இபான் மக்கள்
இபான் மக்கள் அல்லது கடல் டயாக்குகள் (மலாய்: Orang Iban; ஆங்கிலம்: Iban People; சீனம்: 伊班族) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ தீவில் உள்ள டயாக் மக்களின் ஒரு பிரிவு மக்களாகும். இபான் வம்சாவழியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடல் டயாக்குகள் (Sea Dayaks) என்று அறியப் படுகிறார்கள்.
1920-1940-இல் போர் உடையில் போர்னியோ இபான் டயாக்குகள் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
approximately 1,070,500 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
போர்னியோ: | |
மலேசியா (சரவாக், சபா, லபுவான், தீபகற்ப மலேசியா) | 753,500[1] |
இந்தோனேசியா | 297,000+[2] |
(மேற்கு கலிமந்தான்) | 297,000[3] |
புரூணை | 20,000[4] |
மொழி(கள்) | |
இபான் மொழி, இந்தோனேசிய மொழி, சரவாக் மலாய் மொழி | |
சமயங்கள் | |
கிறிஸ்தவம், ஆங்கிலிக்கனிசம், ஆன்மீகம், இஸ்லாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
கந்து, முவாலாங், செம்புருவாங், புகாவ், செபாரு |
டயாக் எனும் சொல் மேற்கத்தியர்களால் வழங்கப்பட்ட சொல். தலை வேட்டையாடுதல் (headhunting) எனும் காட்டுவாசிப் பழக்கத்திற்கு இபான்கள் புகழ் பெற்றவர்கள். மேலும் துணிச்சலுடன் எதிர்த்துப் போரிடும் குணம் கொண்ட பழங்குடியினராகக் கருதப் படுகிறார்கள்.
பொது
தொகுஐரோப்பியர்களின் வருகை; மற்றும் அடுத்தடுத்த காலனித்துவ ஆட்சிகள்; போன்றவற்றினால் கடல் டயாக்குகளின் தலையை வேட்டையாடும் பழக்கம் படிப்படியாக மறைந்து விட்டது. இருப்பினும் இன்றும் பல பாரம்பரியப் பழங்குடி பழக்க வழக்கங்கள் இருக்கவே செய்கின்றன.
மலேசியாவில் சரவாக் மாநிலம்; புரூணை; மற்றும் இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மாநிலம் போன்ற நிலப் பகுதிகளில் இபான் மக்கள் வாழ்கின்றனர். மேற்கு கலிமந்தானில் ரூமா பாஞ்சாங் எனப்படும் நீண்ட வீடுகளில் வாழ்கின்றனர்.[5][6]
ரூமா பேத்தாங் நீள வீடுகள்
தொகுஇந்த நீள வீட்டை, இந்தோனேசிய மொழியில் 'ரூமா பேத்தாங்' (rumah betang) என்றும்; மலாய் மொழியில் 'ரூமா பாஞ்சாங்' (rumah panjang) என்றும் அழைக்கிறார்கள்.[7]
அவர்களைப் பற்றிய தொன்ம ஆய்வுகள்; பழைய புராணங்களின் படி, இபான் மக்கள் வரலாற்று ரீதியாக போர்னியோவில் உள்ள கபுவாஸ் ஆற்றுப் பகுதியில் (Kapuas river) இருந்து வந்தவர்கள் என்று அறியப் படுகிறது. ஆனாலும் அவர்கள் இந்தோனேசியாவைப் பூர்வீகமாகக் கொன்டவர்கள்.[8]
ஸ்ரீ அமான் நதிப்படுகை
தொகுகாலப் போக்கில் இவர்கள் மெதுவாகச் சரவாக் நகர்களுக்குள் வந்து சேர்ந்தனர்.[9] இந்தப் பழங்குடியினரில் சிலர் ஸ்ரீ அமான் நதிப் படுகையில் குடியேறினார்கள்.[10] ஜேம்சு புரூக் ஆட்சியின் போது, இபான் பழங்குடியினர் சரவாக் உள்நாட்டிற்குள் மேலும் ஊடுருவினர். அங்கு ஏற்கனவே இருந்த பல உள்ளூர் பழங்குடியினருடன் மோதலில் ஈடுபட்டனர்.[11]
காலப் போக்கில் உள்ளூர் மக்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர். ஜேம்சு புரூக் காலத்தில் அவர்களின் மனிதத் தலை வேட்டையாடும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Launching of Report On The Key Findings Population and Housing Census of Malaysia 2020". Department of Statistics Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Iban of Indonesia". People Groups. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
- ↑ "Iban of Indonesia". People Groups. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
- ↑ "Iban of Brunei". People Groups. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
- ↑ "Borneo trip planner: top five places to visit". News.com.au. 2013-07-21. Archived from the original on 2015-10-16. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
- ↑ Sutrisno, Leo (2015-12-26). "Rumah Betang". Pontianak Post. Archived from the original on 2015-12-29. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
- ↑ Osup, Chemaline Anak (2006). "Puisi Rakyat Iban – Satu Analisis: Bentuk Dan Fungsi" [Iban Folk Poetry – An Analysis: Form and Function] (PDF). University of Science, Malaysia.
- ↑ "Use of Papan Turai by Iban". Ibanology. 29 May 2013. பார்க்கப்பட்ட நாள் 3 December 2016.
- ↑ Mawar, Gregory Nyanggau (21 June 2006). "Gawai". Iban Cultural Heritage. பார்க்கப்பட்ட நாள் 3 December 2016.
- ↑ "Early Iban Migration – Part 1". 26 March 2007.
- ↑ Jabu, Empiang (28 February 2013). "History Perspective of The Iban".