனங்கள் என்றே அழைப்பர். எல்லாத் தாய் நிறுவனங்களும் பற்று நிறுவனங்கள். ஆனால், எல்லாப் பற்று நிறுவனங்கள் தாய் நிறுவனமாகா. எனினும், பல்வேறு நாடுகளில் பதங்கள் வேறுபடுகின்றன. சில நாடுகளில், பற்று நிறுவனங்கள் அனைத்தும் தாய் நிறுவனங்களின் பால் வைக்கப்படுகின்றன.[2]

விவரங்கள் தொகு

தாய் நிறுவனங்கள் பங்குதாரர்களின் இடையே பெரும் நம்பகத்தன்மை கொண்டவையாய் உள்ளன. ஒரு குழுமத்தின் மூலத் தகவல்கள், அறிவுசார் சொத்து மற்றும் வணிக இரகசியங்கள் தாய் நிறுவனங்களின் பால் தான் பெரும்பாலும் வைக்கப்படும். இதனால் நம்பகத்தன்மை கூடுகின்றது.

ஒரு நிறுவனம் தனக்கு கீழ் ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதன் பெரும்பாலான பங்குகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு பங்குகளை மட்டும் விற்பனை செய்யும் போது அந்நிறுவனம் தாய் நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு தாய் நிறுவனம் தன் கிளை நிறுவனத்தின் அத்தனை பங்குகளையும் தக்க வைத்துக் கொள்ளும் போது அக்கிளை நிறுவனம் முற்றும் சொந்தமாக்கப்பட்ட கிளை நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "பற்று நிறுவனங்கள் - நியூ யார்க் டைம்ஸ்".
  2. "பெர்சனல் ஹோல்டிங் - சிபிஏ ஜர்னல்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_நிறுவனம்&oldid=3143976" இலிருந்து மீள்விக்கப்பட்டது