சிப்பாங் மாவட்டம்
சிப்பாங் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Sepang; ஆங்கிலம்: Sepang District; சீனம்: 雪邦縣) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பெட்டாலிங் மாவட்டம்; மேற்கில் கோலா லங்காட் மாவட்டம்; வட மேற்கில் கிள்ளான் மாவட்டம்; கிழக்கில் உலு லங்காட் மாவட்டம்; ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன. இதன் தலைநகரம் சாலாக் திங்கி (Salak Tinggi).
சிப்பாங் மாவட்டம் | |
---|---|
Daerah Sepang | |
சிப்பாங் மாவட்டம் அமைவிடம் சிலாங்கூர் | |
ஆள்கூறுகள்: 2°45′N 101°40′E / 2.750°N 101.667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | சிப்பாங் மாவட்டம் |
தொகுதி | சாலாக் திங்கி |
உள்ளூராட்சி | சிப்பாங் நகராட்சி மன்றம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | ரோசுலினா ஜானி |
பரப்பளவு | |
• மொத்தம் | 599.66 km2 (231.53 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 3,24,935 |
• அடர்த்தி | 540/km2 (1,400/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 43xxx, 47xxx, 62xxx, 63xxx, 64xxx |
தொலைபேசி எண்கள் | +6-03-8 |
போக்குவரத்து பதிவெண்கள் | B |
மலேசியாவில் பிரபலமான ’சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் சைபர்ஜெயா (Cyberjaya) நகரம், இந்தச் சிப்பாங் மாவட்டத்தில் தான் அமைந்து உள்ளது.
வரலாறு
தொகுஉலு லங்காட் மாவட்டம் மற்றும் கோலா லங்காட் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் இருந்து, 1975 சனவரி மாதம் முதலாம் தேதி, சிப்பாங் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2005-ஆம் ஆண்டில் இந்த மாவட்டம் சிப்பாங் நகராட்சி தகுதியைப் பெற்றது.[2]
மலேசிய நாடாளுமன்றம்
தொகுமலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) சிப்பாங் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.
நாடாளுமன்றம் | தொகுதி | உறுப்பினர் | கூட்டணி | கட்சி | ||
---|---|---|---|---|---|---|
P113 | சிப்பாங் | முகமட் அனிபா மைடின் | பாக்காத்தான் அரப்பான் | அமாணா |
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்
தொகுசிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் சிப்பாங் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசிய தேர்தல் ஆணையம் (Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P113 | N54 | தஞ்சோங் சிப்பாட் Tanjong Sepat |
போர்கான் அமான் சா Borhan Aman Shah |
பாக்காத்தான் ராக்யாட் |
P113 | N55 | டெங்கில் Dengkil |
அடிப் சான் அப்துல்லா Adhif Syan Abdullah |
பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்) |
P113 | N56 | சுங்கை பீலேக் Sungai Pelek |
ரோனி லியூ தியான் கியூ Ronnie Liu Tian Khiew |
பாக்காத்தான் அராப்பான் (ஜ.செ.க) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Portal Rasmi PDT Sepang Data Keluasan". www2.selangor.gov.my.
- ↑ "Latar Belakang – MAJLIS PERBANDARAN SEPANG". பார்க்கப்பட்ட நாள் 3 December 2021.
வெளி இணைப்புகள்
தொகு- Sepang F1 Circuit அதிகாரப்பூர்வ இணையதளம்
- Sepang Town Council website பரணிடப்பட்டது 2006-09-11 at the வந்தவழி இயந்திரம்
- கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
- KLIA Express Rail Link
- சிப்பாங் மாவட்டம் திறந்த ஆவணத் திட்டத்தில்
- Time To Attack: Sepang! - Malaysia's First Time Attack Series Official Website பரணிடப்பட்டது 2012-08-27 at the வந்தவழி இயந்திரம்