தேசிய முன்னணி (மலேசியா)

பாரிசான் நேசனல், Barisan Nasional [1] அல்லது தேசிய முன்னணி; (சுருக்கம்: BN) என்பது மலேசியாவின் எதிர்கட்சிகளின் கூட்டணி ஆகும். இந்தக் கூட்டணி 1973 ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதற்கு முன்னர் 1951இல் இருந்து 1972 வரை மலேசிய கூட்டணி கட்சி எனும் பெயரில் இயங்கி வந்தது.

பாரிசான் நேசனல்
தேசிய முன்னணி
Barisan Nasional
国民阵线
நிறுவனர்அப்துல் ரசாக் உசேன்
தலைவர்அகமது ஸாயித் ஹமீட்
(அம்னோ)
துணைத் தலைவர்அகமது ஸாயித் ஹமீட்
(அம்னோ)
தொடக்கம்1973
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா
உறுப்பினர்3 கட்சிகள்
கொள்கைபழைமைவாதம், இஸ்லாமிய மக்களாட்சி
அரசியல் நிலைப்பாடுவலதுசாரி
நிறங்கள்நீலம், வெள்ளை
நாடாளுமன்ற தொகுதிகள்
79 / 222
இணையதளம்
www.bn.org.my

2008 மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற மலேசியாவின் 12-ஆவது பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி பெரும் பின்னடைவைச் சந்தித்து ஆட்சியை மீண்டும் பிடித்திருந்தது. அப்போது தேசிய முன்னணி 140 இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முதன் முதலாக இழந்தது. பாக்காத்தான் ராக்யாட் எதிர்க்கட்சிக் கூட்டணி 82 இடங்களைக் கைப்பற்றியது. அத்துடன் 13 மாநில சட்டமன்றங்களில் ஐந்தை எதிர்க்கட்சிக் கூட்டணி கைப்பற்றியது (ஆனாலும், பேராக் மாநில ஆட்சியை 2009 நெருக்கடியை அடுத்து தேசிய முன்னணியிடம் எதிர்க்கட்சி இழந்தது). அந்தப் பின்னடைவால், அப்போதைய பிரதமர் அப்துல்லா அகமது படாவி தன் பிரதமர் பதவியைத் துறந்தார். அத்துடன் அம்னோ கட்சியின் தலைவர் பதவியையும் துறந்தார்.[2][3] துணைப் பிரதமராக இருந்த நஜீப் துன் ரசாக் 2009 ஏப்ரல் 3 இல் பிரதமர் பதவியையும் அம்னோ கட்சியின் தலைவர் பதவியையும் ஏற்றுக் கொண்டார்.[4][5]

2013 மலேசியப் பொதுத்தேர்தல்தொகு

மே 5 இல் மலேசியாவின் 13-ஆவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. 2013 ஏப்ரல் 3 ஆம் நாள் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, வேட்பாளர் நியமனங்கள் ஏப்ரல் 20 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[6][7] மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அதே சமயத்தில், மாநிலச் சட்டப் பேரவைகள் கலைக்கப்படுவதும், மலேசியாவில் வழக்கமாக நடைபெற்று வரும் ஓர் அரசியல் வழக்கம். அதன் படி சரவாக் மாநில ஆட்சி தவிர 12 மாநில ஆட்சிகளும் கலைக்கப்பட்டு சட்டமன்றங்களுக்கான தேர்தல்களும் 2013 மே 5 இல் இடம்பெற்றன.[8][9] அன்வார் இப்ராகிம் தலைமையிலான பாக்காத்தான் ராக்யாட் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், பிரதமர் நஜீப் துன் ரசாக் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனாலும், எதிர்க் கட்சிக் கூட்டணி ஏழு இடங்களை அதிகமாகக் கைப்பற்றியது.

அமைப்புதொகு

பாரிசான் நேசனல் கூட்டணியின் பெரும்பான்மையான சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்கள் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் கைவசம் உள்ளன. அந்தக் கட்சிகள் இன, சமய அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகின்றன.

பொது தேர்தல் முடிவுகள்தொகு

தேர்தல் மொத்த இடங்கள் மொத்த வாக்குகள் வாக்குகள் பகிர் தேர்தல் முடிவு தலைவர்
மலேசிய பொது தேர்தல், 1974
135 / 154
1,287,400 60.8%  135 இடங்கள்; 'ஆளும் கூட்டணி அப்துல் ரசாக் உசேன்
மலேசிய பொது தேர்தல், 1974
131 / 154
1,987,907 57.2%  4 இடங்கள்; 'ஆளும் கூட்டணி உசேன் ஓன்
மலேசிய பொது தேர்தல், 1982
132 / 154
2,522,079 60.5%  1 இடங்கள்; 'ஆளும் கூட்டணி மகாதீர் பின் முகமது
மலேசிய பொது தேர்தல், 1986
148 / 177
2,649,263 57.3%  16 இடங்கள்; 'ஆளும் கூட்டணி மகாதீர் பின் முகமது
மலேசிய பொது தேர்தல், 1990
127 / 180
2,985,392 53.4%  21 இடங்கள்; 'ஆளும் கூட்டணி மகாதீர் பின் முகமது
மலேசிய பொது தேர்தல், 1995
162 / 192
3,881,214 65.2%  35 இடங்கள்; 'ஆளும் கூட்டணி மகாதீர் பின் முகமது
மலேசிய பொது தேர்தல், 1999
147 / 193
3,748,511 56.53%  15 இடங்கள்; 'ஆளும் கூட்டணி மகாதீர் பின் முகமது
மலேசிய பொது தேர்தல், 2004
198 / 219
4,420,452 63.9%  51 இடங்கள்; 'ஆளும் கூட்டணி அப்துல்லா அகமது படாவி
மலேசிய பொது தேர்தல், 2008
140 / 222
4,082,411 50.27%  58 இடங்கள்; 'ஆளும் கூட்டணி அப்துல்லா அகமது படாவி
மலேசிய பொது தேர்தல், 2013
133 / 222
5,237,699 47.38%  7 இடங்கள்;;[10] ஆளும் கூட்டணி நஜீப் துன் ரசாக்

2018 மலேசிய நாடாளுமன்றத்தில் பாரிசான் நேசனல் இந்தியப் பிரதிநிதிகள்தொகு

பேராக் மாநிலம்தொகு

மேலும் பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு