சரிக்கே பிரிவு
சரிக்கே பிரிவு (மலாய் மொழி: Bahagian Sarikei; ஆங்கிலம்: Sarikei Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். சரிக்கேயின் தொடக்க கால வரலாறு 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து தொடங்குகிறது. பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன.
சரிக்கே பிரிவு | |
---|---|
Sarikei Division | |
சரவாக் | |
கொடி | |
சரவாக் மாநிலத்தில் சரிக்கே பிரிவு | |
ஆள்கூறுகள்: 02°07′32″N 111°31′19″E / 2.12556°N 111.52194°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | சரிக்கே பிரிவு |
நிர்வாக மையம் | கூச்சிங் |
உள்ளூர் நகராட்சி | 1. சரிக்கே நகராண்மைக் கழகம் Majlis Daerah Sarikei (MDS) 2. மெராடோங் ஜுலாவ் நகராண்மைக் கழகம் Majlis Daerah Meradong Julau (MDMJ) |
அரசு | |
• ஆளுநர் (Resident) | பெலிசியா தான் யா உவா (Felicia Tan Ya Hua) |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,332.4 km2 (1,672.7 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,16,290 |
• அடர்த்தி | 27/km2 (70/sq mi) |
போக்குவரத்துப் பதிவெண் | QR |
இணையத்தளம் | Sarikei Administrative Division |
1845-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி, இந்த சரிக்கே பகுதியைத்தான், ராஜா ஜேம்சு புரூக் முதன்முதலில் பார்வையிட்டார். ஜேம்சு புரூக்கின் நிர்வாகத்திற்கு உள்ளூர் மக்களின் முதல் எதிர்ப்பு இங்குதான் தொடங்கியது.
பொது
தொகுசரிக்கே பிரிவு மாவட்டங்கள்
தொகுசரிக்கே பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
- சரிக்கே மாவட்டம் (Sarikei District)
- மெராடோங் மாவட்டம் (Meradong District)
- சூலாவ் மாவட்டம் (Julau District)
- பாக்கான் மாவட்டம் (Pakan District)
பொருளாதாரம்
தொகுசரிக்கே பிரிவின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்ததாகும். சரவாக்கில் உள்ள மற்ற பிரிவுகளை விட சரிக்கே பிரிவு அதிக அளவில் மிளகு உற்பத்தி செய்கிறது.
அன்னாசி பழங்களுக்கும், ஆரஞ்சு பழங்களுக்கும் இந்தப் பிரிவு பிரபலமானது. சரவாக்கில் உள்ள மற்ற இடங்களைப் போலவே மரத் தொழிலும் உள்ளூர் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகும்.
மக்கள் தொகை
தொகுசரிக்கே பிரிவின் மொத்த மக்கள் தொகை 116,290. மக்கள் தொகையில் பாதி பேர் இபான் இன மக்கள். அதைத் தொடர்ந்து மெலனாவ், மலாய்க்காரர்கள், பிடாயூ மக்கள்; மற்றும் சீனர் மக்களின் ஆதிக்கம் சரிக்கே நகரில் பெரும்பான்மையாக உள்ளது.
நிர்வாக மாவட்டம் |
மொத்தம் மக்கள் தொகை |
மலாய் | இபான் | பிடாயூ | மெலனாவ் | பூமிபுத்ரா | சீனர் | இந்தியர் | பூமிபுத்ரா அல்லாதவர் |
மலேசியர் அல்லாதவர் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
சரிக்கே | 56,228 | 9,192 | 18,559 | 456 | 3,933 | 594 | 21,772 | 116 | 370 | 1,236 |
மெராடோங் | 28,713 | 4,450 | 12,322 | 217 | 1,489 | 282 | 8,731 | 93 | 92 | 1,037 |
ஜுலாவ் | 15,449 | 245 | 14,504 | 59 | 60 | 94 | 435 | 7 | 12 | 30 |
பாக்கான் | 15,139 | 125 | 14,423 | 26 | 39 | 136 | 289 | 13 | 35 | 53 |
சரிக்கே பிரிவு மொத்தம் | 115,529 | 14,012 | 59,808 | 758 | 5,521 | 1,106 | 31,227 | 229 | 509 | 2,356 |
நிர்வாகம்
தொகுபொது போக்குவரத்து
தொகுFrom | To | Transportation | Duration |
---|---|---|---|
கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் | சிபு வானூர்தி நிலையம் | நேரம் | 35–40 நிமிடங்கள் |
சிபு வானூர்தி நிலையம் | சரிக்கே | பேருந்து/வாடகை (சிபு நகர மையம்) | 64 km/45 minutes |
பிந்தாவா விரைவுப் படகு கூச்சிங் | Terminal 1, சரிக்கே | விரைவுப் படகு | 3 மணி 30 நிமிடங்கள் |
கூச்சிங் செண்ட்ரல் | விரைவுப் பேருந்து சரிக்கே | விரைவுப் பேருந்து | 360 கி.மீ/6 மணி நேரம் |
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Total population by ethnic group, sub-district and state, Malaysia, 2010" (PDF). Jabatan Perangkaan Malaysia. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
- ↑ "Official website of Sarikei Administrative Division". Archived from the original on 12 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 12 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு