ஜொகூர்

மலேசிய மாநிலம்
(சொகூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜொகூர் (ஆங்கிலம்: Johor; மலாய் மொழி: Johor Darul Ta'zim; சீனம்: 柔佛; சாவி: جوهر‎) என்பது தீபகற்ப மலேசியாவின் தெற்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். மலேசியாவில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது.

ஜொகூர்
ஜொகூர் டாருல் தாக்’சிம்
Johor Darul Ta'zim
جوهر دارالتّعظيم
ஜொகூர்-இன் கொடி
கொடி
ஜொகூர்-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Kepada Allah Berserah
இறைவனிடம் அடைக்கலம் பெறுவோம்
பண்: ஜொகூர் மாநிலப் பண்
Johor State Anthem
      சொகூர் in       மலேசியா
      சொகூர் in       மலேசியா
ஆள்கூறுகள்: 1°59′27″N 103°28′58″E / 1.99083°N 103.48278°E / 1.99083; 103.48278
ஜொகூர் சுல்தானகம்14-ஆம் நூற்றாண்டு
பிரித்தானிய கட்டுப்பாடு1914
மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு31 சனவரி 1942
மலாயா கூட்டமைப்பு1948
மலாயா சுதந்திரம்31 ஆகத்து 1957
மலேசியா16 செப்டம்பர் 1963
தலைநகரம்ஜொகூர் பாரு
அரச நகரம்மூவார்
அரசு
 • ஜொகூர் சுல்தான்மாட்சிமை தங்கிய சுல்தான் இபுராகிம் இசுமாயில்
 • மந்திரி பெசார்ஓன் அபிசு காசி பாரிசான் நேசனல்
பரப்பளவு
 • மொத்தம்19,166 km2 (7,400 sq mi)
உயர் புள்ளி1,276 m (4,186 ft)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்40,09,670
 • அடர்த்தி209.2/km2 (542/sq mi)
 • 
ஜொகூர் குடிமக்கள்
மனித வள வளர்ச்சிப் பட்டியல்
 • HDI (2019)0.825 (high) (மலேசிய மாநிலங்கள்)
மலேசிய அஞ்சல் குறியீடு
மலேசியத் தொலைபேசி எண்07 (மூவார்)
06 லேடாங்
ஐஎசுஓ 3166 குறியீடுMY-01, 21–24
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்J
இணையதளம்http://www.johor.gov.my

சொகூர் பாரு (Johor Bahru) மாநகரம், ஜொகூர் மாநிலத்தின் தலைநகரமாக விளங்குகிறது. கோத்தா இசுகந்தர் (Kota Iskandar) நகரம்; ஜொகூர் மாநிலத்தின் நிர்வாக நகரமாகவும்; மூவார் நகரம் அரச நகரமாகவும் உள்ளன. இந்த மாநிலத்தின் பழைய தலைநகரத்தின் பெயர் சொகூர் லாமா.

ஜொகூர் மாநிலத்தின் தெற்கே சிங்கப்பூர் குடியரசு; வடக்கே பகாங் மாநிலம்; வட மேற்கே மலாக்கா, நெகிரி செம்பிலான் மாநிலங்கள் உள்ளன. சொகூர் மாநிலம் ‘கண்ணியத்தின் இருப்பிடம்’ (Darul Ta'zim) எனும் நன்மதிப்பு அடைமொழியுடன் அழைக்கப் படுகின்றது. ‘இடாருல் தா’சிம் என்பது ஓர் அரபுச் சொல் ஆகும்.

சொல் பிறப்பியல்

தொகு
 
சுல்தான் இசுகந்தர் குடிநுழைவு தலைமையகம்.
 
சொகூரில் இருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் நீர்க்குழாய்கள்.

சொகூர் எனும் சொல் ‘சவுகர்’ (jauhar) எனும் அரபுச் சொல்லில் இருந்து வந்தது. சவுகர் என்றால் மதிப்புமிக்க இரத்தினக்கல் என்று பொருள்படும். ஒரு காலக் கட்டத்தில் இங்கு இரத்தினக் கற்கள் நிறைய கிடைத்தன. அதனால், அங்கு வாழ்ந்த மலாய்க்காரர்கள் அந்த இடத்திற்கு சொகூர் என்று பெயர் வைத்தனர். [2]

அதற்கு முன்னர் மூவார் ஆற்றில் இருந்து சிங்கப்பூர் தீவு வரையிலான நிலப் பகுதியை 'உச்சோங் தானா' (Ujong Tanah) என்று அழைத்தனர். உச்சோங் தானா என்றால் நிலத்தின் முனை என்று பொருள். சொகூருக்கு இன்னும் ஒரு சிறப்பு உள்ளது. ஆசியக் கண்ட நிலப் பகுதியின் தெற்கே மிகத் தொலைவில் அமைந்த முனை சொகூரில் தான் உள்ளது.[3][4]

வரலாறு

தொகு

அலாவுதீன் ரியாட் சா II

தொகு

16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சொகூர் சுல்தானகம் உருவாக்கம் பெற்றது. அந்தச் சுல்தானகத்தை உருவாகியவர் அலாவுதீன் ரியாட் சா II. இவர் மலாக்கா சுல்தான்களில் ஆகக் கடைசியாக மலாக்காவை ஆட்சி செய்த சுல்தான் மகமுட் சா என்பவரின் புதல்வர் ஆவார்.

மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றியதும் அவர்களிடம் இருந்து தப்பிக்க சுல்தான் முகமட் சா அங்கிருந்து சொகூருக்கு இடம் பெயர்ந்தார். மலாக்கா பேரரசுவிற்குப் பின்னர் உருவாக்கம் பெற்ற இரு வாரிசு அரசுகளில் சொகூர் சுல்தானகம் ஒன்றாகும். மற்றொரு வாரிசு பேராக் சுல்தானகம் ஆகும்.

முசபர் சா

தொகு

பேராக் சுல்தானகத்தைச் சுல்தான் முகமட் சாவின் மற்றொரு புதல்வரான முசபர் சா உருவாக்கினார். அலாவுதீன் ரியாட் சா உருவாக்கிய சொகூர் சுல்தானகம், போர்த்துகீசியர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. சொகூர் சுல்தானகம் அதன் ஆட்சியின் உச்சத்தில் இருந்த போது பகாங், இந்தோனேசியாவின் ரியாவு தீவுகள், சுமத்திராவின் ஒரு பகுதி போன்ற இடங்கள் அதன் ஆளுமையின் கீழ் இருந்தன.[5]

வட சுமத்திராவை ஆட்சி செய்த அச்சே அரசு, மலாக்காவை ஆட்சி செய்த போர்த்துகீசிய அரசு போன்ற அப்போதைய அரசுகளுடன் நீண்ட கால சண்டை சச்சரவுகளில் சொகூர் அரசு ஈடுபட வேண்டிய நிலைமையும் இருந்து வந்தது. இந்தக் காலக் கட்டங்களில் நட்பு மலாய் மாநிலங்களும், டச்சுக்காரர்களும் சொகூர் சுல்தானகத்துடன் தோழமை பாராட்டி வந்தனர்.

போர்த்துகீசியர்களுக்கு அச்சுறுத்தல்

தொகு

அலாவுதீன் ரியாட் சா உருவாக்கிய சொகூர் சுல்தானகம், போர்த்துகீசியர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. சொகூர் சுல்தானகம் தனது ஆட்சியின் உச்சத்தில் இருந்த போது பகாங், இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகள், சுமத்திராவின் ஒரு பகுதி போன்றவை அதன் ஆளுமையின் கீழ் இருந்தன.[6]

1641ஆம் ஆண்டு சொகூர் அரசின் உதவியுடன் டச்சுக்காரர்கள் மலாக்காவைக் கைப்பற்றினர். அதன் பின்னர் சொகூர் அரசு மலர்ச்சி பெற்ற வணிகத் தளமாகப் புகழ் பெற்றது. இருப்பினும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட உள்நாட்டு விரிசல்களினால் சொகூர் அரசின் மேலாண்மை மங்கிப் போனது.[7]

டத்தோ தெமாங்கோங் டத்தோ இபுராகிம்

தொகு

18ஆம் நூற்றாண்டில், சுலாவாசியைச் சேர்ந்த பூகிசுகாரர்களும், சுமத்திராவைச் சேர்ந்த மினாங்காபாவ்காரர்களும் சொகூர்-ரியாவ் பேரரசின் அரசியல் ஆற்றல்களைக் கட்டுப்படுத்தி வந்தனர். 1855-இல் சிங்கப்பூரை ஆட்சி செய்த பிரித்தானியர்களுக்கும் சொகூர் மாநிலத்தின் சுல்தான் அலிக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி சொகூர் அரசு, டத்தோ தெமாங்கோங் டத்தோ இபுராகிமிடம் ஒப்படைக்கப் பட்டது.

டத்தோ தெமாங்கோங் டத்தோ இபுராகிம், சொகூர் மாநிலத்தின் தென்பகுதியில் தஞ்சோங் புத்திரி எனும் ஒரு புதிய நகரத்தை உருவாக்கினார். இந்த நகரம் தான் இப்போதைய சொகூர் பாரு ஆகும். தெமாங்கோங் டத்தோ இபுராகிமிற்குப் பின்னர் அவருடைய புதல்வர் டத்தோ தேமாங்கோங் அபு பாக்கார் சொகூர் சுல்தானகத்தின் அரியணையில் அமர்ந்தார்.

நவீன சொகூரின் தந்தை

தொகு

இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியார் அவருக்கு சிரீ மகாராசா சொகூர் எனும் சிறப்புப் பெயரை வழங்கினார். சுல்தான் அபு பாக்கார் சொகூர் மாநிலத்திற்கு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொடுத்தார். பிரித்தானிய பாணியிலான ஓர் அரசியல் நிர்வாகத்தை ஏற்படுத்தினார். எதிர்கால சுல்தான்களுக்காக ஓர் அதிகாரத்துவ அரண்மனையையும் கட்டினார்.

சொகூர் மாநிலத்திற்கு அவர் ஆற்றியுள்ள அரும் பெரும் சேவைகளைப் பாராட்டும் வகையில் அவர் ‘நவீன சொகூரின் தந்தை’ எனும் சிறப்பு அடைமொழியுடன் இப்போதும் அழைக்கப் படுகின்றார். சுல்தான் அபு பாக்காரின் சேவைகளை சொகூர் மக்கள் இன்றும் பாராட்டி வருகின்றனர்.

ஜொகூர் மாவட்டங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Johor @ a Glance". Department of Statistics, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 13 January 2018.
  2. Abdul Latip bin Talib (14 July 2014). Moyang Salleh [Salleh Great-grandparent] (in மலாய்). PTS Litera Utama. pp. 34–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-408-158-4.
  3. Ancient names of Johor, 2 March 2009, JohorBuzz, New Straits Times
  4. Jonathan Rigg (1862). A dictionary of the Sunda language of Java. Bataviaasch Genootschap van Kunsten en Wetenschappen. pp. 177–.
  5. Borschberg, Peter (11 January 2016). "Johor-Riau Empire". The Encyclopedia of Empire. Wiley Online Library. pp. 1–3. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9781118455074.wbeoe105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118455074.
  6. "For over a period of time, intermittent raids were carried out both by land and sea caused considerable hardship for the Portuguese at Melaka". Archived from the original on 2011-12-04. பார்க்கப்பட்ட நாள் 2011-12-12.
  7. "By 1660, Johor had become a flourishing entrepôt, although weakening and splintering of the empire in the late seventeenth and eighteenth century reduced its sovereignty". Archived from the original on 2008-01-12. பார்க்கப்பட்ட நாள் 2011-12-12.

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் கவனிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொகூர்&oldid=3917110" இலிருந்து மீள்விக்கப்பட்டது