கூச்சிங்
கூச்சிங் அல்லது கூச்சிங் நகரம் (மலாய்: Bandar Raya Kuching; ஆங்கிலம்: City of Kuching; சீனம்: 古晉; ஜாவி: کوچيڠ) என்பது மலேசியா; சரவாக்; மாநிலத்தின் தலைநகரம்.[2][3]
கூச்சிங் நகரம் | |
---|---|
Kuching Town | |
சரவாக் தலைநகரம் | |
அடைபெயர்(கள்): ஒற்றுமையின் நகரம் | |
ஆள்கூறுகள்: 01°33′40″N 110°20′30″E / 1.56111°N 110.34167°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
கூச்சிங் | கூச்சிங் பிரிவு |
மாவட்டம் | கூச்சிங் மாவட்டம் |
நிறுவப்பட்டது புரூணை சுல்தானகம் | 1827 |
விரிவாக்கம் ஜேம்சு புரூக் | 18 ஆகஸ்டு 1842 |
நகராட்சி நிலை | 1 சனவரி 1953 |
மாநகர நிலை | 1 ஆகஸ்டு 1988 |
அரசு | |
• வடக்கு கூச்சிங் மேயர் | சுனைடி ரெடுவான் |
• தெற்கு கூச்சிங் மேயர் | வீ ஆங் செங் |
பரப்பளவு | |
• கூச்சிங் மாநகரம் | 450 km2 (170 sq mi) |
• மாநகரம் | 2,770 km2 (1,070 sq mi) |
• வடக்கு கூச்சிங் | 378.20 km2 (146.02 sq mi) |
• தெற்கு கூச்சிங் | 71.82 km2 (27.73 sq mi) |
ஏற்றம் | 8 m (26 ft) |
உயர் புள்ளி | 810.2 m (2,658.1 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2019)[1] | |
• கூச்சிங் மாநகரம் | 5,70,407 |
• அடர்த்தி | 754.33/km2 (1,953.7/sq mi) |
• பெருநகர் | 6,84,112 |
• பெருநகர் அடர்த்தி | 336.8/km2 (872/sq mi) |
கூச்சிங் பெருநகரப் பகுதி (Greater Kuching) 358,980 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது (2010). | |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாடு இல்லை) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 93xxx |
மலேசியத் தொலைபேசி | 082 (landline only) |
மலேசிய வாகனப் பதிவெண்கள் | QA; QK HQ |
இணையதளம் | Kuching North: dbku Kuching South: mbks |
இந்த நகரம் போர்னியோ தீவில், சரவாக் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில், சரவாக் ஆற்றுக் கரைகளின் இரு மருங்கிலும் அமைந்து உள்ளது.[4]
இந்த நகரத்தின் பரப்பளவு 431 சதுர கிலோமீட்டர்கள் (166 sq mi) ஆகும்.
- கூச்சிங் வடக்கு நிர்வாகப் பகுதியின் மக்கள் தொகை 165,642;
- கூச்சிங் தெற்கு நிர்வாகப் பகுதியின் மக்கள் தொகை 159,490;
மொத்த மக்கள் தொகை 325,132.
வரலாறு
தொகு1827-ஆம் ஆண்டில் புரூணை பேரரசின் நிர்வாகத்தின் போது, சரவாக்கின் மூன்றாவது தலைநகராக கூச்சிங் இருந்தது. 1841-ஆம் ஆண்டில், கூச்சிங்கில் ஒரு கிளர்ச்சியை அடக்குவதற்கு உதவிய ஜேம்சு புரூக்கிற்கு கூச்சிங் பகுதியின் ஒரு பகுதி நிலப்பரப்பு கொடுக்கப்பட்டது.
அதற்குப் பின்னர் கூச்சிங், சரவாக் இராச்சியத்தின் தலைநகரானது. உள்துறை போர்னியோ காடுகளில் வாழ்ந்த டயாக் மக்களில் பெரும்பாலோர் ஜேம்சு புரூக்கினால் மன்னிக்கப் பட்டார்கள். பின்னர் அவரின் விசுவாசிகளானார்கள்.
பத்து லிந்தாங் தடுப்பு முகாம்
தொகுஜேம்சு புரூக்கின் மைத்துனரான சார்லஸ் புரூக்கின் ஆட்சியின் போது கூச்சிங் நகரம் தொடர்ந்து கவனத்தையும் வளர்ச்சியையும் பெற்றது. துப்புரவு அமைப்பு, மருத்துவமனை, சிறை, கோட்டை மற்றும் சந்தை போன்ற கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.
1942 முதல் 1945 வரை, இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானியப் படைகளால் கூச்சிங் ஆக்கிரமிக்கப்பட்டது. போர்க் கைதிகள் மற்றும் பொது மக்கள் கைதிகளை அடைத்து வைக்க, கூச்சிங்கிற்கு அருகே பத்து லிந்தாங் (Batu Lintang) எனும் இடத்தில் ஓர் தடுப்பு முகாமை ஜப்பானிய அரசு அமைத்தது.
சர் சார்லஸ் வைனர் புரூக்
தொகுஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, கூச்சிங் நகரம் அப்படியே இருந்தது. பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இருப்பினும், 1946-ஆம் ஆண்டில் சரவாக்கின் கடைசி ஆளுநராக இருந்த ராஜா சர் சார்லஸ் வைனர் புரூக் (Sir Charles Vyner Brooke) என்பவர் ஒரு முடிவு எடுத்தார்.
சரவாக் மாநிலத்தை பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஒரு காலனிப் பகுதியாக (British Crown Colony) விட்டுக்கொடுக்க முடிவு செய்தார். பிரித்தானியக் காலனித்துவக் காலத்திலும் கூச்சிங் தலைநகரமாகவே இருந்தது.
விஸ்மா பாப்பா மலேசியா
தொகு1963-இல் மலேசியா உருவான பிறகு, கூச்சிங் தன் மாநிலத் தலைநகர்த் தகுதியைத் தக்க வைத்துக் கொண்டது. 1988-ஆம் ஆண்டில் கூச்சிங்கிற்கு மாநகர் தகுதி வழங்கப்பட்டது.
அதன் பின்னர், இரண்டு தனித்தனி உள்ளூர் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் இரண்டு நிர்வாகப் பகுதிகளாக கூச்சிங் நகரம் பிரிக்கப்பட்டது. சரவாக் மாநில அரசாங்கத்தின் நிர்வாக மையம் கூச்சிங் மாநகரில் உள்ள விஸ்மா பாப்பா மலேசியா (Wisma Bapa Malaysia) எனும் மையத்தில் அமைந்துள்ளது.
பொது
தொகுகூச்சிங் மாநகரம் சுற்றுலாப் பயணிகளுக்கான ஒரு முக்கிய உணவுத் தலமாகவும்; சரவாக் மற்றும் போர்னியோவிற்குச் செல்லும் பயணிகளுக்கான முக்கிய நுழைவாயிலாகவும் உள்ளது.
கூச்சிங் ஈர நிலங்கள் தேசியப் பூங்கா (Kuching Wetlands National Park) நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. (19 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மற்றும் கூச்சிங் நகரைச் சுற்றி பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன.
சுற்றுலாத் தளங்கள்
தொகுபாக்கோ தேசிய பூங்கா (Bako National Park), செமெங்கோ வனவிலங்கு மையம் (Semenggoh Wildlife Centre), மழைக்காடு உலக இசை விழா (Rainforest World Music Festival), மாநில சட்டமன்றக் கட்டிடம், அஸ்தானா (The Astana), போர்ட் மார்கெரிட்டா (Fort Margherita), கூச்சிங் அரும்காட்சியகம் (Kuching Cat Museum) மற்றும் சரவாக் மாநில அரும்காட்சியகம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.[5]
அண்மைய காலங்களில் இந்த நகரம் கிழக்கின் முக்கியத் தொழில்துறை மற்றும் வணிக மையங்களில் ஒன்றாக மாறியுள்ளது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Malaysia Population 2019". World Population Review. 4 February 2019. பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
- ↑ "City of Kuching Ordinance" (PDF). Sarawak State Attorney-General's Chambers. 1988. p. 3 (Chapter 48).
- ↑ Oxford Business Group. The Report: Sarawak 2011. Oxford Business Group. pp. 13–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-907065-47-7. பார்க்கப்பட்ட நாள் 18 July 2013.
{{cite book}}
:|author=
has generic name (help) - ↑ Trudy Ring; Robert M. Salkin; Sharon La Boda (January 1996). International Dictionary of Historic Places: Asia and Oceania. Taylor & Francis. pp. 497–498. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-884964-04-6.
- ↑ Raymond Frederick Watters; T. G. McGee (1997). Asia-Pacific: New Geographies of the Pacific Rim. Hurst & Company. pp. 311–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85065-321-9.
- ↑ Oxford Business Group (2008). The Report: Sarawak 2008. Oxford Business Group. pp. 30, 56, 69 & 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-902339-95-5.
{{cite book}}
:|author=
has generic name (help)