கோத்தா திங்கி மாவட்டம்

கோத்தா திங்கி மாவட்டம் என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்.

(கோத்தா திங்கி எனும் பெயரில் கோத்தா திங்கி மாவட்டம்; கோத்தா திங்கி நகரம்] என இரு இடங்கள் உள்ளன.)

கோத்தா திங்கி மாவட்டம்
மலேசியா மாவட்டம்
ஜொகூர்
கோத்தா திங்கி மாவட்டம் அமைவிடம் ஜொகூர்
கோத்தா திங்கி மாவட்டம் அமைவிடம் ஜொகூர்
ஆள்கூறுகள்: 1°44′N 103°54′E / 1.733°N 103.900°E / 1.733; 103.900
தொகுதிகோத்தா திங்கி நகரம்
உள்ளூராட்சிகோத்தா திங்கி நகராட்சி மன்றம்
பெங்கேராங் நகராட்சி மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிஹாஜி பாரிசால் இஸ்மாயில்
Haji Farizal bin Ismail
பரப்பளவு
 • மொத்தம்3,488.7 km2 (1,347.0 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்1,76,302
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
வாகனப் பதிவுJ

கோத்தா திங்கி மாவட்டம் என்பது (மலாய்:Daerah Kota Tinggi; ஆங்கிலம்:Kota Tinggi District; சீனம்:哥打丁宜县) மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கோத்தா திங்கி நகரம் தலைநகரமாக விளங்குகிறது.

கோத்தா திங்கி மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 291 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 152 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 71 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 34 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.

கோத்தா திங்கி நகரம்; கோலா செடிலி (Kuala Sedili); சுங்கை ரெங்கிட் (Sungai Rengit); மற்றும் பெங்கேராங் (Pengerang) பகுதியின் குடியிருப்புகளைக் கோத்தா திங்கி மாவட்ட மன்றம் (Kota Tinggi District Council) நிர்வகிக்கிறது.

பெங்கேராங் பகுதியைத் தளமாகக் கொண்ட தென் பகுதிகளைப் பெங்கேராங் நகராட்சி மன்றம் (Pengerang Municipal Council) நிர்வகிக்கிறது. பெங்கேராங் என்பது கோத்தா திங்கி மாவட்டத்தின் துணை மாவட்டமாகும். 2015-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

ஜொகூர் மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமான கோத்தா திங்கி மாவட்டத்தின் பரப்பளவு 3,482 சதுர கி.மீ. மாநிலத்தின் 18.34% பகுதியை உள்ளடக்கியது.[1]

மலேசிய நாடாளுமன்றம் தொகு

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) கோத்தா திங்கி மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.[2][3]

நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P155 தெங்காரா அடாம் பாபா பாரிசான் நேசனல் (அம்னோ)
P156 கோத்தா திங்கி ஹலிமா சடீக் பாரிசான் நேசனல் (அம்னோ)
P157 பெங்கேராங் அஸ்லினா ஒஸ்மான் சாயிட் பாரிசான் நேசனல் (அம்னோ)

ஜொகூர் மாநிலச் சட்டமன்றம் தொகு

ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தில் கோத்தா திங்கி மாவட்டப் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்: [4]

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P155 N34 பாந்தி அஸ்ரின் ஹாசிம் பாரிசான் நேசனல் (அம்னோ)
P155 N35 பாசிர் ராஜா ரஷீடா இஸ்மாயில் பாரிசான் நேசனல் (அம்னோ)
P156 N36 செடிலி ராஸ்மா இஸ்நாயின் பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.)
P156 N37 ஜொகூர் லாமா ரோஸ்லாலி ஜகாரி பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.)
P157 N38 பெனாவார் ஷரிபா அசீசா பாரிசான் நேசனல் (அம்னோ)
P157 N39 தஞ்சோங் சூராட் சாயிட் சிஸ் ரஹ்மான் பாரிசான் நேசனல் (அம்னோ)

நிர்வாகப் பகுதிகள் தொகு

 
கோத்தா திங்கி மாவட்ட மன்றம்

கோத்தா திங்கி மாவட்ட மன்றம் மற்றும் பெங்கேராங் நகராட்சி மன்றம் ஆகிய இரண்டு உள்ளூராட்சிகளால் இந்த மாவட்டம் நிர்வகிக்கப் படுகிறது. கோத்தா திங்கி மாவட்ட மன்றம் வடமேற்கு பகுதியை நிர்வகிக்கிறது.

பெங்கேராங் நகராட்சி மன்றம் 16 ஜனவரி 2017-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதற்கு முன்னர் பெங்கெராங் உள்ளூர் ஆணையம் என அழைக்கப்பட்டது. இந்தப் பெங்கேராங் நகராட்சி மன்றம் 1,288 கி.மீ. பரப்பளவு கொண்ட தென்கிழக்குப் பகுதியை நிர்வகிக்கிறது.

கோத்தா திங்கி மாவட்டம் 10 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[5]

நகரங்கள் தொகு

ஆறுகள் தொகு

கோத்தா திங்கி மாவட்டத்தில் உள்ள ஆறுகள்.

 • ஜோகூர் ஆறு
 • லெபம் ஆறு
 • சாந்தி ஆறு
 • செடிலி பெசார் ஆறு
 • செடிலி கெசில் ஆறு

பொருளியல் தொகு

கோத்தா திங்கி மாவட்டத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் சுற்றுலா; விவசாயம்; உயிரி தொழில்நுட்பம்; பெட்ரோலிய வேதிப்பொருட்கள்; எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகும்.[6]

கோத்தா திங்கி மாவட்ட நிலப்பகுதிகளில் 60% வேளாண்மை நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. டெசாரு கடற்கரைப் பகுதியில், ஜொகூர் மாநில அரசு 1,578 ஹெக்டர் பரப்பளவில் ஓர் ஒருங்கிணைந்த சுற்றுலாப் பகுதியை உருவாக்கி உள்ளது.[7]

சான்றுகள் தொகு

 1. "Jabatan Perancangan Bandar dan Desa Negeri Johor". http://jpbd.johor.gov.my/images/jpbd_DokumenTerbitan/Handbook.pdf. 
 2. "I accept people's verdict': Najib on Malaysian election results." இம் மூலத்தில் இருந்து 2018-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180811134207/https://www.channelnewsasia.com/news/asia/i-accept-people-s-verdict-najib-on-malaysian-election-results-10220254. 
 3. "Pakatan wins the impossible dream." இம் மூலத்தில் இருந்து 2018-07-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180718122249/http://www.freemalaysiatoday.com/category/nation/2018/05/10/pakatan-wins-the-impossible-dream/. 
 4. "www.spr.gov.my மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்" இம் மூலத்தில் இருந்து 2018-05-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180509211404/http://pru14.spr.gov.my/. 
 5. "கோத்தா திங்கி மாவட்டத்தின் நீர் விநியோகப் புள்ளிவிவரங்கள்." இம் மூலத்தில் இருந்து 2017-08-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170828172134/http://apps.water.gov.my/jpskomuniti/dokumen/J@K_LPD_JUN_Kota%20Tinggi.pdf. 
 6. Muafakat ke Arah Johor Berkemajuan.
 7. State govt's moves set to give Johor economy a boost.

மேலும் காண்க தொகு

மலேசிய மாவட்டங்கள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kota Tinggi District
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
 •   விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kota Tinggi