ஜொகூர் பாரு மாவட்டம்
(சொகூர் பாரு எனும் பெயரில் சொகூர் பாரு மாவட்டம்; சொகூர் பாரு நகரம் என இரு இடங்கள் உள்ளன.)
சொகூர் பாரு மாவட்டம் Daerah Johor Bahru | |
---|---|
![]() | |
![]() சொகூர் பாரு மாவட்டம் அமைவிடம் சொகூர் | |
ஆள்கூறுகள்: 1°32′N 103°43′E / 1.533°N 103.717°E | |
தொகுதி | சொகூர் பாரு |
உள்ளூராட்சி | இசுகந்தார் புத்ரி மாநகராட்சி மன்றம் (வடக்கு மேற்கு சொகூர் பாரு) சொகூர் பாரு மாநகராட்சி மன்றம் (சொகூர் பாரு மாநகர் மையம்) பாசீர் கூடாங் மாநகராட்சி மன்றம் (கிழக்கு சொகூர் பாரு) |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | ஆசி அப்துல் ரகுமான் சாலே Haji Abdul Rahman bin Salleh |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 1,063.97 km2 (410.80 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 12,65,545 |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே+8) |
அஞ்சல் குறியீடுகள் | 79xxx - 81xxx |
தொலைபேசி குறியீடு | +6-07-2, +6-07-3, +6-07-5 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | J |

சொகூர் பாரு மாவட்டம், (மலாய்: Daerah Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru District; சீனம்: 新山县; சாவி: جوهر بهرو) என்பது மலேசியா, சொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டம் சொகூர் மாநிலத்தில் ஆகத் தென்முனையில் உள்ளது.
சொகூர் பாரு மாவட்டத்தின் தலைநகரம் சொகூர் பாரு நகரம்; நிர்வாகத் தலைநகரம் இசுகந்தர் புத்திரி. மாவட்ட எல்லைகளாக மேற்கில் பொந்தியான் மாவட்டம்; கிழக்கில் கோத்தா திங்கி மாவட்டம்; வடக்கே கூலாய் மாவட்டம்; தெற்கே சொகூர் நீரிணை.
இதன் நகர்ப்புற மையங்களாக சொகூர் பாரு; இசுகந்தர் புத்திரி மற்றும் பாசீர் கூடாங் நகரங்கள் அமைந்து உள்ளன. இதன் மாநகர் மன்றம் சொகூர் பாரு நகரத்தில் உள்ளது.
நிர்வாகம் தொகு
ஜொகூர் பாரு மாவட்டம் நன்கு வளர்ச்சி பெற்று; ஒரு பெருநகர மயமான மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் துரிதமான வளர்சியினால், மூன்று துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு; மூன்று நிர்வாகங்களாகத் தனித்தனியாக நிர்வாகம் செய்யப் படுகிறது.
ஜொகூர் பாரு மாநகர் மன்றம் தொகு
ஜொகூர் பாரு மாநகராட்சி (MBJB), ஜொகூர் பாரு மாநகர் மையத்தை நிர்வகிக்கிறது. தவிர இந்த மன்றம் லார்க்கின், தெப்ராவ், உலு திராம், பண்டார் டத்தோ ஓன், கெம்பாஸ், தம்போய், ஜொகூர் ஜெயா, பெர்மாஸ் ஜெயா ஆகிய நகர்ப் பகுதிகளையும் நிர்வகிக்கிறது.
இஸ்கந்தர் புத்திரி நகர மன்றம் தொகு
இஸ்கந்தர் புத்திரி நகர மன்றம் (MBIP), இஸ்கந்தர் புத்திரி நகரப் பகுதியை நிர்வகிக்கிறது. இதில் ஸ்கூடாய், கெலாங் பாத்தா, பெர்லிங், கங்கார் பூலாய், தஞ்சோங் குப்பாங் மற்றும் தஞ்சோங் பெலப்பாஸ் ஆகிய நகர்ப் பகுதிகள் அடங்கும்.
பாசீர் கூடாங் நகர மன்றம் தொகு
பாசீர் கூடாங் நகர மன்றம், ஜொகூர் பாரு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளான பாசீர் கூடாங், மாசாய், பண்டார் ஸ்ரீ ஆலாம், தாமான் கோத்தா மாசாய், காங் காங் மற்றும் சுங்கை திராம் போன்ற மக்கள்தொகை கொண்ட பகுதிகளை நிர்வகிக்கிறது.
நிர்வாகப் பகுதிகள் தொகு
ஜொகூர் பாரு மாவட்டம் 7 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[2][3]
முக்கிம் | மக்கள் தொகை | பரப்பளவு (சதுர கி.மீ) | ||
---|---|---|---|---|
ஜொகூர் பாரு மாநகரம்
தெப்ராவ்
பிளந்தோங்
சுங்கை தீராம்
பூலாய்
ஜெலுத்தோங்
தஞ்சோங் குப்பாங்
| ||||
ஜெலுத்தோங் | 14,651 | 15.281 | ||
பிளந்தோங் | 494,152 | 264.439 | ||
பூலாய் | 360,642 | 210.567 | ||
சுங்கை தீராம் | 13,348 | 234.913 | ||
தஞ்சோங் குப்பாங் | 10,972 | 84.434 | ||
தெப்ராவ் | 316,327 | 218.078 | ||
ஜொகூர் பாரு மாநகரம் | 124,096 | 36.260 |
மாநகரங்களும் நகரங்களும் தொகு
ஜொகூர் பாரு மாவட்டத்தில் இரு நகரங்கள் உள்ளன.
வகை | UPI குறியீடு | நகரம்/மாநகரம் |
---|---|---|
மாநகரம் | 010240 | ஜொகூர் பாரு நகரம் |
010242 | தெப்ராவ் |
நகரங்கள் தொகு
- ஸ்கூடாய் Skudai
- மாசாய் நகரம் Masai
- பாண்டான்- தெப்ராவ் Pandan
- பிளெந்தோங் Plentong
- கேலாங் பாத்தா Gelang Patah
- தம்போய் Tampoi
- உலு திராம் Ulu Tiram
- கெம்பாஸ் Kempas
- காங்கார் பூலாய் Kangkar Pulai
- உலு சோ Ulu Choh
மலேசிய நாடாளுமன்றம் தொகு
மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) ஜொகூர் பாரு மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.
நாடாளுமன்றம் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P158 | தெப்ராவ் | சூங் ஷியாவ் யூன் Choong Shiau Yoon |
சுயேட்சை (28.02.2021 தொடங்கி) |
P159 | பாசீர் கூடாங் | ஹசன் அப்துல் கரீம் Hassan Abdul Karim |
பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்) |
P160 | ஜொகூர் பாரு | அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர் Akmal Nasrullah Mohd Nasir |
பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்) |
P161 | பூலாய் | சலாவுதீன் அயூப் Salahuddin Ayub |
பாக்காத்தான் ராக்யாட் (அமானா) |
P162 | இஸ்கந்தர் புத்திரி | லிம் கிட் சியாங் Lim Kit Siang |
பாக்காத்தான் ராக்யாட் (ஜ.செ.க) |
ஜொகூர் மாநிலச் சட்டமன்றம் தொகு
ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தில் ஜொகூர் பாரு மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்: [4]
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P158 | N40 | தீராம் Tiram |
கோபாலகிருஷ்ணன் சுப்பிரமணியம் Gopalakrishnan A/L Subramaniam |
பாக்காத்தான் ஹராப்பான் (பி.கே.ஆர்) |
P158 | N41 | புத்திரி வாங்சா Puteri Wangsa |
மஸ்லான் பூஜாங் Mazlan Bujang |
பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்) |
P159 | N42 | ஜொகூர் ஜெயா Johor Jaya |
லியோ காய் துங் Liow Cai Tung |
பாக்காத்தான் ஹாராப்பான் (ஜ.செ.க) |
P159 | N43 | பெர்மாஸ் Permas |
செ சக்காரியா முகமட் சாலே Che Zakaria Mohd Salleh |
பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்) |
P160 | N44 | லார்கின் | முகமட் இஷார் அகமது Mohd Izhar Ahmad |
பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்) |
P160 | N45 | சுதுலாங் | சென் கா எங் Chen Kah Eng |
பாக்காத்தான் ஹாராப்பான் (ஜ.செ.க) |
P161 | N46 | பெர்லிங் | சியோ யீ ஹாவ் Cheo Yee How |
பாக்காத்தான் ஹாராப்பான் (ஜ.செ.க) |
P161 | N47 | கெம்பாஸ் | ஒஸ்மான் சப்பியான் Osman Sapian |
பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்) |
P162 | N48 | ஸ்கூடாய் | டான் ஹாங் பின் Tan Hong Pin |
பாக்காத்தான் ஹாராப்பான் (ஜ.செ.க) |
P162 | N49 | கோத்தா இஸ்கந்தர் | சுல்கிப்ளி பின் அகமது Dzulkefly Bin Ahmad |
பாக்காத்தான் ராக்யாட் (அமானா) |
சான்றுகள் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-05-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170504152940/http://ptj.johor.gov.my/index.php/pejabat-tanah/pejabat-tanah-johor-bahru/profil-ptjb-2.
- ↑ "Kod dan Nama Sempadan Pentadbiran Tanah, Unique Parcel Identifier (UPI) JOHOR". Jawatankuasa Teknikal Standard MyGDI (JTSM). https://www.mygeoportal.gov.my/sites/default/files/dokumen_upi/KOD%20DAN%20NAMA%20SEMPADAN%20PENTADBIRAN%20TANAH_JOHOR.pdf. பார்த்த நாள்: 17 June 2021.
- ↑ "Profil Daerah Johor Bahru". Jabatan Pengairan dan Saliran Daerah Johor Bahru இம் மூலத்தில் இருந்து 16 மே 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170516192212/http://apps.water.gov.my/jpskomuniti/dokumen/Johor%20Bahru%20Profil%20(Rev1).pdf. பார்த்த நாள்: 17 June 2021.
- ↑ "www.spr.gov.my மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்" இம் மூலத்தில் இருந்து 2018-05-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180509211404/http://pru14.spr.gov.my/.
மேலும் காண்க தொகு
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Johor Bahru
- அதிகாரப்பூர்வ இணையதளம்