மலேசியா எயர்லைன்சு

(மலேசியா எயர்லைன்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலேசியா எயர்லைன்ஸ் ஆங்கிலம்: Malaysia Airlines; மலாய்: Penerbangan Malaysia) என்பது) மலேசியாவின் தேசிய விமானச் சேவை நிறுவனமாகும். ஐந்து கண்டங்களிலும் உள்ள 100-க்கும் அதிகமான இடங்களுக்கு விமானச் சேவைகளை நடத்தும் இந்த நிறுவனத்தின் முதன்மைத் தளம் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

மலேசியா எயர்லைன்சு
Malaysia Airlines Berhad
Penerbangan Malaysia Berhad
IATA ICAO அழைப்புக் குறியீடு
MH MAS MALAYSIAN
நிறுவல்1 மே 1947; 77 ஆண்டுகள் முன்னர் (1947-05-01)
(மலாயன் ஏர்வேசு)
செயற்பாடு துவக்கம்
  • 1 அக்டோபர் 1972; 52 ஆண்டுகள் முன்னர் (1972-10-01)
    (மலேசிய ஏர்லைன்சு)
  • 1 செப்டம்பர் 2015; 9 ஆண்டுகள் முன்னர் (2015-09-01)
    (மலேசிய ஏர்லைன்சு பெர்காட்)
மையங்கள்கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
இரண்டாம் நிலை மையங்கள்கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம்
கவன செலுத்தல் மாநகரங்கள்கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
கிளை நிறுவனங்கள்
வானூர்தி எண்ணிக்கை76[1]
சேரிடங்கள்77[2]
தாய் நிறுவனம்கசானா நேசனல்[3][4]
தலைமையிடம்கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், சிப்பாங், சிலாங்கூர், மலேசியா
பயனடை
  • Increase RM1.099 பில்லியன் (2023)
[5]
பணியாளர்கள்12,000[6]
வலைத்தளம்www.malaysiaairlines.com

மேலும் கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம்; பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்; கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகிய வானூர்தி நிலையங்களையும் இந்த நிறுவனம் தளங்களாகப் பயன்படுத்துகின்றது.

இந்த நிறுவனம் இசுகைரக்சு நிறுவனத்தின் ஐந்து நட்சத்திர விருது பெற்ற ஐந்து வானூர்திச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். ஏசியானா எயர்லைன்ஸ், கட்டார் எயர்வேய்ஸ், கதே பசிபிக், சிங்கப்பூர் எயர்லைன்ஸ் ஆகியவை ஏனைய நான்கு ஐந்து வானூர்திச் சேவை நிறுவனங்கள் ஆகும்.

பொது

தொகு

மலேசியா எயர்லைன்ஸ் நிறுவனம், மலேசியா ஏவியேசன் குழுமத்தின் (Malaysia Aviation Group) ஒரு பகுதியாகும், இந்த நிறுவனம் இரண்டு துணை விமான நிறுவனங்களைக் கொண்டுள்ளது: பயர்பிளை வானூர்திச் சேவை (Firefly); மாஸ் விங்ஸ் (MASwings). மேலும் இந்த நிறுவனம் மாஸ் கார்கோ (MASkargo) எனும் ஒரு சரக்கு விமானப் பிரிவையும் கொண்டுள்ளது:

வரலாறு

தொகு
1947-ஆண்டு வேர்ன்சு வானூர்தி
1963-ஆம் ஆண்டில் மலாயா வானூர்தி
1947–1963-ஆம் ஆண்டுகளில் மலேசிய வானூர்தி நிறுவனத்தின் வானூர்திகள்

மலேசியா எயர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடக்கக்காலப் பெயர் மலாயன் ஏர்வேசு லிமிடெட் (Malayan Airways Limited). இது 1930-களில் சிங்கப்பூரில் நிறுவப்பட்டது. அதன் முதல் வணிக விமானச் சேவை 1947-இல் தொடங்கப்பட்டது. 1963-இல் மலேசியா எனும் கூட்டமைப்பு உருவான பிறகு மலேசியன் ஏர்வேசு (Malaysian Airways) என மறுபெயரிடப்பட்டது. 1966-ஆம் ஆண்டில், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் பிரிந்த பிறகு, மலேசியா எயர்லைன்ஸ் நிறுவனம் மலேசியா-சிங்கப்பூர் ஏர்லைன்சு (Malaysia–Singapore Airlines) என மறுபெயரிடப்பட்டது.

1972-இல் அதன் சொத்துக்கள் பிரிக்கப்பட்டன. இரண்டு தனித்தனி தேசிய விமான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று மலேசியன் ஏர்லைன் சிஸ்டம் (Malaysian Airline System). மற்றொன்று சிங்கப்பூர் ஏர்லைன்சு (Singapore Airlines).

2013-இல் புதியத் திட்டம்

தொகு
 
2017-ஆம் ஆண்டில் மலேசிய ஏர்லயன்ஸ் நிறுவனத்தின் Airbus A350-900 ரக வானூர்தி

2000-கள் மற்றும் 2010-களின் முற்பகுதியில் வானூர்திப் போக்குவரத்து துறையில் இருந்து மலேசியா எயர்லைன்ஸ் வானூர்தி நிறுவனத்திற்கு ஏராளமான விருதுகள் கிடைத்தன. இருந்தபோதிலும்,[7] 2000-களின் முற்பகுதியில் இருந்து தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் மலிவு விலைச் சேவைகளின் (Low-cost carrier) எழுச்சியைச் சமாளிக்க மலேசியா எயர்லைன்ஸ் நிறுவனம் செலவுகளைக் குறைக்க வேன்டிப் போராடியது.

2011-இல் இந்த விமான நிறுவனம் பெரும் நட்டம் அடைந்தது. அதன் பிறகு 2013-இல், ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியது. லாஸ் ஏஞ்சல்ஸ், பியூனஸ் அயர்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற லாபம் ஈட்டாத நீண்ட தூர இடங்களுக்கான சேவைகளைக் குறைத்தது. அதே ஆண்டில், மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உள் மறுசீரமைப்பைத் தொடங்கியது. 2014 முதல் 2015 வரை, மலேசியா எயர்லைன்ஸ் வானூர்தி நிறுவனம் திவாலானதாக அறிவித்தது. அதன் பின்னர் மலேசிய அரசாங்கத்தால் மீண்டும் தேசியமயமாக்கப்பட்டது.[8][9]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Malaysia Airlines on ch-aviation.com". www.planespotters.net/. பார்க்கப்பட்ட நாள் 26 December 2023.
  2. "Malaysia Airlines Fleet Details and History". ch-aviation.com. பார்க்கப்பட்ட நாள் 21 November 2023.
  3. "Malaysia Airlines: State fund proposes takeover". BBC News. 8 August 2014. https://www.bbc.com/news/business-28700926. 
  4. "Khazanah Nasional Berhad". Archived from the original on 28 April 2015. பார்க்கப்பட்ட நாள் 24 April 2015.
  5. (2024-03-21). "Malaysia Aviation Group Achieves Positive Operating Profit for Second Consecutive Year, up 64% at RM889mil". செய்திக் குறிப்பு.
  6. "Join Our Sky-High Team", Malaysia Airlines, பார்க்கப்பட்ட நாள் 2024-01-31
  7. Jansen, Bart (17 July 2014). "Hard for Malaysia Airlines to survive after two disasters". USA Today. https://www.usatoday.com/story/travel/news/2014/07/17/malaysia-airlines-corporate-background/12781631/. 
  8. "Malaysia Airlines to be nationalized in new form of 'investment'". Nikkei Asia. பார்க்கப்பட்ட நாள் 22 February 2023.
  9. "Malaysia Airlines lays off 6,000 employees". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 February 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியா_எயர்லைன்சு&oldid=3992779" இலிருந்து மீள்விக்கப்பட்டது