ஜொகூர் பாரு நகரம்
சொகூர் பாரு என்பது (மலாய்:Johor Bahru'; ஆங்கிலம்:Johor Bahru'; சீனம்:新山) மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். இந்த நகரம் ஜொகூர் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். மலாய் மொழியில் ஜொகூர் என்றால் அணிகலன். பாரு என்றால் புதியது. ஜொகூர் பாரு எனும் இரு கூட்டுச் சொற்களின் பொருள் புதிய அணிகலன் என்பதாகும்.
ஜொகூர் பாரு Johor Bahru | |||
---|---|---|---|
மாநகரம் | |||
![]() ஜொகூர் பாரு மாநகரம் இரவு நேரத்தில் | |||
| |||
அடைபெயர்(கள்): ஜே.பி. (JB) | |||
குறிக்கோளுரை: ஜொகூர் பாரு: அனைத்துலக கலாச்சாரத்தின் நிலையான நகரம் | |||
ஆள்கூறுகள்: 01°27′20″N 103°45′40″E / 1.45556°N 103.76111°Eஆள்கூறுகள்: 01°27′20″N 103°45′40″E / 1.45556°N 103.76111°E | |||
நாடு | ![]() | ||
மாநிலம் | ஜொகூர் | ||
மாவட்டம் | ஜொகூர் பாரு மாவட்டம் | ||
உருவாக்கம் | 10 மார்ச் 1855 (தஞ்சோங் புத்திரி) | ||
நகராண்மை | 1 ஏப்ரல் 1977 | ||
மாநகரத் தகுதி | 1 ஜனவரி 1994 | ||
அரசு | |||
• நிர்வாகம் | ஜொகூர் பாரு மாநகர் மன்றம் | ||
• மேயர் | டத்தோ ஹாஜி அடிப் அசாரி டாவுட் | ||
பரப்பளவு | |||
• மாநகரம் | 220.00 km2 (84.94 sq mi) | ||
• நகர்ப்புறம் | 1,064 km2 (411 sq mi) | ||
• Metro | 2,217 km2 (856 sq mi) | ||
ஏற்றம் | 36.88 m (121 ft) | ||
மக்கள்தொகை (2010) | |||
• மாநகரம் | 663,307 | ||
• அடர்த்தி | 2,259/km2 (5,850/sq mi) | ||
• நகர்ப்புறம் | 1,277,244 (மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள்) | ||
• நகர்ப்புற அடர்த்தி | 1,200/km2 (3,000/sq mi) | ||
• பெருநகர் | 1,805,000 | ||
• பெருநகர் அடர்த்தி | 814/km2 (2,110/sq mi) | ||
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) | ||
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே) | ||
இணையதளம் | ஜொகூர் பாரு |
ஜொகூர் பாரு மாநகரத்தில் மட்டும் 663,307 பேர் வசிக்கின்றனர். இந்த மாநகரம் இஸ்கந்தர் புத்திரி நகரை ஒட்டியுள்ளது. ஜொகூர் பாரு; இஸ்கந்தர் புத்திரி; இரு நகரங்களையும் ஒருங்கிணைத்து இஸ்கந்தர் மலேசியா என்று அழைக்கிறார்கள். இரு நகரங்களின் கூட்டு மக்கள் தொகை 1,638,219. மலேசியாவின் மூன்றாவது பெரிய நகர்ப்புறமாக விளங்குகிறது.
மலேசியாவிற்கு வருகை தரும் 22.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளில் 49.9 விழுக்காட்டினர் சிங்கப்பூரையும் ஜொகூரையும் இணைக்கும் ஜொகூர் பாரு பாலம் வழியாக ஜொகூர் பாருவிற்கு வருகின்றனர்.