சரிக்கே மாவட்டம்

சரவாக் மாநிலத்தில் ஒரு மாவட்டம்

சரிக்கே மாவட்டம் (மலாய் மொழி: Daerah Sarikei; ஆங்கிலம்: Tanjung Manis Sarikei) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சரிக்கே பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும்; 985 சதுர கிலோமீட்டர் (380 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் தலைநகரம் சரிக்கே நகரம் ஆகும்.[2]

சரிக்கே மாவட்டம்
Sarikei District
Daerah Sarikei
சரிக்கே மாவட்ட மன்றக் கட்டிடம்
சரிக்கே மாவட்ட மன்றக் கட்டிடம்

சரவாக் கொடி
ஆள்கூறுகள்: 2°7′32″N 111°31′19″E / 2.12556°N 111.52194°E / 2.12556; 111.52194
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுசரிக்கே பிரிவு
மாவட்ட அலுவலகம்சரிக்கே
பரப்பளவு
 • மொத்தம்985 km2 (380 sq mi)
மக்கள்தொகை
 (2010)[1]
 • மொத்தம்56,228
 • அடர்த்தி57/km2 (150/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
96xxx
தொலைபேசி எண்கள்+6084; +6085
போக்குவரத்துப் பதிவெண்கள்QR
இனம்[1]சீனர்கள் (38.7%)
இபான் மக்கள் (33.0%)
மலாயர்கள் (16.34%)
மெலனாவு மக்கள் (7.0%)
மலேசியர் அல்லாதவர் (2.2%)
பிடாயூ மக்கள் (0.8%)
இணையதளம்http://www.sarikei.sarawak.gov.my/

முன்பு காலத்தில், சரிக்கே நகரம், கோழிகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் மையமாக இருந்தது. எனவே அப்போது "சா-ரி-கேய்" என்று அழைக்கப்பட்டது. சா-ரி-கேய் எனும் பெயர் காலப்போக்கில் சரிக்கே என்று மாற்றம் கண்டது.[3]

வரலாறு

தொகு

1840-ஆம் ஆண்டுகளில், ராஜாங் ஆற்றின் வர்த்தகம்; சரிக்கேயில் இருந்த மலாய்க்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களில் டத்தோ பாதிங்கி அப்துல் ரகுமான் (Datuk Patinggi Abdul Rahman) என்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தார்.[4]

அப்போது சரிக்கேயில் பிரபலமான வணிகப் பொருட்கள்; அரிசி, தேன் மெழுகு, காட்டுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் உலர்ந்த மீன்கள் போன்றவையாகும்.[5]

ஜேம்சு புரூக்

தொகு

1845 ஏப்ரல் 30-ஆம் தேதி, ராஜா ஜேம்சு புரூக் முதன்முதலில் சரிக்கேயில் கால் பதித்தார். அவர் அங்கு வந்த போது கடற்கொள்ளைகள் அதிகமாக இருந்தன. இபான் மக்களின் கடற்கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று டத்தோ பாதிங்கி அப்துல் ரகுமானைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அப்துல் ரகுமான் இபான் மக்களைக் கட்டுப்படுத்த தவறிவிட்டார்.

1853-இல், புரூணை சுல்தானகத்திடம் இருந்து ராஜாங் ஆறு மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலப் பகுதிகளை ராஜா ஜேம்சு புரூக் பெற்றுக் கொண்டார்.[6]

டத்தோ பாதிங்கி அப்துல் ரகுமான்

தொகு

இந்தக் கட்டத்தில் இபான் மக்களின் தலைவர்களில் ஒருவராக இருந்த சரிப் மசோர் (Syarif Masahor) என்பவர் இபான் மக்கள் உதவியுடன் டத்தோ பாதிங்கி அப்துல் ரகுமானைத் தாக்கினார். தாக்குதலில் சரிப் மசோர் வெற்றி அடைந்தார். அத்துடன் 1849 தொடங்கி 1861 வரை சரிக்கே பகுதியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்தார்.

1856-ஆம் ஆண்டு சனவரி 4-ஆம் தேதி, ஜூலாவைச் (Julau) சேர்ந்த டயாக் மக்களால் (Dayaks) சரிக்கே நகரம் எரிக்கப்பட்டது. அதே மாதத்தில், இபான் மக்களின் கடற்கொள்ளைகளை அடக்குவதற்கு, சரிக்கேயில் ஜேம்சு புரூக் ஒரு கோட்டையைக் கட்டினார். பின்னர் சரிக்கே நகரம் ஜேம்சு புரூக்கின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.[7]

முதல் குடியேற்றம்

தொகு

1864-இல், சீனாவில் இருந்து ஒக்லோ மக்களும் கான்டோனீய மக்களும் சரிக்கேவுக்கு முதன்முதலில் வந்தார்கள். அவர்கள் அத்தாப்புக் குடில்களைக் கட்டி, ஆற்றங்கரையில் மலாய்க்காரர்களுடன் சேர்ந்து வாழ்ந்தனர். கோழிகளை வளர்த்தனர்; மற்றும் காய்கறிகளை நடவு செய்தனர்.

பின்னர் அவர்கள் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி கடைவீடுகளை உருவாக்கினர்; மளிகை வியாபாரம் செய்யத் தொடங்கினர். அதன்பிறகு, சிங்கப்பூர் நிறுவனங்களுடனான வர்த்தகத்தையும் சேர்த்து அவர்களின் வணிகங்கள் விரிவடைந்தன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Total population by ethnic group, sub-district, and state, Malaysia, 2010 (Table 28.1, page 375)" (PDF). Statistics Department, Malaysia. Archived from the original (PDF) on 5 February 2015. பார்க்கப்பட்ட நாள் 18 March 2015.
  2. "Sarikei District profile". Sarikei Divisional Office. Archived from the original on 17 June 2020. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019. Alt URL
  3. "SARIKEI: Pusat Pertanian Komersil Wilayah Tengah (Sarikei: centre of commercial agriculture of central zone of Sarawak)". Rakan Sarawak (Friends of Sarawak) 9 (2). September 2002. http://www.myonestopsarawak.com.my/info/rakansarawak/092002/coverpage/cp05.shtml. பார்த்த நாள்: 27 April 2018. 
  4. "History Background of Sarikei". Official website of Sarikei Divisional administrative office. Archived from the original on 29 April 2018. பார்க்கப்பட்ட நாள் 28 April 2018. Alt URL
  5. Belcher, Edward (1848). Narrative of the Voyage of H.M.S. Samarang, During the Years 1843-46; Employed surveying the Islands of the Eastern Archipelago Vol. 2. Reeve, Benham and Reeve.
  6. Nicholas, Tarling (17 June 2013). Southeast Asia and the Great Powers. Routledge. p. 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135229405. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
  7. bin Muahamed Jamal al alam, Omar Ali Saifudin. "Photostat of translation of 1851 Concession granted by Sultan Omar Ali Saifuddin II to James Brooke". Trove. பார்க்கப்பட்ட நாள் 2023-05-14.

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிக்கே_மாவட்டம்&oldid=4103017" இலிருந்து மீள்விக்கப்பட்டது