சரவாக் ஆறு
சரவாக் ஆறு (மலாய்: Sungai Sarawak; ஆங்கிலம்: Sarawak River); போர்னியோ, கிழக்கு மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும்.
சரவாக் ஆறு Rajang River சரவாக் | |
---|---|
சரவாக் ஆறு கூச்சிங் நகர மையத்தின் வழியாகப் பாய்கிறது. | |
அமைவு | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | காப்புவாஸ் மலைத்தொடர் |
⁃ அமைவு | மலேசியா; |
முகத்துவாரம் | தெபாஸ் துறைமுகம் (Muara Tebas) |
⁃ அமைவு | தென்சீனக் கடல், மலேசியா |
⁃ ஆள்கூறுகள் | 1°38′17″N 110°29′59″E / 1.6380°N 110.4996°E |
⁃ உயர ஏற்றம் | 0 m (0 அடி) |
நீளம் | 120 km (75 mi) |
வடிநில அளவு | 2,459 km2 (949 sq mi) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | சரவாக் ஆறு கிரி (Sg. Sarawak Kiri) |
⁃ வலது | சரவாக் ஆறு கானான் (Sg. Sarawak Kanan) |
தென்மேற்கு சரவாக்கில் வசிப்பவர்களுக்கு நீர் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது. மேல் கப்புவாஸ் மலைத்தொடரில் (Upper Kapuas Range) உற்பத்தியாகி தென் சீனக்கடலில் கலக்கிறது.
சரவாக்கின் வரலாற்றில் சரவாக் ஆறு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநில வரலாற்றில் மிகவும் பிரபலமான நிகழ்வு: 1841-ஆம் ஆண்டு ஜேம்ஸ் புரூக்கின் வருகை. அந்த நிகழ்வு இந்தச் சரவாக் ஆற்றின் கரையில்தான் நிகழ்ந்தது.[1]
பொது
தொகுபுரூக் வம்சாவழி ஆட்சிக்கு முந்தைய நூற்றுக் கணக்கான ஆண்டுகளில், சரவாக் மக்களின் பல்வேறு வாழ்க்கைச் செயல்பாடுகளுக்கு, சரவாக் ஆறு தாயகமாக விளங்கி உள்ளது.[1]
ஆஸ்தானா சரவாக் என்று அழைக்கப்படும் சரவாக் அரண்மனை; இந்தச் சரவாக் ஆற்றின் வடக்குத் திசையின் கரையோரத்தில் உள்ளது. இந்த அரண்மனை, சரவாக் மாநிலத்தின் ஆளுநரான யாங் டி பெர்துவா சரவாக் (Yang di-Pertua Negeri Sarawak) அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.
மார்கெரிட்டா கோட்டை
தொகுபுதிய சரவாக் மாநிலச் சட்டமன்ற கட்டடம் (New Sarawak State Legislative Assembly Building), சரவாக் ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. தவிர, 1879-ஆம் ஆண்டு சார்லஸ் புரூக் கட்டிய மார்கெரிட்டா கோட்டை (Fort Margherita) இந்த ஆற்றின் கரையோரத்தில்தான் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Tan, Noel (1 April 2019). "The Sarawak River has played a central role in the history of Sarawak. One of the most well-known events in the history of the state occurred on the banks of the Sarawak River – the arrival of James Brooke, which opened the door for the Brooke family's rule over Sarawak beginning 1841". SEAArch - Southeast Asian Archaeology. பார்க்கப்பட்ட நாள் 4 August 2022.
- MacKinnon K, Hatta G, Halim H, Mangalik A.1998. The ecology of Kalimantan. Oxford University Press, Australia.