புரூணை சுல்தானகம்

புரூணை சுல்தானகம் அல்லது புரூணை (மலாய் மொழி: Kesultanan Brunei; ஆங்கிலம்: Sultanate of Brunei (Brunei); ஜாவி: كسلطانن بروني ) என்பது 1363-ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியா, போர்னியோ வடக்கு கடற்கரையில் புரூணை நிலப்பகுதியை மையமாகக் கொண்டிருந்த ஓர் அரசு ஆகும்.

புரூணை சுல்தானகம்
Sultanate of Brunei
Kesultanan Brunei
كسلطانن بروني

1363 / 1368–1888 அல்லது 1906
கொடி of புரூணை சுல்தானகம்
கொடி
சின்னம் (?-1888) of புரூணை சுல்தானகம்
சின்னம்
(?-1888)
புரூணை இராச்சியம் 1521.
புரூணை இராச்சியம் 1521.
நிலைமயாபாகித்து பேரரசு (1368–1408)
தனியுரிமை (1408–1888)
தலைநகரம்கோத்தா பத்து (1368–1660) சரவாக் (சரகுவா) (1578)[1]
கம்போங் ஆயர் (1660–1920) [2]
பேசப்படும் மொழிகள்புரூணை மலாய் மொழி
பழைய மலாய் மொழி
பழைய தகலாகு மொழி
கபம்பங்கான் மொழி
அரபு மொழி
மலாய-பொலினீசிய மொழிகள்
சமயம்
இசுலாம்
மக்கள்புரூணை மக்கள்தொகை
அரசாங்கம்முடியாட்சி
சுல்தான் 
• 1363/68–1402
சுல்தான் முகமட் சா
• 1425–1432
சரீப் அலி
• 1485–1524
பொல்கியா
• 1582–1598
புருணை முகமட அசன்
• 1828–1852
ஒமார் அலி சைபுதீன்
• 1885–1888[3]
அசீம் சலிலுல் அலாம் அகமதீன்
வரலாறு 
• சுல்தானகம் உருவாக்கம்

1363 / 1368
1888 அல்லது 1906
நாணயம்பண்டமாற்று, சோகி, தங்க நாணயம், புருணை காசுகள்
முந்தையது
பின்னையது
மயாபாகித்து பேரரசு
புரூணை
பிரித்தானிய வடக்கு போர்னியோ
லபுவான் முடியாட்சி
சரவாக் இராச்சியம்
டச்சு கிழக்கிந்திய கம்பெனி
எசுப்பானியக் கிழக்கிந்தியா
சரவாக் சுல்தானகம்
மணிலா
சூலு சுல்தானகம்
தற்போதைய பகுதிகள்
புரூணை
இந்தோனேசியா
மலேசியா
பிலிப்பீன்சு

15-ஆம் நூற்றாண்டில் இறையாண்மை கொண்ட ஒரு நாடாக மாறிய இந்த அரசு, மலாக்கா சுல்தானகம் போர்த்துகீசியர்களிடம் வீழ்ச்சியடைந்த பின்னர் கணிசமான அளவிற்கு விரிவடைந்தது.[4][5] பின்னர் அதன் விரிவாக்கம் போர்னியோ மற்றும் பிலிப்பீன்சு கடலோரப் பகுதிகள் முழுவதும் பரவி இருந்தது.[6]

17-ஆம்; - 18-ஆம் நூற்றாண்டுகளில் இந்த அரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது. 19-ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய பாதுகாப்பின் கீழ் வந்தது.[7]

பொது

தொகு

சமகால வரலாற்றுச் சான்றுகளின் வரையறுக்கப்பட்ட சான்றுக் கூறுகள்; தொடக்கக்கால புரூணை சுல்தானகத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதில் சவாலாக அமைகின்றன. அதற்கான சான்றுகளை வழங்குவதற்கு உள்ளூர் அல்லது பூர்வீகச் சான்றுகள் எதுவும் இல்லை.

இதன் விளைவாக, தொடக்கக்காலப் புரூணை சுல்தானகத்தின் வரலாற்றைக் கட்டமைக்க சீன நூல்களை மேற்கோள் காண வேண்டியுள்ளது. சீன நூல்களில் உள்ள போனி (Boni) எனும் இடப் பெயரைக் கொண்ட சொற்கள்; பெரும்பாலும் மேற்கு போர்னியோவைக் குறிக்கின்றன.[8] அதே வேளையில் சுமத்திராவில் உள்ள ஆச்சே பகுதியில் இருக்கும் போலி (Poli) (சீனம்: 婆利) எனும் சொல்; புரூணையைக் குறிப்பிடுவதாகவும் அறியப்படுகிறது.[9]

வரலாறு

தொகு

14-ஆம் நூற்றாண்டில், புரூணை நாடு ஜாவா தீவின் ஒரு பகுதியாக இருந்ததாகத் தெரிய வருகிறது. 1365-இல் பிரபஞ்சா (Mpu Prapanca) என்பவரால் எழுதப்பட்ட ஜாவானிய கையெழுத்துப் பிரதியான "நகரகிரேதாகமம்" (Nagarakretagama) எனும் சாவக நூல், புரூணையை மயாபாகித்து பேரரசின் ஆட்சிக்கால மாநிலமாகக் குறிப்பிடுகிறது,[10] மயாபாகித்து பேரரசிற்கு ஆண்டுதோறும் 40 கட்டி கற்பூரத்தை காணிக்கையாகப் புரூணை செலுத்த வேண்டியிருந்தது.

மயாபாகித்து பேரரசு புரூணையை ஆக்கிரமித்த பிறகு, அதன் கட்டுப்பாட்டில் இருந்த பிலிப்பீன்சு இராச்சியங்கள், புரூணைக்கு எதிராகக் கிளர்ச்சிகள் செய்தன. அதில் முதன்மையாக சூலுவின் முன்னாள் இராச்சியம் (Sultanate of Sulu) புரூணையை முற்றுகையிட்டு மிகுதியாகக் கொள்ளையடித்தது.

சூலு தீவுக்கூட்டம்

தொகு

15-ஆம் நூற்றாண்டில், மலாக்கா சுல்தானகம் போர்த்துகீசியர்களிடம் வீழ்ச்சியடைந்த பின்னர், போர்த்துகீசிய வணிகர்கள், 1530-ஆம் ஆண்டுகளில் புரூணையுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தனர்; மற்றும் புரூணையின் தலைநகர் ஒரு கல் சுவரால் சூழப்பட்டு இருந்ததாக விவரித்தனர்.[4][11]

புரூணையின் ஐந்தாவது சுல்தானான போல்கியாவின் ஆட்சியின் போது, ​​புரூணை சுல்தானகம் வடமேற்கு போர்னியோவின் (இன்றைய புரூணை, சரவாக் மற்றும் சபா) கடலோரப் பகுதிகளைக் கட்டுப்படுத்தி, செலுடாங் (Seludong) எனும் இன்றைய மணிலா மற்றும் மிண்டனாவோ தீவின் சில பகுதிகள் உட்பட சூலு தீவுக்கூட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது.[12][13][14][15][16][17][18][19]

சம்பாசு சுல்தானகம்

தொகு

16-ஆம் நூற்றாண்டில், புரூணையின் செல்வாக்கு மேற்கு கலிமந்தானில் உள்ள கபுவாஸ் ஆறு வரை பரவி இருந்தது. மேற்கு கலிமந்தானில் உள்ள சம்பாசு மலாய் சுல்தானகமும் (Sultanate of Sambas); தெற்கு பிலிப்பீன்சில் உள்ள சூலு சுல்தானகமும் புரூணையின் அரச குடும்பத்துடன் வம்சாவளி உறவுகளை வளர்த்துக் கொண்டன. மணிலாவின் முசுலீம் அரசரான ராஜா மாதாண்டா (Rajah Matanda) என்பவரும் புரூணை சுல்தானகத்துடன் குடும்ப உறவுகளைக் கொண்டிருந்தார்.

பொந்தியானா சுல்தானகம் (Pontianak), சமரிண்டா (Samarinda) மற்றும் பஞ்சர்மாசின் (Banjarmasin) மலாய் சுல்தான்கள் புரூணை சுல்தானைத் தங்களின் தலைவராகக் கருதினர்.[20][21][22]

வீழ்ச்சி

தொகு
 
1400 முதல் 1890 வரை புரூணை இராச்சியத்தின் இழப்புகள்.

புரூணை சுல்தானகத்தின் பிரபுக்களுக்கும் புரூணை ராஜாவுக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட சண்டை சச்சரவுகளின் காரணமாக அருகிலுள்ள சூலு சுல்தானகத்தின் சுல்தானின் அதிகாரம் உயர்ந்தது. இறுதியில் பஜாவு மக்கள் மீதான அதிகாரத்தைப் புரூணை சுல்தானகம் இழந்தது.

17-ஆம் நூற்றாண்டின் இறுதியில், புரூணை அரச பரம்பரைக்குள் எற்பட்ட சண்டைகள்; ஐரோப்பிய சக்திகளின் காலனித்துவ விரிவாக்கம்; மற்றும் கடற்கொள்ளையர்களின் வளர்ச்சி ஆகியவற்றால் ஏற்பட்ட வீழ்ச்சியின் காலகட்டத்திற்குள் நுழைந்த புரூணை சுல்தானகம் தொய்வுநிலையை அடைந்தது.[23]

மேற்கத்திய சக்திகளின் வருகை

தொகு

பிலிப்பைன்சில் இசுபானியர்கள்; தெற்கு போர்னியோவில் டச்சுக்காரர்கள்; லபுவான், சரவாக், வடக்கு போர்னியோவில் பிரித்தானியர்கள் போன்ற மேற்கத்திய சக்திகளின் வருகையால் புரூணை தனது இராச்சியத்தின் பெரும்பகுதியை இழந்தது. 1725-ஆம் ஆண்டில், புரூணை சுல்தானகம் அதன் பல வணிக கடல்வழிகளையும் சுலு சுல்தானகத்திடம் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.[6][24]

1888-இல், புரூணை சுல்தான் அசீம் சலிலுல் அலாம் அகமதீன் (Sultan Hashim Jalilul Alam Aqamaddin), புரூணை சுல்தானகத்தின் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு பிரித்தானியர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.[25] அதே ஆண்டில், பிரித்தானியர்கள் புரூணை சுல்தானுடன் ஒரு "பாதுகாப்பு ஒப்பந்தத்தில்" (Treaty of Protection) கையெழுத்திட்டனர்.

அதன் பின்னர் புரூணை சுல்தான்கம் பிரித்தானிய பேரரசின் ஒரு பாதுகாப்பு இராச்சியமாக மாறியது.[6] இந்த நிலை 1984-ஆம் ஆண்டு வரை நீடித்தது. அந்த ஆண்டில் புரூணை இராச்சியம் பிரித்தானியப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது.[26][27]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Museum, Sarawak (1999). The Sarawak Museum Journal (in ஆங்கிலம்). Sarawak Museum. p. 218.
  2. Hussainmiya 2010, ப. 67.
  3. Yunos 2008.
  4. 4.0 4.1 Holt, Lambton & Lewis 1977, ப. 129.
  5. Andaya & Andaya 2015, ப. 159.
  6. 6.0 6.1 6.2 CIA Factbook 2017.
  7. Jamil Al-Sufri 2000.
  8. "History of The Pedir Kingdom in Aceh". INDEPHEDIA.com. பார்க்கப்பட்ட நாள் 2024-07-03.
  9. Kurz, Johannes L. (1 January 2013). "Pre-modern Chinese Sources in the National History of Brunei: The Case of Poli". (published in Bijdragen tot de taal-, land- en volkenkunde / Journal of the Humanities and Social Sciences of Southeast Asia).
  10. Suyatno 2008.
  11. Lach 1994, ப. 580.
  12. Saunders 2013, ப. 60.
  13. Herbert & Milner 1989, ப. 99.
  14. Lea & Milward 2001, ப. 16.
  15. Hicks 2007, ப. 34.
  16. Church 2012, ப. 16.
  17. Eur 2002, ப. 203.
  18. Abdul Majid 2007, ப. 2.
  19. Welman 2013, ப. 8.
  20. Pusat Sejarah Brunei பரணிடப்பட்டது 2015-04-15 at the வந்தவழி இயந்திரம். Retrieved February 07, 2009.
  21. Pigafetta, Antonio (1969) [1524]. First voyage round the world (in ஆங்கிலம்). Translated by J.A. Robertson. Manila: Filipiniana Book Guild.
  22. Scott, William H. (1994). Barangay: Sixteenth-Century Philippine Culture and Society (in English). Katipunan Ave, Quezon City: Ateneo de Manila University Press. pp. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 971-550-135-4.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  23. Andaya, Barbara Watson (1982). A History of Malaysia (in ஆங்கிலம்). New York: St. Martin's Press. pp. 76–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-38120-2.
  24. de Vienne, Marie-Sybille (2015). Brunei: From the Age of Commerce to the 21st Century. National University of Singapore Press. pp. 39–74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789971698188.
  25. World Atlas 2017.
  26. Abdul Majid 2007, ப. 4.
  27. Sidhu 2009, ப. 92.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூணை_சுல்தானகம்&oldid=4071826" இலிருந்து மீள்விக்கப்பட்டது