போக்குவரத்துப் பதிவெண்களை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை வழங்குகிறது.
மலேசியாவில் உள்ள அனைத்துத் தனியார்; வணிக வாகனங்களின் முன்புறத்திலும், பின்புறத்திலும் மலேசியா போக்குவரத்துப் பதிவெண்கள் (நம்பர் பிளேட்டுகள்) காட்டப்பட வேண்டும் என்பது அரசு சட்டமாகும். போக்குவரத்துப் பதிவெண்களை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை (மலாய்: Jabatan Pengangkutan Jalan Malaysia) வழங்குகிறது.
மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறையை, மலேசியாவில் சுருக்கமாக சே.பி.சே. (JPJ) என்று அழைக்கிறார்கள். மிக அண்மையில் வழங்கப்பட்ட போக்குவரத்துப் பதிவெண்களை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை இணையத்தளம் மூலம் சரிபார்க்கலாம். [1] அதன் இணைய முகவரி: https://www.jpj.gov.my/en/web/main-site/semakan-nombor-pendaftaran-terkini
தற்போது பயன்படுத்தப்படும் வடிவங்களின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு;
பதிவெண்களின் வகை
தளவமைப்பு
தனியார் மற்றும் வணிக வாகனங்கள்
ABC 4567 அல்லது WD 4567 C அல்லது QAA 4567 C அல்லது SAB 4567 C அல்லது KV 4567 B
வாடகை மோட்டார் (Taxi)
HAB 4567
இராணுவம் (Military)
ZA 4567
தற்காலிகம் (Temporary)
A 2341 A (W/TP 2341 for Kuala Lumpur)
தூதரகங்கள் (Diplomatic Corps)
12-34-DC
அரச குடும்பங்கள்; அரசாங்கம் (Royals and government)
1900-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது போக்குவரத்துப் பதிவெண்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பின்னர் 1932-ஆம் ஆண்டு மாற்றம் கண்டது. ஆங்கில எழுத்துருவான தடித்த ஏரியல் (Arial Bold) பயன்படுத்தப் படுகிறது.[2] மலாயா சுதந்திரம் அடைந்த பிற்கு பல முறை பற்பல மாற்றங்களை அடைந்து உள்ளது.
கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லங்காவி போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள்; பொது வாடகைக் கார்கள் எனும் டாக்சிகள்; தூதரகங்களின் வாகனங்கள்; ஆகியவை மலேசியச் சாலைப் போக்குவரத்து பதிவெண்கள் நடைமுறையில் இருந்து மாறுபட்டு உள்ளன.
அவற்றைத் தவிர்த்து மலேசியாவில் உள்ள மற்ற அனைத்து வாகனங்களும் Sxx ## ## எனும் வழிமுறையைப் பயன்படுத்துகின்றன.
மலேசியாவில் உள்ள அனைத்து இராணுவ வாகனங்களுக்கும் Z எனும் முன்னொட்டு பயன்படுத்தப் படுகிறது.[3][4][5]
ZB #### கருப்பு பட்டையில் வெள்ளை எழுத்துக்களைக் கொண்ட வடிவம். முன்னணிச் சுழியங்கள் எதுவும் இல்லை. அதாவது சுழியங்களைக் கொண்டு பதிவெண்கள் தொடங்குவது இல்லை. I மற்றும் O எழுத்துக்கள் பயன்படுத்தப்படுவது இல்லை.
Z - அனைத்து மலேசிய ஆயுதப்படை வாகனங்களுக்கான நிலையான முன்னொட்டு.
B - கிளை முன்னொட்டு. (எ.கா.: D = மலேசிய இராணுவம்; U = அரச மலேசிய விமானப்படை
# - எண் வரிசை. (எ.கா.: 1, 2, 3 ... 9998, 9999)
மலேசிய இராணுவ வாகனப் பதிவெண்கள்
முன்னொட்டு
பிரிவு
Z, ZA,ZD
மலேசிய இராணுவம்; ZL, ZU, ZZ தொடர்களை அறிமுகப் படுத்துவதற்கு முன்பு அனைத்து இராணுவ வாகனங்களும் ஒரே வடிவத்தைப் பகிர்ந்து கொண்டன.
இந்த அதிகாரப்பூர்வமான எண் தட்டுகள் பெரும்பாலானவை, மஞ்சள் பின்னணியைக் கொண்டவை. மேலும் வாகன உரிமையாளர்களின் அதிகாரப்பூர்வமான அரசப் பெயர் அல்லது சின்னங்களை அந்தத் தட்டுகள் தாங்கி நிற்கின்றன.[6]
↑"Hicom Handalan (ZB 5277)". military-vehicle-photos.com. 30 October 2012. Archived from the original on 2 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)