மலேசியப் பொதுத் தேர்தல், 2018

14-வது மலேசியப் பொதுத் தேர்தல் (14th Malaysian general election) மலேசியாவின் 140வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2018 மே 9 அன்று நடத்தப்பட்டது.[2] மக்களவையின் 222 இடங்களுக்கும், 12 மாநில சட்டமன்றங்களின் 505 இடங்களுக்கும் தேர்தல்கள் இடம்பெற்றன. 13-வது நாடாளுமன்றம் 2018 ஏப்ரல் 7 இல் கலைக்கப்பட்டது.[3]

மலேசியப் பொதுத் தேர்தல், 2018

← 2013 9 மே 2018 2023 →

மலேசிய நாடாளுமன்றத்துக்கான அனைத்து 222 இடங்களுக்கும்
112 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
பதிவு செய்தோர்14,940,624
வாக்களித்தோர்76%[1]
  First party Second party
 
தலைவர் மகாதீர் பின் முகமது நஜீப் துன் ரசாக்
கட்சி பாக்காத்தான் ஹரப்பான் தேசிய முன்னணி
தலைவரான ஆண்டு 7 சனவரி 2018 3 ஏப்ரல் 2009
தலைவரின் தொகுதி லங்காவி பெக்கான்
முந்தைய தேர்தல் 67 இடங்கள், 37.1%
(பாக்காத்தான் ராக்யாட்)
133 இடங்கள், 47.38%
வென்ற தொகுதிகள் 121 79
மாற்றம் 54 54
மொத்த வாக்குகள் 5,795,954 4,078,928
விழுக்காடு 48% 34%


முந்தைய பிரதமர்

நஜீப் துன் ரசாக்
தேசிய முன்னணி

பிரதமர் -தெரிவு

மகாதீர் பின் முகமது
பாக்காத்தான் ஹரப்பான்

இத்தேர்தலில் மலேசிய நாடாளுமன்றத்தின் முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான பாக்காத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றது. இக்கூட்டணி மக்களவையில் 113 இடங்களைக் கைப்பற்றி, சாதாரணப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இக்கூட்டணி அரசுக்கு 8 இடங்களை வென்ற சபா மரபுக் கட்சி தனது ஆதரவை வழங்க முன்வந்தது.[4][5]

மலேசியா 1957 இல் விடுதலை பெற்ற பின்னர் 61 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் ஆளும் தேசிய முன்னணி கூட்டணிக்கு இத்தேர்தல் பெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது. 92 வயதான மகாதீர் பின் முகமது புதிய பிரதமராகப் பதவியேற்றார். உலகின் மிக வயதான அரசுத்தலைவர் என்ற பெருமையும் இவரைச் சேருகிறது. சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகீம் பொது மன்னிப்புப் பெற்று விடுதலை ஆகும் பட்சத்தில், அவருக்கு பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பதாக மகாதீர் அறிவித்தார்.[6]

முடிவுகள் தொகு

அனைத்து 222 நாடாளுமன்ற இருக்கைகளுக்கும் (12 சட்டமன்றங்களின் 505 இருக்கைகளுக்கும்) தேர்தல்கள் இடம்பெற்றன. முடிவுகள் மே 9 மாலை 5 மணிக்குப் பின்னர் அறிவிக்கப்பட்டன.

நாடாளுமன்றம் தொகு

124 79 18 1
PH + WARISAN BN GS USA
 

இருக்கைகள்

  ககசான் செஜாத்திரா (8.11%)
  ஏனையோர் / சுயேச்சை (0.44%)
வாக்குப் பங்கு
பாக்காத்தான் ஹரப்பான்
48.0%
தேசிய முன்னணி
34.0%
ககசான் செஜாத்திரா
17.0%
நாடாளுமன்ற இருக்கைகள்
பாக்காத்தான் ஹரப்பான்
55.86%
தேசிய முன்னணி
35.59%
ககசான் செஜாத்திரா
8.11%

மாநில சட்டமன்றங்கள் தொகு

2018 மலேசிய சட்டமன்றகளுக்கான தேர்தல் முடிவுகள் [7]
மாநிலம் /
நடுவண் பிராந்தியம்
தேசிய முன்னணி பாக்காத்தான் ஹரப்பான் ககசான் செஜாத்திரா ஏனையோர் / சுயேச்சை
வாக்குகள் % இருக்கைகள் % ± வாக்குகள் % இருக்கைகள் % ± வாக்குகள் % இருக்கைகள் % ± வாக்குகள் % இருக்கைகள் % ±
  ஜொகூர் 0 0 19 33.9  18 0 0 36 64.3  20 0 0 1 1.8  2 0 0 0 0  
  கடாரம் 0 0 3 8.3  17 0 0 18 50  9 0 0 15 41.7  8 0 0 0 0  
  கிளாந்தான் 0 0 8 17.8  3 0 0 0 0  2 0 0 37 82.2  6 0 0 0 0  
  மலாக்கா 0 0 13 46.4  8 0 0 15 53.6  12 0 0 0 0  1 0 0 0 0  
  நெகிரி செம்பிலான் 0 0 16 44.4  5 0 0 20 55.6  6 0 0 0 0   0 0 0 0  
  பகாங் 0 0 25 59.5  4 0 0 9 21.4  1 0 0 8 19.0  6 0 0 0 0  
  பினாங்கு 0 0 2 5.0  8 0 0 37 92.5  8 0 0 1 2.5   0 0 0 0  
  பேராக் 0 0 27 45.0  4 0 0 29 48.3  5 0 0 3 5.1  1 0 0 0 0  
  பெர்லிஸ் 52,224 44.1 10 66.7  3 34,854 29.4 3 20.0  2 29,162 24.6 2 13.3  1 0 0 0 0  
  சபா 0 0 29 48.33  16 0 0 29 48.33  5 0 0 0 0.00   46,868 0.00 2 3.34  1
  சிலாங்கூர் 0 0 4 7.1  7 0 0 51 91.1  22 0 0 1 1.8  12 0 0 0 0  
  திராங்கானு 0 0 10 31.3  7 0 0 0 0  1 0 0 22 67.8  8 0 0 0 0  
மொத்தம் 0 0 168 32.9   0 0 247 48.9   0 0 90 17.8   0 0 2 0.4  

மேற்கோள்கள் தொகு

  1. Lourdes, Marc (10 May 2018). "Prime Minister Najib Razak defeated as opposition claims victory in Malaysia". CNN. https://edition.cnn.com/2018/05/09/asia/malaysia-elections-results/index.html. பார்த்த நாள்: 10 May 2018. 
  2. Hafiz Marzukhi (10-04-2018). "PRU 14: SPR tetapkan Rabu 9 Mei hari mengundi" (in Malay). Astro Awani. http://www.astroawani.com/berita-politik/pru14-spr-tetapkan-rabu-9-mei-hari-mengundi-172532. பார்த்த நாள்: 10-04-2018. 
  3. "Federal Government Gazette [Proclamation"] (PDF). Attorney General's Chambers of Malaysia. 28-05-2013. http://www.federalgazette.agc.gov.my/outputp/pua_20130528_P.U.%20(A)%20166%20-%20PROKLAMASI.pdf. பார்த்த நாள்: 6-04-2018. 
  4. "PRU 14 Dashboard". 10 May 2018 இம் மூலத்தில் இருந்து 9 மே 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180509211404/http://pru14.spr.gov.my/#!/home. 
  5. "Pakatan takes Putrajaya, buoyed by ‘Malay tsunami’ | Malay Mail". https://www.malaymail.com/s/1629158/pakatan-takes-putrajaya-buoyed-by-malay-tsunami. 
  6. "Jailed Malaysia politician 'to get pardon'". 11 May 2018. http://www.bbc.com/news/world-asia-44079211. பார்த்த நாள்: 11 May 2018. 
  7. Suruhanjaya Pilihan Raya Malaysia (Election Commission of Malaysia) www.spr.gov.my பரணிடப்பட்டது 2018-05-09 at the வந்தவழி இயந்திரம்/

வெளி இணைப்புகள் தொகு