சரவாக் என்பது (மலாய்: Sarawak ; ஆங்கிலம்: Sarawak; சீனம்: 三砂拉越); கிழக்கு மலேசியாவில் அமைந்து உள்ள ஒரு மாநிலம். மலேசியாவின் 13 மாநிலங்களில் மிகப் பெரிய மாநிலமாகும். ஏறக்குறைய தீபகற்ப மலேசியாவின் பரப்பளவைக் கொண்டது. இந்த மாநிலத்தின் தலைநகரம் கூச்சிங்.

Sarawak
மாநிலம்
Flag of Sarawak
கொடி
Coat of arms of Sarawak
சின்னம்
அடைபெயர்(கள்): பூமி கென்யாலாங்
Bumi Kenyalang[1]
Land of the Hornbills
குறிக்கோளுரை: ஐக்கியம், முயற்சி, பணிவு
Bersatu, Berusaha, Berbakti
United, Striving, Serving
Unitum, Pertinacem, Servientes (லத்தீன்)
பண்: தாய் மண்ணே
Ibu Pertiwiku[2]
மலேசியாவில் சரவாக்
மலேசியாவில் சரவாக்
ஆள்கூறுகள்: 2°48′N 113°53′E / 2.800°N 113.883°E / 2.800; 113.883
நாடுமலேசியா
சரவாக் ராஜ்1841
மலேசியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு1941 - 1945
பிரித்தானியர் ஆதிக்கம்1 ஜுலை 1946
சுய ஆட்சி22 ஜுலை 1963[3][4]
மலேசியாவுடன் இணைவு[5]16 செப்டம்பர் 1963[6]
தலைநகரம்கூச்சிங்
அரசு
 • யாங் டி பெர்துவாஅப்துல் தாயிப் முகமட்
 • முதலமைச்சர்அபாங் அப்துல் ரகுமான் ஜொகாரி அபாங் ஓப்பேங்
பரப்பளவு[7]
 • மொத்தம்124,450 km2 (48,050 sq mi)
உயர் புள்ளி (மூருட் மலை)2,424 m (7,953 ft)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்2,907,500
 • அடர்த்தி22/km2 (60/sq mi)
இனங்கள்சரவாக்கியர்
நேர வலயம்மலேசிய நேரம்[8] (ஒசநே+8)
அஞ்சல் குறியீடு93xxx[9] to 98xxx[10]
தொலைபேசி எண்கள்082 - 086[11]
போக்குவரத்துப் பதிவெண்கள்[12]K (MY-13, 50–53)

போர்னியோ தீவில் உள்ள இரு மலேசிய மாநிலங்களில் ஒன்றாகும். சபா இன்னொரு மாநிலம் ஆகும். பூமி கென்யாலாங் (Bumi Kenyalang) என அழைக்கப்படும் சரவாக், போர்னியோ தீவில் வட மேற்கே அமைந்துள்ளது. இரண்டாவது பெரிய மாநிலமான சபா தீவின் வடகிழக்கே அமைந்து உள்ளது.

இதன் நிர்வாகத் தலைநகரம் கூச்சிங். 2006 கணக்கெடுப்பின் படி அதன் மக்கள் தொகை 579,900 ஆகும். சரவாக் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,357,500. இங்குள்ள பெரும்பான்மையானோர் முஸ்லிம் அல்லாதோர் ஆவர். இங்கு மலாய் மக்கள் அல்லாத 30 பழங்குடி இனக் குழுக்கள் வாழ்கின்றனர்.

வரலாறுதொகு

 
சர் ஜேம்ஸ் புரூக், சரவாக்கின் ராஜா
 
போர்னியோ தீவில் சரவாக்கின் அமைவு

16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்னியோ தீவின் கிழக்குக் கரையில் போர்த்துக்கீசியர் வந்திறங்கினர். ஆனாலும், அவர்களால் அங்கு குடியேற முயலவில்லை. 17ம் நூற்றாண்டில் சுல்தான் தெங்கா என்பவரால் ஆளப்பட்டாலும், இன்றைய சரவாக் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புருணை சுல்தானகத்தினால் ஆளப்பட்டு வந்தது.

1841 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் புரூக் இங்கு வந்தார். இவர் வந்த காலத்தில் அங்கு டயாக் பழங்குடியினர் சுல்தானுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களின் கிளர்ச்சியை அடக்க சுல்தான் புரூக்கின் உதவியை நாடினார். புரூக் சூல்தானுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.

ஜேம்ஸ் புரூக்தொகு

அதன்படி சரவாக் ஜேம்ஸ் புரூக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. 1841, செப்டம்பர் 24 இல் சுல்தான், ஜேம்ஸ் புரூக்கை சரவாக்கின் ஆளுநராக ஆக்கினார். ஜேம்ஸ் புரூக் தன்னை "சரவாக்கின் ராஜா" என அறிவித்துக் கொண்டார். அதன் பின்னர் அங்கு வெள்ளை ராஜா வம்சத்தை ஏற்படுத்தினார்.

1842, ஆகஸ்ட் 18 ஆம் நாள், ஜேம்ஸ் புரூக் சரவாக்கின் ராஜாவாக புருணை சுல்தானினால் அறிவிக்கப்பட்டார். 1868 இல் இறக்கும் வரையில் சரவாக்கை ஆட்சி செய்தார். அதன் பின்னர் அவருடைய மருமகன் சார்ல்ஸ் புரூக் 1917 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார். அவர் இறந்த பின்னர் அவரது மகன் சார்ல்ஸ் வைனர் புரூக் ஆட்சி செய்தார்[13].

நூறு ஆண்டுகால ஆட்சிதொகு

புரூக் வம்சாவளியினர் சரவாக்கை கிட்டத்தட்ட நூறு ஆண்டுகாலம் ஆட்சி செய்தனர். இவர்கள் வெள்ளை ராஜாக்கள் எனப் புகழ் பெற்றிருந்தனர். எனினும் பிரித்தானியாவின் ஏனைய கூடியேற்ற நாடுகளைப் போல் அல்லாமல் சரவாக் ராஜாக்கள் பழங்குடிகளின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தனர்.

சீன வர்த்தகர்களின் வருகையை ஊக்குவித்தாலும், அவர்களை பழங்குடியினர் வாழும் இடங்களில் குடியேற அனுமதிக்கவில்லை. டயாக் மக்களின் கலாச்சாரத்தில் சீனர்கள் கலப்பதை வெள்ளை இராசாக்கள் விரும்பவில்லை. புரூக் வம்சாவளியினர் சரவாக் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்தார்கள். இது போர்னியோவின் முதலாவது அருங்காட்சியகம் ஆகும்.

இரண்டாம் உலகப் போர்தொகு

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் சரவாக்கை முற்றுகையிட்டது. 1941 டிசம்பர் 16 இல் மிரி நகரையும், டிசம்பர் 24 இல் கூச்சிங் நகரையும் கைப்பற்றினர். போர்னியோ தீவு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

1945 இல் ஆஸ்திரேலியப் படைகள் ஜப்பானியரிடம் இருந்து போர்னியோவைக் கைப்பற்றினர். ஜூலை 1, 1946 இல் ராஜா சரவாக்கின் அதிகாரத்தை பிரித்தானியாவிடம் ஒப்படைத்தார். பதிலாக ராஜா குடும்பத்துக்கு மிகப் பெறுமதியான ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

அந்தோனி புரூக்தொகு

ஆனாலும், ராஜாவின் மருமகன் அந்தோனி புரூக் சரவாக்கின் தீவிரவாதிகளுடன் இணைந்து ஆட்சிக்கு உரிமை கோரி வந்தார். உலகப் போரின் முடிவில் சரவாக்கில் இருந்து தப்பியோடினார். பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் சரவாக் மலேசியாவுடன் இணைக்கப்பட்ட போது இவர் நாட்டுக்குத் திரும்பிவர அனுமதிக்கப்பட்டார். மலாய் மக்கள் சரவாக்கைப் பிரித்தானியரிடம் ஒப்படைத்ததில் பலத்த எதிர்ப்பைக் காட்டினர். 1946 இல் சரவாக்கின் முதலாவது பிரித்தானிய ஆளுநர் சர் டுங்கன் ஜார்ஜ் ஸ்டீபர்ட் படுகொலை செய்யப்பட்டார்.

சரவாக் அதிகாரபூர்வமாக 1963, ஜூலை 22 இல் விடுதலை அடைந்து[14] அதே ஆண்டு செப்டம்பர் 16 இல் மலேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

 1. "Profil Negeri Sarawak (Sarawak State profile)". Jabatan Penerangan Malaysia (Malaysian Information Department). 21 April 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Sarawak State Anthem". Sarawak Government. 7 September 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
 3. Vernon L. Porritt (1997). British Colonial Rule in Sarawak, 1946–1963. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-983-56-0009-8. https://books.google.com/books?id=4pBwAAAAMAAJ. பார்த்த நாள்: 7 May 2016. 
 4. Philip Mathews (28 February 2014). Chronicle of Malaysia: Fifty Years of Headline News, 1963–2013. Editions Didier Millet. பக். 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-967-10617-4-9. https://books.google.com/books?id=md9UAgAAQBAJ&pg=PA15. 
 5. "Malaysia Act 1963 (Chapter 35)" (PDF). The National Archives. United Kingdom legislation. 14 November 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 12 August 2011 அன்று பார்க்கப்பட்டது.
 6. Governments of United Kingdom of Great Britain; Northern Ireland, Federation of Malaya, North Borneo, Sarawak; Singapore (1963).   Agreement relating to Malaysia between United Kingdom of Great Britain and Northern Ireland, Federation of Malaya, North Borneo, Sarawak and Singapore. Wikisource. p. 1. 
 7. "Sarawak @ a Glance". Department of Statistics, Malaysia. 13 February 2020 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Facts of Sarawak". The Sarawak Government. 23 July 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Postal codes in Sarawak". cybo.com. 19 மே 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Postal codes in Miri". cybo.com. 4 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Area codes in Sarawak". cybo.com. 21 செப்டம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
 12. Soon, Teh Wei (23 March 2015). "Some Little Known Facts On Malaysian Vehicle Registration Plates". Malaysian Digest. Archived from the original on 8 ஜூலை 2015. https://web.archive.org/web/20150708091603/http://malaysiandigest.com/features/546797-some-little-known-facts-on-malaysian-vehicle-registration-plates.html. 
 13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2005-11-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-09-23 அன்று பார்க்கப்பட்டது.
 14. Bernama (2008-07-22). "Reflect On Past Leaders' Struggles, Says Taib". 2008-07-24 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சரவாக்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவாக்&oldid=3553115" இருந்து மீள்விக்கப்பட்டது