முதன்மை பட்டியைத் திறக்கவும்

தீபகற்ப மலேசியா

ஆள்கூறுகள்: 4°0′N 102°30′E / 4.000°N 102.500°E / 4.000; 102.500

மலேசியத் தீபகற்பம்

தீபகற்ப மலேசியா (Peninsular Malaysia, மலையாளம்: Semenanjung Malaysia), மலேசிய மூவலந்தீவு[1] (முன்னர் மலாயா), என்பது மலாய் தீபகற்பத்தில் (மலேசிய மூவலந்தீவில்) அமைந்திருக்கிறது. இது மலேசியாவின் ஒரு பகுதியாகும். தீபகற்ப மலேசியா மேற்கு மலேசியா (Malaysia Barat) அல்லது மலாயா மாநிலங்கள் (Negeri-negeri Tanah Melayu) என்றும் அழைக்கப்படுகிறது.[2][3]

இதன் பரப்பளவு 131,598 சதுர கிமீ (50,810 சதுர மைல்கள்). இது வடக்கே தாய்லாந்து நாட்டை நில எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கே சிங்கப்பூர் உள்ளது. மேற்கே மலாக்கா நீரிணைக்கு மறுகரையில் சுமாத்திரா தீவு அமைந்துள்ளது. கிழக்கே தெற்கு சீனக் கடலுக்கு மறுகரையில் கிழக்கு மலேசியா (போர்னியோ தீவில்) உள்ளது.[4] இது ஏறத்தாழ 21 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

மாநிலங்களும் பிரதேசங்களும்தொகு

மலேசிய மூவலந்தீவில் மட்டும் 11 மாநிலங்களும், இரண்டு நடுவண் பிரதேசங்களும் அமைந்துள்ளன:

மக்கள் பரம்பல்தொகு



 

தீபகற்ப மலேசியாவின் இனப்பரம்பல் (2017)

  பூமிபுத்திரர் (மலாய்) (64.3%)
  சீனர் (25.1%)
  இந்தியர் (9.0%)
  பழங்குடியினர் (அசுலினர்) / வேறு - மலாய் பூமிபுத்திரர் (0.5%)
  ஏனையோர் (1.1%)
சமயம் (2017 கணக்கெடுப்பு)
சமயம் வீதம்
இசுலாம்
  
64.9%
பௌத்தம்
  
21.4%
இந்து சமயம்
  
7.9%
கிறிஸ்தவம்
  
3.1%
சீன பழங்குடி சமயம்
  
0.9%
தெரியவில்லை / எதுவுமில்லை
  
0.8%
சமயமின்மை
  
0.6%
ஏனைய சமயங்கள்
  
0.4%

தீபகற்ப மலேசியாவின் பெரும்பான்மையான மக்கள் மலாய் மக்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் முசுலிம்கள் ஆவர்.[5] இவரக்ளை விட சீன, இந்திய மக்களும் வாழ்கின்றனர். இப்பகுதியின் மரபுவழி மகக்ள் மலேசியப் பழங்குடியினர் ஆவர். கிட்டத்தட்ட 140,000 பழங்குடியினர் இங்கு வாழ்கிறாகள். இவர்கள் பெரும்பாலும் உட்பகுதிகளிலேயே வாழ்கின்றனர்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

  1. மலேசியா நாட்டின் இன்னொரு பகுதியான, சபா, சரவாக் பகுதிகளைக் கொண்ட கிழக்கு மலேசியா என்பது இந்தோனேசியத் தீவின் ஒரு பகுதியாகும். இது மலேசிய மூவலந்தீவில் இருந்து தென்சீனக் கடலால் பிரிக்கப்பட்டு இருக்கும் நிலப்பகுதி
  2. Mohamed Anwar Omar Din (2012). "Legitimacy of the Malays as the Sons of the Soil" 80–81. Canadian Center of Science and Education.
  3. Anthony Reid (academic) (2010). Imperial alchemy : nationalism and political identity in Southeast Asia. Cambridge University Press. பக். 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-87237-9. 
  4. Malaya. http://www.travelfish.org/region/malaysia/peninsular_malaysia. 
  5. Some aspects of Malay-Muslim Ethnicity in Malaya. June 1981. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபகற்ப_மலேசியா&oldid=2792064" இருந்து மீள்விக்கப்பட்டது